Skip to Content

05. அன்பர் உரை - அன்பன் பெரிய இடத்துப் பிள்ளை

“அன்பர் உரை”

அன்பன் பெரிய இடத்துப் பிள்ளை

(சென்னை - மாம்பலம் தியானமையத்தில் 12.8.2001 அன்று திருமதி. விஜயா நாராயணன் நிகழ்த்திய உரை).

"யோக வாழ்க்கை '' எனும் நூலில் - பிரம்மம் - என்ற தலைப்பிலுள்ள 14 கருத்துகளின் இரத்தினச் சுருக்கம் கீழ்க்காண்பது.

1
தானே பிரம்மம் எனில் மனம் பிரம்மத்தைத்
தொடும்.
I. 583
2
நம் பார்வையை மாற்றினால் ஜடம்
திருவுருமாறும்
I. 641
3
ஹாம்லெட் எழுதிய பரம்பொருள்
I. 742
4
பரம்பொருளே சிருஷ்டி
I. 764
5
பரம்பொருளும் சிருஷ்டியும் ஒன்றில் மற்றதாக
உறைகின்றன
I. 797
6
நாம் சிருஷ்டியில் பரம்பொருளாக மாறமுடியும்
I. 826
7
ஜடத்திலும் பரம்பொருள் தன்னை வெளிப்படுத்தும்
I. 856
8
பரம்பொருள் உணர்வைத் தொட்டால் லீலை நம் உணர்வுக்குத் தெளிவாகும்
I. 903
9
மனம் பிரம்மத்தையடையும் வழி
II. 2
10
மனிதனின் பிரம்ம விழிப்பு பரம்பொருளை வெளிப்படுத்தும்
II. 3
11
பிரம்மம் பயத்தை அழிக்கும்
II. 161
12
தனித்துப் பொலியும் தெய்வாம்சங்கள் இணைந்து மலர்ந்து மிளிரும் நிலை சத்தியஜீவியம்
II. 175
13
பிரம்மத்திலில்லாதது சிருஷ்டியிலில்லை
II. 949
14
முரண்பாட்டை எழுப்புவது சிருஷ்டியிலுள்ள பிரம்மமாகும்
II. 950

விவசாயியைவிட வியாபாரி வசதியானவன். படித்தவர்கள் செய்யும் தொழில் அதிகப் பலன் தரும். எந்த அம்சமிருந்தாலும் வாழ்வில் முன்னுக்கு வர அது உதவும். மேல்நாட்டார் அதிக முன்னுக்கு வந்துள்ளதற்கு முக்கிய காரணம் படிப்பு. இந்தியர்கட்கு மேல்நாட்டார் பெறாத ஆன்மீக ஞானம் உண்டு. அது வாழ்வில் வெளிப்பட்டால், நாம் மேல்நாட்டாருக்கு சமமாகவும், அதிகமாகவும் முன்னேறலாம்.

பெரிய இடத்துப் பிள்ளைகள் வாழ்க்கையை மேல்மட்டத்தில் ஆரம்பிக்கின்றார்கள். அவர்களுக்கு அதிகமாகப் பலிக்கிறது. அன்பர்கட்கு அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் உண்டு. அதற்கேற்ப அவர்களிருந்தால்,

அன்பர்கள் பெரிய இடத்துப் பிள்ளைகளாவார்கள்.

ஸ்ரீ அரவிந்தர் பிரம்மம் சித்தித்தவர்; விழிப்பில் சித்தித்தவர்; சித்தி உடல்வரை இறங்கியும் சித்தித்தது. ஸ்ரீ அரவிந்தர் ரிஷியில்லை, அவதாரமுமில்லை. அவதாரம் என்பது ஆண்டவனின் அம்சம் மனிதனில் பிறவி எடுப்பது. ஆண்டவனுடைய பகுதி ஸ்ரீ அரவிந்தர் என அன்னை கூறியுள்ளார். ஆண்டவன், 'இது இறைவன் வரும் தருணம்' எனக் கூற புவியில் வந்தது ஸ்ரீ அரவிந்த அவதாரம். அதை நமக்கு ஆன்மீக வாழ்க்கைப் பலனாக அருள வந்தது அன்னையின் அவதாரம். அதன் முக்கிய அம்சம் பிரம்மம். அதுவும், வாழ்வில் வெளிப்படும் பிரம்மம்.

மேற்கண்ட 14 கருத்துகளும் ‘யோக வாழ்க்கை’ எனும் நூலில் நீண்ட வாக்கியமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மனிதன் தானே பிரம்மம் என அறிந்தால், தன் செயல் பிரம்மத்தின் செயல் என அறிந்தால், பிரம்மம் அவன் வாழ்வில் பிரவாகமாக வெளிப்படும். இன்று நம் பார்வை குறுகலானது. பார்வை மாறினால் ஜடம் திருவுருமாறும். 

 
நமது பார்வை
பிரம்மம் வெளிப்படும் பார்வை
1.
வாழ்வுக்கு அளவுண்டு.
அளவற்ற அபரிமிதமானது வாழ்வு.
2.
அதிகமாக ஆசைப்படக்கூடாது.
பேராசை கூடாது, பெரிய ஆர்வம்
அவசியம்.
3.
நாம் சமூகத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்
நாம் சமூகத்தை உருவாக்குகிறோம்.
4.
ஆயுளுக்கு அளவுண்டு.
ஆர்வமாக வாழ்ந்தால், அளவில்லை.
5.
நடைமுறை முக்கியம்.
நம் முறை நடைமுறையை
நிர்ணயிக்கும்.

நமது பார்வை அன்னைக்குரிய பார்வையானால், அதன் மூலம் பிரம்மம் வெளிப்படும். பிரம்மம் வெளிப்பட்டால் கவி, காலத்தைக் கடந்த இலக்கியமாக ஹாம்லெட் போன்ற காவியத்தை எழுதுவான். ‘அதெல்லாம் நம்மால் முடியுமா?’ என்பது பிரம்மத்தை அறியாதவனின் கேள்வி. எதுவும் முடியும் என்று கூறுவது பிரம்ம ஞானம்.

Lady Anna என்பது பிரசித்தி பெற்ற கதை. ஒரு Duke £ 30,000 வருமானமுள்ளவன். இவன் போக்கிரி. அழகான பெண்களைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அயல்நாட்டில் வைத்திருந்து, குழந்தை பிறந்தால் சிறிதளவு பணம் கொடுத்து அனுப்பிவிடுவான். ஜோசபின் என்ற ஏழையான பெரிய இடத்துப் பெண்ணை அதுபோல் நாடுகிறான். திருமணமாக வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். முறையாகத் திருமணம் நடந்து, குழந்தை பிறந்தவுடன், "எனக்கு ஏற்கனவே இத்தாலியில் மனைவி இருப்பதால், இத்திருமணம் செல்லாது'' என்று கேலி செய்கிறான். ஒரு டெய்லர் ஜோசபினுக்கு ஆதரவு தருகிறார். 20 வருஷமாகிறது. Duke எவளோ ஒருத்தியுடன் வருகிறார். அவளுக்குச் சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுகிறார். உயில் எழுதும் சமயம் அவருக்குப் பைத்தியம் என்பதால், உயில் செல்லாது. Dukedom என்பதில் பட்டம், பணம் இரண்டும் சேர்ந்தும் இருக்கும், பிரிந்தும் இருக்கும். இறந்தவர் அண்ணன் மகனுக்குப் பட்டம் போகிறது. அவர் பெயர் பிரெடரிக். அவர், ஜோசபின் திருமணமான மனைவியில்லாததால், சொத்து தனக்குரியது என கேஸ் போடுகிறார். இத்தாலியில் மனைவி இருக்கிறாளா, சொத்து கோரி வருவாளா எனத் தெரியவில்லை. இல்லை என்பது பொதுவான அபிப்பிராயம்.

ஜோசபின் மகள் அன்னா. அவள் Lady Annaவாக ஏழ்மையில் டெய்லர் வீட்டில் வாழ்ந்தவள். டெய்லர் மகன் டேனியலை திருமணம் செய்துகொள்ள முடிவு கொடுத்துவிட்டார். Frederickஇன் வக்கீல் கேஸ் நடத்துவதற்குப் பதிலாக, "ஏன் Annaவும் Frederickக்கும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது?'' என்று கேட்கிறார். இங்கிலாந்தில் மாமன் மகளைக் கட்டிக்கொள்ள மாட்டார்கள். பெரியப்பா மகளைக் கட்டிக் கொள்வார்கள். திருமணம் நடந்தால் கேஸ் இல்லை. பெண்ணும், பிள்ளையும் சந்திக்க ஏற்பாடாகிறது. பெண் தன் முடிவை Frederick இடம் தெரிவித்துவிடுகிறாள்.

முதலில் Frederick ஜோசபின் மனைவியில்லை என நினைத்தவர், பழக ஆரம்பித்தபின் அவர்கட்கு உரிமை உண்டு என்று ஏற்றுக்கொள்கிறார். சொத்து Annaவுக்கும், தாயாருக்கும் வந்துவிட்டது. Frederickக்குப் பணமில்லை, உரிமையில்லை. பட்டத்திற்குரிய தகுதியும், பண்பும், நிதானமும், விவேகமும் அவரிடம் நிறைந்துள்ளன. சட்டப்படி உரிமையில்லாதவருக்கு, சந்தர்ப்பம் கட்டாயப்படுத்தாதபொழுது, நியாயப்படி அவருக்குச் சேர வேண்டியது எதுவுமில்லை என்றபின்,

  • நாடு முழுவதும் அவருக்குச் சொத்து வேண்டும் என விழைகிறது.
  • டேனியல் ‘சொத்தை Frederick எடுத்துக் கொள்ளட்டும்' எனப் பேசுகிறான். "எனக்குப் பெண்தான் வேண்டும்' என்கிறான்.
  • Anna தானே முன்வந்து Frederickக்கு £ 10,000 - வருஷத்திற்கு - தருகிறாள்.
  • பொதுவாக Frederick பணம் பெறுவது சரி என்று அபிப்பிராயம். சொத்து முழுவதும் அவரைச் சேர வேண்டும் என்று நாடு முழுவதும் கருதுகிறது.

ஜோசபின் அதை விரும்பி ஆமோதிக்கின்றாள். முடிவில் Anna டேனியலைத் திருமணம் செய்துகொள்கிறாள். பெரும் பணம் எந்தக் காரணமுமின்றி Frederickக்கு வருகிறது. கதையில் இந்த இடம் இக்கட்டுரைக்குரிய கருத்து. உலகத்திற்கு உரிய சட்டம் ஒன்றுண்டு. தகுதியுள்ளவனை அதிர்ஷ்டம் தேடி வரும். உழைப்பாளி நெடுநாள் உழைத்துப் பெறுவதை அறிவுடைய, அந்தஸ்துள்ள, உயர்ந்தவன் அவன் தகுதிக்காக அதைப் பெறுவான் என்ற சட்டம் இக்கதையில் சிறப்பாக வெளிப்படுகிறது. ஆன்மீகத்தை ஏற்றவர்கள் உயர்ந்தவர்கள். அன்னையை ஏற்பது உசிதம், உன்னதம். ஏற்றவர்க்கு ஏற்கும் தகுதியிருந்தால், எதுவும் அவர்களை நாடி வரும்.

  • காலம் மாறும்பொழுது 150 ஆண்டுப் பலனை, 15 ஆண்டில் தொழில் அதிபர்கள் பெறுகிறார்கள். டாட்டா 150இல் பெற்றதை அம்பாணி 15இல் பெற்றார்.
  • அன்னையைத் தகுதியுடையவர் ஏற்றால், உலகில் எவர் சாதித்ததையும் அன்பர் சாதிப்பார். ஏனெனில் அன்பர்கள் பெரிய இடத்துப் பிள்ளைகள்.
  • எதை அன்பர் நாடினாலும், நாட்டின் உச்சிக்கு அவர் போவார்.
  • பெரிய இடத்துப் பிள்ளைகள் அடிமட்டத்தில் ஆரம்பிப்பது இல்லை.
  • அன்பர்கள் உச்சியில் வாழ்வை முடிப்பார்கள்.

நாம், அன்பர்கள் அப்படி உயர்வதைக் காணவில்லையே என்று நினைக்கலாம். ஆரம்பத்தில் பிரம்மத்தைப் பற்றிக் கூறிய 14 கருத்துகளை விவரமாக "யோக வாழ்க்கை'யில் காணலாம். மேலும் விளக்கங்களை ‘யோக வாழ்க்கை விளக்கம்' என்ற நூலில் காணலாம்.

பரம்பொருளே சிருஷ்டி என்பது ஒரு கருத்து. அன்னையை ஏற்றால் - பொய்யை விலக்கி ஏற்றால் - அன்னை அளிப்பது பரம்பொருள். சிருஷ்டி முழுவதும் அதனுள் அடங்கும். வாழ்வும், அதன் உச்சமும் அதன் பகுதி. பரம்பொருளும், சிருஷ்டியும் ஒன்றில் மற்றதாக உறைகின்றன. அன்னையையும், சமர்ப்பணத்தையும் முன் வைத்துச் செயல்பட்டால், நாம் நடைமுறையில் இவ்வுண்மையைக் காணலாம். V.K.கிருஷ்ணமேனன் சென்னை வந்தபொழுது அவர் நண்பர் ஒருவர், "சிறப்பான இளைஞன் ஒருவன் வேலையில்லாமல் இருக்கிறான். அவனுக்கு உதவ முடியுமா'' எனக் கேட்டார். மேனன் பையனைக் கண்டார். சிறப்பானவன் என்று தெரிந்தது. "என்னுடன் லண்டனுக்கு வா. அங்கு வேலை தருகிறேன்'' என்றார்.

சிறப்பானவனை சிறப்பை அறிபவர் கண்டுகொள்வார்.

நாம் அன்னையை சத்தியவாயிலாக ஏந்திச் செல்வது உண்மையானால், வாழ்வு அதைக் கண்டுகொள்ளும். நம்முள்ளிருந்து பரம்பொருள் வெளிவரும். அது முடிவற்றது, அனந்தமானது, அது தரும் பலனை வாழ்வு அளிக்க முடியாது. "நாம் சிருஷ்டியில் பரம்பொருளாக மாற முடியும்' என்பது அடுத்தது. பகவான் பரம்பொருள் உடலில் சித்தித்தவர். நாம் செய்யும் வேலை நம்மைப் பொருத்தவரை சிருஷ்டி. அச்செயலில் பகவானை வெளிப்படுத்துவது சமர்ப்பணம். சமர்ப்பணமான காரியம் 40,000 ரூபாய் சம்பாதிக்கப் போனால் 40 கோடி சம்பாதிக்கும் என்பதை அன்பர்கள் காண வேண்டும் என்றால், அவர்கள் அன்னை கூறிய ‘Men, Countries, Continents, Truth or the abyss' என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பயம் தோல்வி தரும். அன்னையிடம் வந்தபின் பயந்த சுபாவமுள்ளவர் பயம் குறைந்திருப்பதைக் காணலாம். அன்னையை விலக்கில்லாமல் ஏற்றால், பயம் அறவே நீங்கும். "தெய்வங்களிடையே தனிப்பட்டு பொலியும் அம்சம் சத்தியஜீவியத்தில் இணைந்து மிளிரும்' என்பது அன்பர் அன்னையை ஏற்கும்பொழுது, தெய்வநிலையைக் கடக்கின்றார் என்றாகிறது.

நாம் நம்மைப் பற்றி சிந்திக்கும்பொழுது வெற்றி, தோல்வி கணக்குப் போட்டு ஒரு முடிவுக்கு வருகிறோம். அது, "நமக்கு இவ்வளவுதான். இதற்கு மேல் பேராசை கூடாது. நாம் யார் என்பதை மறந்து, ஒரேயடியாகப் பறக்கவா முடியும்?' என்பன போன்ற முடிவுகட்கு வருவோம். கணக்கு முடிந்த பிறகு அன்னை மிஞ்சும். அது மனத்திற்குத் தெம்பு தரும். அதுவே security. அது நாளுக்கு நாள் உயர்வதும் தெரியும். சில சமயம் எல்லாம் முடிந்தபின் சிறு சந்தோஷம் வரும். மற்ற சமயங்களில் சிறு விரக்தி எழும். நாம் அன்னையை அந்த இடத்தில் சிறு சந்தோஷத்திற்குப் பதிலாக, விரக்திக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம்,

  • 'அந்த இடத்தில்' சந்தோஷம் துள்ளி எழும்.
  • அப்படி எழும் சந்தோஷம் நாளுக்கு நாள் வளரும் (ever increasing).
  • சந்தோஷம் அதிர்ஷ்டத்தை உட்கொண்டது.
  • பரம்பொருள், பிரம்மம் என்பதற்கு வாழ்வில் அதிர்ஷ்டம் எனப் பெயர்.
  • அதிர்ஷ்டம் சித்திப்பது பிரம்மம் சித்திப்பதாகும்.

*****

 



book | by Dr. Radut