Skip to Content

07. பகவானுடைய இதர நூல்கள்

 

"ஆப்பரேஷனில்லாமல் குணம் பெற முடியும்"

     "பல வியாதிகள் ஆப்பரேஷனால் குணமாகின்றன. அவை யூனானி, ஆயுர்வேதமுறைகளில் ஆப்பரேஷனில்லாமல் குணமாகும்" - ஸ்ரீ அரவிந்தர். இது சம்பந்தமாக ஸ்ரீ அரவிந்தர், அன்னை, சாதகர்கள் கூறியவை.

  • மறுத்துப்போன உறுப்புகட்கு மீண்டும் உயிரளிக்கின்றனர்.
  • குறிப்பிட்ட சிகிச்சைகள் பல உண்டு. நாம் அவற்றைப் புறக்கணித்ததால் அவை பயனற்றுப் போயின.
  • ஜோதீந்திர நாத் பானர்ஜி ஒரு சன்னியாசியிடமிருந்து மலடியானவர் கருத்தரிக்கும் மருந்தைப் பெற்றுப் பலனடைந்தார்.
  • 10, 15 ஆண்டு மலடிகள் சீக்கிரம் இம்முறையால் கருத்தரித்தனர்.
  • பத்தியம் மிகக் கண்டிப்பானது.
  • Hydrocele வீக்கத்திற்கும் ஒரு மருந்துண்டு.

அன்னை கூறியது :

  • உடல் நலமாக உள்ளவரை டாக்டருக்கு பீஸ் உண்டு. நலம் தவறினால் டாக்டருக்குப் பீஸ் நிறுத்தப்படும் என சீன முறை ஒன்றுண்டு. வியாதிஸ்தர்கள் இறந்தால் டாக்டர் வீட்டுக் கதவில் ஒரு மார்க் போடப்படும்.
  • நரம்புகளில் ஊசியால் குத்தும் சீனமுறை மிக உயர்ந்தது.

சாதகர் :

  • எந்த முறையும் எல்லா வியாதிகட்கும் மருந்தைக் கண்டுபிடிக்க முடியாது. அது யோகத்தால் மட்டுமே முடியும்.

     ஸ்ரீ அரவிந்தர், "யோகி தன் யோக பலத்தால் வியாதி அழியட்டும் என்றால் அழிந்துவிடும் என்று கூறுகிறீர்களா?" எனக் கேட்டு அனைவரையும் சிரிக்கவைத்தார்.

     உடலில் கட்டி, வடு, மறு, பரு இருந்தால் ஆப்பரேஷன் மூலம் அவற்றை விலக்குகிறோம். மருந்தாலும் கரைக்கின்றனர். எல்லா ஆப்பரேஷன்களும் இப்படி தவிர்க்க முடியாது. பலவற்றைத் தவிர்க்கலாம். அம்முறைகளை நம் நாட்டு முறைகள் அதிகமாகத் தெரிந்திருந்தன. ஆப்பரேஷன் செய்யும் சேவை பெரியது. பிரசவம் தற்சமயம் ஆப்பரேஷனால் அதிகமாக நடக்கிறது. இயற்கையில் எந்த வலியுமின்றி நடக்க வேண்டியது பிரசவம். மனப் பீதியாலும், பிரசவத்தின் தன்மையை அறியாததாலும், பிரசவ வேதனை பிரபலமாகிவிட்டது. வியாதியின் தன்மை தெரிந்தால் அதற்குரிய மருந்தும் தெரியுமிடங்களில் ஆப்பரேஷன் தவிர்க்கப்படும் என்ற கருத்தை யூனானி, ஆயுர்வேத முறைகள் பின்பற்றின என்பது அன்றைய விவாதம்.

....

 



book | by Dr. Radut