Skip to Content

11. Consultancy

  பாரிஸ் கம்ப்யூட்டர் கம்பனி"

     கம்ப்யூட்டரின் பெருமையை உலகம் - இந்தியஉலகம் - முழுவதும் அறியாத நேரம். கம்ப்யூட்டர் புது உலகக் கருவியாக - an evolutionary instrument - நம்மிடையே இருக்கிறது என்பதை உலகம் அறியாது. அதன் அபாரத் திறமைகளை உலகம் அளவுகடந்து அறியும்.உலகமக்களை உய்விக்க அவதாரப் புருஷர்கள் வந்தனர். மின்சாரம் உலகில் பெருகியபொழுது லெனின், ‘மின்சாரம் + சோவியத் = சுபிட்சம்’ என்று சூத்திரம் எழுதினார். ரயில்வே முதலில் போடப்பட்ட பொழுது 60 தலை முறைகளில் dukes, lords knights பெருநிலச்சுவான்தார்கள் சம்பாதித்ததை ஒரு ரயில்வே காண்ட்ராக்டர் 20 ஆண்டுகளில் சம்பாதித்தார். நாம் காண்பது வருமானம். ரயில்வே சமூகத்தையே புரட்சிகரமாக மாற்றியது.

இன்று கம்ப்யூட்டர் டெக்னாலஜிகல் அவதாரம்

என்பதை இந்தியாவில் இன்றும் சர்க்கார் உணரவில்லை. சொஸைட்டி சார்பாக மத்திய சர்க்கார் அதிகாரிகளைச் சந்தித்து 15, 20 ஆண்டுகட்கு முன் இதை எடுத்துச் சொல்லவும், கம்ப்யூட்டர் தொழிலை நாட்டில் பிரபலமாக்கவும் நாம் ஆர்வம் கொண்டோம். சர்க்கார் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டது. சர்க்காரின் அனுமதியுடன் உலகில் சில கம்ப்யூட்டர் கம்பனிகளைப் பார்த்து, இந்தியாவில் என்ன செய்யமுடியும் என்று விசாரிக்க முனைந்தோம்.

வேறு வேலைகள் இருந்ததால் அன்பர் 4, 5 நாடுகட்கும் போக வேண்டியிருந்தது அன்பர் டிக்கட்டைப் பார்த்தவர் 34  இடங்களுக்குப் போவதைக் கண்டு வியந்தார்.

பிரயாணம் அலுப்பு தரும்.

நாம் மேற்கொண்ட வேலைகளைச் செய்யத் தேவையான சக்தி உடலாலோ, மனத்தாலோ தரமுடியாத சக்தி.

வேலை ஆன்மீக வேலை என்பதால் ஆன்மீக சக்தி தேவை. அதற்கு ஓரிடமாக உட்கார்ந்து தியானம் செய்ய வேண்டும். பிரயாணத்தில் அந்த சக்தியைப் பெற முடியாது.

பாரிசில் ஒரு பெரிய கம்பனி Vice Presidentஅன்பரை சந்திக்க ஒத்துக் கொண்டார்.

      அன்பர் அக்கட்டடத்திற்கு வரும்பொழுது உடல் தளர்ந்து, உள்ளம் சோர்ந்து, கண் பூத்து, தலை சுற்றும் நிலையில் வந்தார். இன்னும் 1 ½ மணி நேரத்தில் ஒரு பெரிய மனிதனைப் பார்த்து பெரிய விஷயம் பேசவேண்டும். கிடைக்காத appointment மீட்டிங் கிடைத்தது. என்ன செய்வது? Management சட்டம் என்ன சொல்கிறது? உடலாலும், உள்ளத்தாலும் முடியாவிட்டால், அதைக் கடந்தால் முடியும். Management சட்டம் முடியாதது இல்லை என்று கூறுகிறது. அன்பர் முடியாதவற்றைக் கடந்து, முடியும் என்ற ஆழத்தை அடைந்து அன்னையைக் கூப்பிட்டார். காற்றடைத்த டயர்போல நெஞ்சும், உடலும் தெம்பால் பூரித்தன. இனி 10 டன் சுமையை லாரி இழுக்கும்.

 அன்பருள்ளிருந்து சக்தி அபரிமிதமாகப் பொங்கி எழுந்தது.

 

                                                                    *****

 



book | by Dr. Radut