Skip to Content

04. சிறு குறிப்புகள் - அதிர்ஷ்டம் வரும் தருணம்

“சிறு குறிப்புகள்”

அதிர்ஷ்டம் வரும் தருணம்

தனி மனிதனுக்கு வரும் அதிர்ஷ்டத்தை நாம் அறிவோம். வியாபாரத்திற்கும், விவசாயத்திற்கும், கல்விக்கும், வீட்டுமனைக்கும் அதிர்ஷ்டம் வரும்.

வாலஸ் என்ற 17 வயது வாலிபருக்கு எந்த வேலையும் நிலையாக இல்லை. நாடு பொருளாதார நெருக்கடியில் மாட்டிக் கொண்ட நேரம். தாம் படித்த பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளைச் சுருக்கி கையிலுள்ள டைரியில் எழுதுவது வாலஸ் பழக்கம். தூங்குமுன் இதை மீண்டும் நினைவுபடுத்தலும் உண்டு. வேலையில்லாத நேரம் அவற்றைப் படிப்பதுண்டு. வேலை போய்விட்டது. தாம் கொஞ்ச நாளாகச் செய்து கொண்டிருந்த வேலையை - பத்திரிகைகளைச் சுருக்கி எழுதும் பழக்கத்தை - ஒரு readers serviceஆகச் செய்ய வாலஸ் பிரியப்பட்டார். பல பத்திரிகைக் கட்டுரைகளைச் சுருக்கி பாக்கட் சைஸ் புத்தகமாக வெளியிடுவது என்பது திட்டம். பல பத்திரிகைக் கம்பனிகளைப் போய்க் கேட்டார். அனைவரும் மறுத்துவிட்டனர். இது விற்காது, இலாபம் வாராது என்றனர். இலாபம் வாராவிட்டாலும் பாதகமில்லை, வெளியிட விரும்புகிறேன் என்றார் வாலஸ். நம்பிக்கையுடன் வாலஸும், அவர் மனைவியும் பத்திரிகையை ஆரம்பித்தனர். வாலஸ் இறந்தபொழுது பத்திரிகைக்கு 3 கோடி சந்தாதாரர்களும், 10 கோடி பிரதியும் விற்றது. அது Readers Digest.

இது சரித்திரம்.

10ஆம் வகுப்பு படித்தவர் எண்ணிக்கை ஒரு கட்டத்தைத் தாண்டும்பொழுது நாட்டில் படிக்கும் நினைவு (itching for reading) கடலலையாக எழுந்த நேரம், அவர்களுடைய ஆர்வத்தின் பிரதிநிதியாக Dewitt Wallace டெவிட் வாலஸ் செயல்பட்டதால் அவர் முயற்சிக்கு சமூகம் முழு ஆதரவு அளித்து, அவருக்குப் பரிசளித்தது.

  • 1920இல் கார் அதுபோல் விற்றது.
  • 1990இல் கம்ப்யூட்டர் அதைப்போன்று விற்க ஆரம்பித்தது.
    இவை வியாபாரத்தில் எழுந்த waves of prosperity அதிர்ஷ்ட அலைகள்.
  • இன்று நர்சரி பள்ளி முதல் மெடிகல் காலேஜ்வரை இந்தியாவில் படிப்புக்கு அதிர்ஷ்டம் வந்துவிட்டது.

சமூகம் முன்னேறும் நேரம், தனி மனிதன் தன் முழு முயற்சியை ஒரு துறையில் முடித்தால், சமூகம் தன் முழுப்பரிசை முன்வந்த மனிதனுக்குத் தருவதால் Readers Digestகோடிக்கணக்காக விற்கிறது. இன்று இந்தியாவில் இதுபோன்ற அதிர்ஷ்டம் எல்லாத் துறைகளிலும் காத்திருக்கிறது. முழு முயற்சி எடுத்து முடிப்பவருக்கு சமூகத்தின் முழுப்பரிசு காத்திருக்கிறது.

மனிதன் முடியுமிடத்தில் அன்னை ஆரம்பிக்கின்றார் என்பது பகவான் வாக்கு. நாடும், விவசாயமும், வியாபாரமும், கல்வியும், தொழிலும் முயற்சியுள்ள மனிதனுக்கு முழுமையான ஆதரவு தர விரும்பும் நேரம், அன்பர்க்கு அற்புதமான நேரம்.

  • எந்த அன்பர் தம் தொழிலில் தம் முயற்சியை முழுமையாக, சிறப்பாக பூர்த்தி செய்கிறாரோ, அவருக்கு அன்னை அருளை அதிர்ஷ்டமாகத் தருகிறார்.

அன்னை வரும் தருணம், அதிர்ஷ்டம் வரும் தருணம்.



book | by Dr. Radut