Skip to Content

12.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

 

தம்பி - Rapid opening of book ஒரு புத்தகத்தை திறந்து பார்த்தால் அது நமக்குரிய கருத்தைச் சொல்வதை செய்து பார்த்தேன்.

அண்ணன் - அன்னை அதற்குரிய நிபந்தனைகளைக் கூறியதைப் படித்திருக்கிறாயல்லவா?

  1.  அமைதியான மனம்.

  2. கூர்மையான கத்திபோன்ற கருவியால் புத்தகத்தைப் பிரிக்க வேண்டும்.

  3. புத்தகம் அதற்கேற்ப அமைய வேண்டும். அதாவது கதை, கட்டுரை போலில்லாமல் பல சுருக்கமான கருத்துகள் அடங்கியதாக இருக்கவேண்டும்.

தம்பி - சாவித்திரி நமக்குரியதை துல்யமாகக் கூறும். அது சமயத்தில் புரியவில்லை என்பதால் புதியதாக வெளிவந்த செய்திகள் நிறைந்த புத்தகத்தை நான் பயன்படுத்துகிறேன். இதில் தமிழில் எழுதியிருக்கிறது. தனித்தனி செய்தியாக இருப்பது சௌகரியமாக இருக்கிறது. இன்று மையத்திலிருந்து சமாதி புஷ்பம் எடுத்துவர வேண்டியவர் வரவில்லை. வேறு வேலையிருப்பதாகச் சொன்னார். இந்த புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்.

அருளை நாம் அறியவில்லை. பிரசாதத்தின் பெருமை தெரிவதில்லைஅருள் நம்மைத் தேடிவரும்பொழுது பிரசாதத்தை நாம் புறக்கணிப்பது வாய்ப்பை இழப்பது எனத் தெரியவில்லை.”

என்றிருந்தது. புத்தகம் பிரசாதத்தைப் பற்றியே பேசுவது ஆச்சரியமாக இருந்தது. எனக்குப் படித்ததைச் சுருக்கமாகச் சொல்ல முடியவில்லை. ‘செய்தி’ நான் படித்தது மிகவும் தெளிவாகப் பொருத்தமாக இருந்தது.

அண்ணன் - அருள் பிரவாகமாக இருக்கிறது. நமக்குத் தெளிவு போதாது. நான் கோடி வீட்டிற்குப் போயிருந்தேன். அது வசதியில்லாத வீடு. ஒரே நாற்காலியிருந்தது. எப்படி இருவர் உட்காருவது, நின்று கொண்டே பேசிவிட்டு வந்துவிட்டேன். மறுநாள் மையம் வந்திருந்தார் அவர். வீட்டில் உட்காரவும் வசதியில்லை என்றார். அருகிருந்தவர் ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? ஒரு நாற்காலி என்ன 10 வரும் என்றார். இது போன வருஷச் செய்தி. இப்பொழுது எப்படி வந்தது எனத் தெரியவில்லை. அவர் வீட்டில் சரியாக 10 நாற்காலிகள் உண்டு. சில cushion போட்ட sofa போலிருக்கிறது.

தம்பி - மையத்தில் பேசினாரல்லவா? சூழல் சக்தி வாய்ந்தது. சொல் பத்துவிட்டது. அருள் பிரவாகமாக இருப்பது உண்மைதான். நம் தெரு பள்ளியில் வேலை செய்யும் ஆயாவுக்கு அன்னை மீது நம்பிக்கை அதிகம். அதன் அனுபவம் ஆச்சரியமானது. சம்பளம் ரூ.400/-எப்படி குடும்பம் நடத்துவது? 1 கிராம் பவுனில் செயின் வாங்க ஆசை! அந்த ஆசையால் செயின் கழுத்தை அரிக்க ஆரம்பித்தது. ஓகோ! ஆசை தப்பு என்று புரிந்து மனம் அடங்கியது. ஒரு 10 நாளுக்குள் அந்த பள்ளிக்கூட முதலாளி வீட்டில் வந்து 2 நாள் வேலை செய்யச் சொன்னார்கள். வேலையைப் பார்த்து சந்தோஷப்பட்டு அவர் மாமியார்  2 1/2  பவுன் செயின்

செய்து கொடுத்துவிட்டு, “உனக்கு பணம் கிடைக்கும்பொழுது விலையைக் கொடு” என்றார். அது 8500ரூபாய், எப்படி ரூ.400 சம்பளத்தில் என்ன செய்வது? அன்னை விட்ட வழி எனச் செயினை வாங்கி வந்தார். தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு tour வருபவர்கள் அதிகமாயிற்று. போகும்பொழுது ஆயாவுக்கு ஏதாவது கொடுப்பார்கள். சம்பளத்திற்குச் சமமாக இது வர ஆரம்பித்தது. பெரிய பணக்கார அம்மா வந்தார். அவர் ரூ.2000 கொடுத்தார். அதன்பிறகு 2 பேர் ரூ.50+0, ரூ.1000 எனக் கொடுத்தார்கள். அந்த 1 வருஷத்தில் ரூ.7000 சேர்ந்துவிட்டது! ஆயாவுக்கு எதுவுமே புரியவில்லை. நான் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாது. சொன்னால் எது எப்படிப் போகும் என பயமாக இருக்கிறது. மதர் பெரிசு, மதர் மதர்தான், என் வாழ்வில் இதுபோல் நடந்ததேயில்லை” என்று என்னிடம் அந்தரங்கமாகச் சொல்லிப் பரவசப்பட்டார். ரூ.400 சம்பளம், மேல் காசு ரூ.7000 எப்படி நம்புவது?

அண்ணன் - அன்னை செய்வது ஏதாவது நம்ப முடியும் காரியமாக இருக்கிறதா? எல்லாமே கதையில் படிப்பதுபோல் தானிருக்கிறது. அன்னை என்பது என்ன என நாமறியவில்லை.

தம்பி - பிரம்மா, சிவன், விஷ்ணு, இந்திரன், லக்ஷ்மி, சரஸ்வதி, முருகன், விநாயகர், ஆத்மா (Self), புருஷன், ஈஸ்வரன் இவைகட்குள்ள வேறுபாட்டை விளக்கி, அதன் பிறகு அன்னை என்பதை விளக்கினால் புரியும்.

அண்ணன் - நீ கூறிய அத்தனை கடவுள்களும் தெய்வலோகத்திற்கு overmind-க்கு உரியவர்கள். இவர்களுடைய ஆதி சத்திய ஜீவியம். இத்தனை கடவுள்களும் மனத்தின் வகையைச் சார்ந்தவர்கள். அளவு பூமி அளவானாலும், சக்தி பெரியதாகவும், மனித குணம் ஓரளவுண்டு. கோபம், போட்டி போன்றவையும் உண்டு.

இந்திய ரிஷிகள் பிரம்மம் எனக் கூறுவது க்ஷர பிரம்மம், அக்ஷர பிரம்மம் என்பவையாகும். கீதை அடுத்த கட்டத்தில் புருஷோத்தமனைப் பற்றிக் கூறுகிறது. க்ஷர, அக்ஷர பிரம்மங்கள் புருஷோத்தமனில் அடக்கம். அன்னையின் பிறப்பிடம் ‘சித்'. சத் என்பதை ஸ்ரீ அரவிந்தர் self conscious being என்கிறார். அதுவே மூன்றாகப் பிரிந்து தெரிகிறது. பிரம்மம்(Absolute) என்பது சிருஷ்டிக்கு அப்பாற்பட்டது. பிரம்மம் self என்பது உலகுக்கு அப்பாற்பட்டதேயானாலும், சிருஷ்டிக்குட்பட்டது. அன்னை இவற்றிற்கு அப்பாற்பட்டவர்.

 

 

தொடரும்.....

 

 

 



book | by Dr. Radut