Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV                                                                                 கர்மயோகி

776) கொள்ளை, சூறை, போர் மூலம் நாகரீகம் எழுகிறது.

நாகரீகம் வேகமாக முன்னேற்றம் பெறும் நேரம் எதிர்ப்பு இருந்தால் இயற்கை அவற்றை துவம்சம் செய்து முன்னே போகிறது. அதனால் இவை எழுகின்றன.

****

777) மனம் தெளிவு பெறுமுன் பைத்தியம் போன்ற மனநிலை எழும்.

ஆற்றில் வெள்ளம் வந்து தெளியுமுன் தண்ணீர் கலங்கலாக, குழம்பாக வருவதுபோல் மனம் தெளிவு பெறுவதன்முன் கலங்கி நிற்கும்.

****

778) பைத்தியம், குழப்பம், துரோகம், வேதனை, கொடுமை ஆகியவை மனம், உணர்வு, உடல் திருவுருமாற்றமடைய தவிர்க்க முடியாத பாதைகள்.

மாறும் வழிகள் மனம் ஏற்கக் கூடியதில்லை.

மனிதன் திருவுருமாறும் வழிகள் கடுமையானவை. பைத்தியம், குழப்பம், துரோகம், வேதனை, கொடுமை ஆகியவை அம்மார்க்கங்கள். மாட்டுக்கு நோய் வந்தால் அதற்குச் சூடு போடுவதுபோல், முந்தைய நாளில் மனிதனுக்குச் சூடு போட்டு வியாதியைக் குணப்படுத்துவார்கள். கை, கால் ஒடிந்துவிட்டால், வாளால் அறுத்து எடுப்பார்கள். இவற்றை மனிதன் ஏற்க முடியுமா? இதுவேதான் திருவுருமாற்ற வழியா? அன்னையை ஏற்றுக்கொண்டால், மயக்க மருந்து வலியை ஏற்பதுபோல், அன்னை ஜீவியம் நம் வலியை ஏற்கும். நமக்குத் திருவுருமாற்றம் கிடைக்கும்.

****

779) தனக்குத் துரோகமிழைக்கும் சக்திகளை அழைத்து, வேதனை தரும் வாழ்வை ஏற்படுத்தி, அதையே எதிர்கால உலகின் கருவாக அன்னை நியமித்தார்.

யோகத்தை ஆதாயத்திற்காக ஏற்றால், யோகம் துரோகத்தால் நிறைவேறும்.

பள்ளிக்கூடத்தில் பாடம் படிக்க ஆர்வமிருக்கும். பாடம் புரியாவிட்டால் கசப்பாக இருக்கும். பாடம் புரிந்தாலும், கசப்பாக இருந்தாலும் படிப்பு பலன் தரும். யோகத்தை பக்திக்காக இலட்சியமாக ஏற்றால், பலன் அமிர்தமாகும். ஆதாயத்திற்காக ஏற்றால் யோகப் பலன் வரும். வரும் வழிகள் நாம் யோகத்தை ஏற்றதுபோல் அமையும்.

****

780) ஆஸ்ரமத்தை "வேறு காரணத்திற்காக" ஏற்படுத்தினேன் என்று பகவான் கூறும் வேறு காரணம் இதுவே.

பகவான் கூறும் வேறு காரணம்.

ஏன் இலட்சியப் புருஷர்களைச் சேர்த்து ஆசிரமம் ஏற்படுத்தவில்லை என்ற கேள்விக்கு பகவான் கூறிய பதில் இது. ஒரு வீட்டில் படித்த பிள்ளைகள் வேலை கிடைத்தால் வேலைக்குப் போவார்கள். படிக்காதவர்கள் கடை வியாபாரம் செய்வார்கள். கடைசிக் காலத்தில் பார்த்தால் வேலைக்குப் போனவர்களைவிட வியாபாரம் செய்தவர்கள் செல்வர்களாக இருப்பார்கள். படித்த பிள்ளைகட்கு சர்க்கார் வேலை கிடைத்தபின் வியாபாரம் செய் என்றால் செய்யப் போவதில்லை. அவர்களைக் கூப்பிட்டுப் பயனில்லை. பின்னால் பெரும் பலன் பெறத் தகுதியானவர்கள் இப்பொழுது தகுதியற்றவர்களாக இருப்பதுண்டு. அவர்களுடைய எதிர்காலம் இருவகைகளாகவும் அமையும்.

. பெருஞ் செல்வர்களாக வாழ்க்கையை முடிப்பவர்கள்.

. சம்பளமாக மற்றவர் சம்பாதித்ததும் சம்பாதிக்க முடியாமல் வியாபாரம் நஷ்டமாகி நடுத்தெருவில் நிற்பவர்கள்.

****

781) பெருங்குழப்பம், செய்வதறியாது திகைத்த மனநிலை, நம்பிக்கைத் துரோகம், தாள முடியாத மன வேதனை, நோய், மிருகத்தனமான கொடுமை ஆகியவை தவிர்க்க முடியாத திருவுருமாற்றத்தின் தேவைகளாகும்.

தாள முடியாத வேதனை தவிர்க்க முடியாத நிபந்தனை.

அன்னையை ஏற்று பக்தர்களாகவே இருப்பவர்கட்குத் தோல்வியே இல்லை. நிலையான சந்தோஷம் உண்டு. பக்தர் நிலையைக் கடந்து சாதகர் நிலையை ஏற்றால், வெற்றியேயில்லை என்ற நிலை உருவாகும். வேதனை வரும். இது பக்தருடைய தோல்வியில்லை, வேதனையில்லை, உலகத்துத் தோல்வியை உலகத்தின் சார்பாக ஏற்கும் பக்தர், சாதகராகிறார். அவர் பெறும் தொடர்ந்த தோல்வியால் உலகில் தோல்வியே அழியும். அதை ஏற்பவருக்கு அதற்குரிய வேதனையுண்டு.

****

782) The Life Divineஐப் படிக்கும்பொழுது "விசாரத்தைப்" பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளலாம்.

(.ம்.) "ஆதி மனிதனின் ஆர்வமே இன்றும் நம் அபிலாஷையாக இருக்கிறது".

விசாரத்திற்குரிய நூல் The Life Divine.

நூலின் 56 அத்தியாயங்களும் ஒரு தத்துவத்தை விளக்குகின்றன. உதாரணமாக முதல் அத்தியாயம் "முரண்பாடே உடன்பாடு" என்பதைத் தெரிவிக்கிறது. இதுபோக அடிப்படையான பெரிய கருத்துகள் சுமார் 50 முதல் 100 வரை நூல் நமக்குத் தருகிறது. நமது அடிப்படை குடும்ப வாழ்வு. சமூகம் அதன் அஸ்திவாரம். சமூகத்தின் பின்னணியில் உள்ளது வாழ்வு. இவ்வாழ்வு பிரபஞ்சத்தைவிடப் பெரியது என்கிறார். பிரபஞ்சமே அழிந்தாலும், வாழ்வு நிலைக்கும் என்கிறார். இவ்வாழ்வுக்குரிய உண்மைகள் அவை. உதாரணமாக பிரபஞ்சத்தில் அறிவால் காணக்கூடிய உண்மையொன்று உண்டானால், அதை அறியும் திறன் மனிதனில் இருக்கும் என்கிறார். சிந்தனை, ஆராய்ச்சி, விசாரம் தேவைப்பட்டால் அவர்கட்கு சிறந்த அரங்கம் The Life Divine.

தொடரும்...

ஜீவிய மணி

ஜீவன் நீரோட்டத்திற்கு;

உருவம் நீர்க்குமிழிக்கு.


 


 


 


 


 



book | by Dr. Radut