Skip to Content

03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

“ஸ்ரீ அரவிந்தம்”

லைப் டிவைன்

கர்மயோகி

X. Conscious Force
 
There is one argument against.
We say it is a conscious intelligent source.
Para No.21
Page No. 89
It is for this purposeful work.
It is a work of intelligence, selection, adaptation and
seeking.
That element too is in Nature's operation.
We call that argument waste.
Ours is human intellect.
It is obviously limited.
Human mind is rational.
But its rationality is particular.
It is good enough for human ends.
It applied that rationality to the World-Force.
We see only part of Nature's purpose.
We call the rest waste.
We do so because the rest is not useful.
Our own human action is like that.
It is full of apparent waste.
It is right for the individual.
10. சித் – சக்தி
 
அதற்கெதிரான சொல் ஒன்றுண்டு.
அது அறிவுள்ள, தன்னையறிந்த ஊற்று என்கிறோம்.
ஒரு குறிக்கோளுக்காக வேலை செய்வது எனலாம்.
புத்திசா-த்தனம், தேர்ந்தெடுப்பது, மாற்றிக்கொள்வது,
தேடல் என்பது சேர்ந்த நிலையாகும்.
இயற்கையின் தொழிற்பாட்டில் அனைத்தும் காணப்படுகின்றன.
விரயம் என நாம் அதைக் கூறுகிறோம்.
நம் அறிவு மனித அறிவு.
அதற்கு அளவுண்டு என்பது தெளிவு.
மனித மனம் பகுத்தறியும்.
அதன் பகுத்துணரும் தன்மை குறிப்பானது.
அது மனித இலட்சியங்கட்குப் போதும்.
அதை உலகத்தின் செயலுக்கு உபயோகப்படுத்துகிறது.
நாம் இயற்கையின் நோக்கத்தில் ஒரு பகுதியையே காண்கிறோம்.
மற்றதை விரயம் என்கிறோம்.
மீதி பயன்படவில்லை என்பதால் அப்படிக் கூறுகிறோம்.
மனிதன் செய்யும் காரியங்கள் அத்தகையவை.
பார்வைக்கு ஏராளமான விரயம் தோன்றும்.
தனி மனிதனுக்கு அது சரி.
But it subserves the universal purpose.
We can detect that part of the intention.
Nature gets done enough.
In spite of the waste much gets done.
Perhaps because of the waste much is accomplished.
There is the other part we do not detect.
We may well trust Nature here too.
Let us consider the rest.
Page No.89
Para No.22
Nature has her drive of set purpose.
It is apparantly a blind tendency.
It appears to guide Nature.
This is the characteristic of Nature.
Eventually She comes to the target set.
She does so immediately.
The World-Force operates in the animal.
It does so in the plant.
In inanimate things too it operates.
Matter was the Alpha and Omega to the scientist.
They are reluctant to admit intelligence to Nature.
Nature's intelligence is the mother of intelligence.
It was an honest scruple.
But it is no more so.
Now it is an outworn paradox.
Scientists affirm the emergence of human intelligence.
உலகத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்ய உதவும்.
அக்கருத்தையும் நாம் கண்டுகொள்ள முடியும்.
இயற்கையின் காரியங்கள் முடிகின்றன.
விரயமிருந்தாலும், வேலை நடக்கிறது.
விரயமிருப்பதால் அதிகக் காரியம் முடிகிறது.
நாம் காணாத பகுதியுண்டு.
இங்கு இயற்கையை நாம் நம்பலாம்.
மீதியை ஆராய்வோம்.
இயற்கைக்கு ஏற்பட்ட இலக்குண்டு.
பார்வைக்கு அது குருட்டு நோக்கமாகத் தோன்றும்.
அது இயற்கையை நடத்திச் செல்வதாகத் தெரிகிறது.
இது இயற்கையின் சுயமான இயல்பு.
எப்படி இலக்கை எட்டுகிறது?
உடனேயும் எட்டுகிறது.
உலக சக்திகளை நாம் விலங்கில் காண்கிறோம்.
தாவரத்திலும் அது உண்டு.
ஜடத்திலும் அது செயல்படுகிறது.
விஞ்ஞானிக்கு ஜடமே ஆதியும் அந்தமும்.
இயற்கைக்குப் புத்தியுண்டு என நம்மால் ஏற்க முடியவில்லை.
இயற்கையின் புத்தி, புத்தியின் உற்பத்தி ஸ்தானம்.
இத்தயக்கம் நியாயமானதே.
இனி அப்படியில்லை.
இனி அது நைந்த பழங்கதை.
மனிதனின் புத்தி எழுவதை விஞ்ஞானி வலியுறுத்துகிறான்.
 
They say it emerges out of unconsciousness.
They do so for mastery and consciousness.
They look to blind driving unconsciousness as source.
No form ever existed in unconsciousness.
No substance ever existed in Nature previously.
Man's consciousness is a form of Nature's consciousness.
It is there below mind.
It emerges in Mind.
It shall ascend beyond mind.
The Force that builds the world is a conscious Force.
Existence manifests itself in it.
It is a conscious Being.
Emergence in form is the sole object.
The potentials must have a perfect emergence.
We can rationally conceive it.
The potentials thus manifest in this world.
This is a world of Forms.
 
 
 
The end.
 
 
 
 
 
 
 
 
 
 
*****
அது ஜடத்திலிருந்து எழுவதாக விஞ்ஞானி விளக்கம் தருகிறார்.
ஜீவியத்திற்காகவும், வெற்றி பெறவும் அவர்கள் அதைச் செய்கிறார்கள்.
குருட்டுத்தனமான ஜடமே ஆரம்பம் என்கின்றனர்.
ஜடத்தில் ரூபமில்லை.
இயற்கையில் இதற்கு முன் விஷயமில்லை.
மனித ஜீவியம் இயற்கையின் ஜீவிய ரூபம்.
மனத்திற்குக் கீழும் உள்ளது.
மனத்திலிருந்து உற்பத்தியாகிறது.
மனத்திற்கு மேலேயும் போகிறது.
உலகை சிருஷ்டிக்கும் சித்-சக்தி.
சத் புருஷன் அதனுள் வெளிப்படுகிறான்.
அது தன்னையறிந்த புருஷன்.
ரூபமாக வெளிவருவதே நோக்கம்.
உள்ளேயுள்ளது சிறப்பாக வெளி வரவேண்டும்.
நம் பகுத்தறிவுக்கு அது புரியும்.
உள்ளேயுள்ள வித்து உலகில் வெளிப்பட வேண்டும்.
இது ரூபங்களாலான நோக்கம்.
 
 
முற்றும்.
 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நாலு பேர் எதிரில் உணர்வு தன் உண்மை நிலையை அறிவது, வெட்கம் எனப்படும்.
 
****
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
விட்டுக் கொடுப்பது, சுமுகம், பூரணம், திருவுருமாற்றம் ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் வற்புறுத்தல் குறைந்து சுதந்திரம் எழுகிறது.
முடிவான சுதந்திரத்தில் முடிவான சித்தி கிடைக்கும்.
****



book | by Dr. Radut