Skip to Content

05. அஜெண்டா

 

Vol I P. 38 Renounce pleasure to express Ananda

                 ஆனந்தம் வெளிப்பட சந்தோஷத்தை மறக்க வேண்டும்

     வலியும், சந்தோஷமும் எதிரெதிரானவை என்பது தெளிவு.

     சந்தோஷமும், ஆனந்தமும் எதிரெதிரானவை என்பது புரிவதில்லை.

காவல்காரன் திருடலாம். திருடிப் பெறுவதே அவனுக்குச் சந்தோஷம். அவனுக்குச் சம்பளம் உண்டு. சம்பளம் சப் என்றிருக்கும். திருட்டில் ருசியுண்டு. திருட்டுப் பழக்கமுள்ள காவல்காரனுக்கு வேலை கிடையாது.

     சந்தோஷம் என்பது உணர்வு பெறுவது.

     ஆனந்தம் ஆன்மா உணர்வது.

     வாழ்வில் வலி - சந்தோஷம் - ஆனந்தம் கலந்துள்ளது.

     சிறிய தவற்றை மனம் நாடினால் வலி கிடைக்கும்.

     சிறிய நல்லது சந்தோஷம் தரும்.

     பெரிய நல்லது ஆனந்தம் தரும்.

     தவறில்லை என்றாலும் எந்த நேரமும் சிறிய சௌகரியம் சுலபமாக இருக்கும். அது உடனே வரும். பெரிய நல்லது தற்சமயம் தொந்தரவாக இருக்கும். நாளாவட்டத்தில் பெரும் பலன் தரும். மனம் சிறிய நல்லதைத் தேடும். அது சந்தோஷம்.

  • சந்தோஷம், pleasure, உள்ளவரை ஆனந்தம் உள்ளே வாராது. ஆசையின் சுவடுள்ளவரை ஆனந்தமில்லை என்றார் அன்னை. ஆசை சந்தோஷம் தரும், ஆனந்தம் தாராது.

     பிற்காலத்தில் பெரிய மனிதர்களாக வந்தவர்களைப்பற்றிக் கேள்விப்படுகிறோம்.

"சிறு வயதிலேயே அவன் எங்களோடு விளையாட வரமாட்டான். படம் போட்டுக் கொண்டிருப்பான். இப்பொழுது பெரிய ஆர்டிஸ்டாகிவிட்டான்"."

"கிரிக்கெட் மேட்சுக்கு வாராதவர்கள் ஹாஸ்டலில் எவரும் இல்லை. இவன்மட்டும் வரவில்லை என அன்று கேலி செய்தோம். இன்று பிரபலமான செஸ் விளையாட்டுக்காரனாகிவிட்டான்"."

ஒரு வீட்டில் 7 குழந்தைகளில் 2 பையன்கள், 5 பெண்கள். அக்குழந்தைகளின் தூரத்து உறவினர் செல்வர். அவர் ஒரு பெண்ணுக்கு அத்தனைச் சொத்தையும் கொடுத்தார். ஏன் என எவருக்கும் புரியவில்லை. "சிறு வயதிலேயே அக்குழந்தையை எனக்குப் பிடிக்கும். மற்ற குழந்தைகள் போலிருக்கமாட்டாள்"' என்று பிற்காலத்தில் விளக்கம் வரும்.

  • ‘அன்னையை ஏற்றுக் கொள்' என்று அடிக்கடி கூறுகிறீர்களே, அப்படி என்றால் என்ன? என்று சில சமயங்களில் கேள்வி வரும். ஒருவர் ஐரோப்பா சென்றார். விமானத்திலிருந்து இறங்கியவுடன் ஊர் பேரமைதியாக, அழகாக, ஒழுங்காக இருப்பதைக் கண்டார். ஆனால் உடலெல்லாம் அருவருப்பாக இருந்தது. Lower vital vibration சிறுபிள்ளைத்தனமான, அசிங்கமான உணர்வு உடலில் ஏற்பட்டது. அவர் திரும்பிவந்தபொழுது நம் ஊரிலிருந்து ஆசிரமம், தியானமையம் போனால் என்ன மாறுதல் உண்டோ, அது மேல்நாட்டுக்கும் நமக்கும் உண்டு என்றார். மேல் நாட்டார் நம் நாட்டின் ஆழ்ந்த அழகான உயர்ந்த இனிமையான அமைதியை நாடி நரம்பில் உணர்ந்துவிட்டால் திரும்பிப் போகப் பிரியப்படுவதில்லை.

....



book | by Dr. Radut