Skip to Content

04. சாவித்ரி

P. 17. Or hew the ways of Immortality

அமரத்துவமான சுவர்க்கத்திற்குப் பாதை அமைப்போம்

காயகல்பம், சாகா வரம், மரணமிலாப் பெருவாழ்வு, அமரவாழ்வு என்பவற்றை மனிதன் சாகாமல் என்றும் உடலில் உயிரோடிருப்பான் எனக் கொண்டு இந்திய தவசிகளும், ரிஷிகளும் காயகல்பம் தேடினர். 

வேதம் அமரத்துவம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது

அமரத்துவம் ஆத்மாவுக்கு, உடலுக்கோ, உயிருக்கோ, (ஆவி)யில்லை.

•அமரத்துவத்தின் இரு அம்சங்கள் infinity அனந்தம், universality பிரபஞ்ச முழுவதும் பரவுவது. 

 • அனந்தம் எல்லா நிலைகட்கும் உண்டு. ஜடம், வாழ்வு முதல் சத்வரை அனந்தம் உண்டு. ஆனால் அமரத்துவம் supreme infinityக்கே உரியது. supreme என்பதை “பர” என்று குறிப்பதுண்டு.

  • Universality  பிரபஞ்சம் முழுவதும் பரவுதலும் எல்லா நிலைகட்கும் உண்டு.

அமரத்துவம் Divine universalityக்கேயுண்டு. 

 • ஆன்மா இவையிரண்டையும் - (Supreme infinity, divine universality) உச்சகட்ட அனந்தமும், இறைவனுக்குரிய பிரபஞ்சரூபமும் - பெற்றால் அமரத்துவம் பெறுகிறது என்பது வேதம்.

சாவித்திரி கூறும் அமரத்துவம் உடலில் வாழும் மனிதனுக்குரியது. உலகுக்குப் புதிய கருத்து. சாவித்திரி எமனை வென்று, அழித்து, மரணத்தை அழித்து உலகுக்கு அமரத்துவம் வழங்கவந்தவள். அதைச் சாதித்தாள்.  

இந்தப் பக்கத்திலுள்ள இதர கருத்துகள்: 

 எமனெனும் கருமேகத்துடன் போரிட வந்தவள் சாவித்திரி.

 

மரணம், வீழ்ச்சி, சோகம் ஆன்மாவை நோக்கி உந்தும்.

 

ஆயுதம் தாங்கிய அமரத்துவம் காலத்தின் கிடுக்கிப்பிடியை

 

 சமாளித்தது.

 

 ஜடத்தின் இருளில் வாழ்வின் சிறு போராட்டம்.

 

 தம் வலுவே எதிர்ப்புக்கு அளவுகோல்.

 

தெய்வீக அம்சங்களைத் தாக்கினான்

ஆர்வம் நிறைந்த மனித இதயத்திற்கு அவளிதயம் துணை நின்றது.

 

விதியின் திரையில் விளையாடும் உருவம்.

 

தெய்வீக விளையாட்டின் வெற்றியும், தோல்வியும்.

****

 

  ஸ்ரீ அரவிந்த சுடர்  

வலிமை பிறப்போடு வருகிறது. அல்லது அனுபவத்தால் வருகிறது. அவ்வலிமையை வேறு வகையாகவும் பெறலாம். அடிப்படையில் வலிமையும், எளிமையும் ஒன்றே என்றறிந்தால், இரண்டும் 'பிரம்மம்' என்று உணர்ந்தால், வலிமை வரும்.

 

வலிமையான பிரம்மம் எளிமையாகவுமிருக்கும்.

 

 

   



book | by Dr. Radut