Skip to Content

08. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. எங்கள் வீட்டில் Suguna jet மோட்டார் kitchenஇல் உள்ளது. வெய்யில் காலத்தில் எப்போதாவது ஒரு தடவை சுற்றிவிட்டு போட்டால்தான் மோட்டார் எடுக்கும். நான் மோட்டார் போட்டுவிட்டு பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டேன். மோட்டார் போட்டபோது கரண்ட் இருந்தது. நான் சென்ற 5 நிமிடத்தில் கரண்ட் நின்றுவிட்டது. மோட்டார் போட்ட விஷயம் மறந்துபோய் 10 நிமிடம் பக்கத்து வீட்டில் நின்றுவிட்டேன். பின்னர் எங்கள் வீட்டிற்கு வந்து பார்த்தால் கரண்ட் ஒயர் எரிந்த துர்நாற்றம் வந்தது. எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. எங்கள் வீட்டில் உள்ள அனைத்து கரண்ட் ஸ்விட்ச் போர்ட் எல்லாம், கிரைண்டர் எல்லாம் பார்க்கிறேன், தெரியவில்லை. அன்னையிடம் பிறகு சொன்னேன். பிறகுதான் எனக்கு மோட்டார் போட்ட ஞாபகம் வந்தது. மோட்டார் இருக்கும் இடத்தில் இருந்து துர்நாற்றம் வந்தது. கரண்ட் நின்று மீண்டும் கரண்ட் வந்தபின் தொடர்ந்து ஓட முடியாமல் supply மட்டும் இருந்து உள்ளது. மோட்டாரைத் தொட சூடாக இருந்தது. மோட்டார் காயில் போய்விட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. உடன் அன்னையிடம் போய் உட்கார்ந்து பிரார்த்தித்துக் கொண்டேன். "மோட்டார் ஒன்றும் ஆகக்கூடாது. நன்றாக மோட்டார் போட்டால் எடுக்க வேண்டும். இது உங்கள் அருளால் நடக்க வேண்டும்" என்று அன்னையிடம் சொல்லிவிட்டேன். என் கணவர் வந்தால், "நீ இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறாய்'' என்று திட்டுவார், என்ன செய்வது? அன்னையிடம் ஒப்படைத்து விட்டு மோட்டார் போட்டேன். எதுவும் ஆகாமல் மோட்டார் எடுத்தது. இது அன்னையின் அருளால் மட்டும்தான் முடியும். நான் அன்னையை மறந்துபோதிலும், unconsciousஆக இருந்தபோதிலும் அன்னை consciousஆக எனக்கு அருள் புரிந்தார்கள். நன்றி தாயே!

என் மாமியார் இறப்புக்குப் பின்னர், அவர்களது நகைகளை அவரது இரு மகள்களுக்கும், இரு மகன்களுக்கும் சேர வேண்டும் என்பது என் மாமியாரின் விருப்பம். நான் மூத்த மாப்பிள்ளை என்பதால் என் மைத்துனர்கள், "அந்த நகைகளை வந்து நீங்கள் எங்கள் நால்வருக்கும் பகிர்ந்து தர வேண்டும்'' என்று கேட்டனர். இந்தச் செய்தி வந்தது முதல் நானும், என் மனைவியும், "அந்த நகைகளை நீங்கள்தான் மதர் வந்து பகிர்ந்து அளிக்க வேண்டும்'' என்று இடைவிடாமல் பிரார்த்தனை செய்தோம். "என் மாமியார் நகைகளைத் தராசு கொண்டு எடை போடாமல்தான் நான் 4 பேருக்கும் தருவேன். நீங்கள் அந்த காரியத்தைச் செய்ய வேண்டும்'' என்று அன்னையிடம் பிரார்த்தித்தோம். என் மாமியார் வீட்டிற்குச் சென்று எல்லோரையும் வைத்துக்கொண்டு, அவரவர்களுக்கும் நகைகளை அன்னையிடம் சமர்ப்பணம் செய்து, பகிர்ந்து கொடுத்து முடித்தேன். என் மூத்த மைத்துனர், "யார் யாருக்கு எவ்வளவு நகைகள் கிடைத்துள்ளன எனத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எடை போட்டு பாருங்கள்" என்றார். எனவே அதையும் அன்னையிடம் சொல்லி, எடை போட்டேன். என் இரு மைத்துனர்களுக்கும் சமமான எடையுள்ள (each 160 gms.) நகைகளும், என் மனைவிக்கும், அவளது சகோதரிக்கும் (அதாவது இரு மகள்களுக்கும்) சமமான எடையுள்ள நகைகளும் (each 140 gms.) கிடைத்தன. எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம். ஆனால் நானும், என் மனைவியும் அன்னை செயல்பட்டதை நினைத்து நன்றி கூறினோம். இது consciousஆக அன்னையை நினைத்து நடந்த ஒரு நிகழ்ச்சி, அருள். அதை அன்னைக்கும், பகவானுக்கும் சமர்ப்பணம் செய்து, நன்றி தெரிவிக்கிறேன்.

*****



book | by Dr. Radut