Skip to Content

10. சாவித்ரி

“சாவித்ரி”

P.439  We make of our own enemies our guests.

எதிரியை விரும்பி விருந்தினராக்குகிறோம்.

தான் வகித்த பெரிய பதவியை தன் மகன் வகிக்க விரும்பி மகனுடைய ஜாதகத்தை பிரபல ஜோஸ்யரிடம் கொடுத்தார். இந்த ஜாதகன் பெற்றவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்புவான் என்று கூறினார்.

  • மகள் எனவும் பாராமல் அவள் கணவனை இழந்து 30 நாள் சாப்பிடாமலிருக்கும்பொழுது, அவளிடம் வந்து கணவன் இறந்ததினால் வந்த பணத்தை இனாமாகக் கேட்கும் தாயாரும், தகப்பனாரும் பெற்றோரில்லை. மகளுக்கு அவர்கள் மீதுள்ள பாசம், அவள் செய்யும் சேவை, பாசமில்லை, பாவம், அது சேவையில்லை, தன்னையே அழித்துக்கொள்வதாகும்.
  • மனிதன் நல்லதை நாடவில்லை. தனக்கு ருசிப்பதை நாடுகிறான். எதுவும் ருசிக்கும். மது ருசிப்பதைப்போல், தவறானது ருசிக்கும். எதிரியை விரும்பி நாடுபவன் எதிரியின் பொல்லாத குணத்தைப் போற்றுபவன்.
  • 19ஆம் வயதில் தன்னை வீட்டை விட்டு விரட்டியவர் தகப்பனாரில்லை. அவருக்குரிய கடமை என்று ஒன்று நமக்கில்லை. என்னை வீட்டைவிட்டு விரட்டினாலும் தகப்பனார் தகப்பனாரே என்றவர் தகப்பனார் இறந்தபின், அந்த ஆவிக்குச் செய்த கரும காரியங்கள் அவர் வாழ்வின் சாதனையை அடிமட்டமாக்கின.
  • கணவன் சாகப் பிழைக்கக் கிடக்கிறான் என்று அன்னையை ஒரு ஜெர்மானியப் பெண் அழைத்தாள். இவன் மனைவியைக் கொடுமைப்படுத்தியதால் உயிர் வதைகிறான். கணவன் பிழைத்துக்கொண்டான். முதற்காரியமாக மனைவியை அதிகமாகக் கொடுமைப்படுத்தினான்.

    "உனக்கு நல்லது, கெட்டது என்ற பாகுபாடில்லை'' என்று அன்னை அப்பெண்ணைப் பற்றிக் கூறினார்.

    எதிரியின் கெட்ட குணத்தை மீறி அவனுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது பெருந்தன்மையில்லை, அவன் கெட்ட குணத்தின் மீதுள்ள நம் கெட்ட குணத்தின் பிரியம். நமது நல்ல குணம் நல்லதானால், வலிமையும் பெற்றதானால், நாம் செய்யும் உதவியால் நமக்குக் கெடுதல் வாராது, பெருமைக்காகச் செய்தால் அழிவு வரும்.

    "மனிதா, இந்த அழிவைத் தேடாதே'' என்று அசரீரியாக பகவான் இதுபோன்றவரை எச்சரிக்கிறார். "இந்த அழிவு மலை போன்றது, உனக்குத் தாங்காது'' எனவும் கூறுகிறார்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
திறமைகளை முறையோடு பெற்றவன் (decisions) முடிவுகளை முறைப்படுத்த முன் வந்தால், அது முடிந்து செறிவடையும் தருணம், உடலுழைப்பிலிருந்து, மனத்தின் திறனுக்கு நிலையாக வருவான்.
 
முடிவான சுதந்திரத்தில் முடிவான சித்தி கிடைக்கும்.

*****



book | by Dr. Radut