Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

கஷ்டம் ஆசையாக இருப்பதால் மனிதன் கஷ்டத்தை உற்பத்தி செய்கிறான்

Volume 8, page 65

  • நம் இன்றைய மனநிலைக்கு இது எதிரான கருத்து.
  • உள் மனம், ஆழ் மனம் ஓரளவு தெரிந்தவர்க்கு இந்த உண்மை ஓரளவு விளங்கும்.
  • பெரும் இலாபம் மனத்திற்கு இதமானது.
    பெரும் நஷ்டம் ஆழ் மனத்திற்கு இதமானது.
    ஆழ் மனம் நாடுவது பெரும் இன்பம்.
    பெரு இன்பம் மேல் மனத்திற்குப் பெரிய துன்பமாகத் தெரியும்.
    ஆழ் மனம் மேல் மனத்தைக் கட்டாயப்படுத்தி பெரும் துன்பத்தை நாடச் செய்து, அதனடியில் உள்ள பெரு இன்பத்தை அனுபவிக்கிறது.
    இது ஆன்மிக உண்மை, அர்ஜூனனை கிருஷ்ண பரமாத்மா கட்டாயப்படுத்தியது.
    திரௌபதியை இந்தியாவில் எல்லா கிராமங்களும் ஆயிரமாயிரமாண்டாக வழிபடுதலுக்கு அஸ்திவாரமாக அமைந்தது சபையில் அவள் எழுப்பிய அபயக்குரல்.
    அவள் மானம் பறிபோகும் நிலையில் மேல் மனம் அதை துரதிர்ஷ்டமாகக் காண்கிறது.
    ஆழ் மனம் அதுவே அவள் அழியாப்புகழ் பெறும் வழியெ அறிகிறது.
  • பரமாத்மாவின் பரம பக்தையானதால் அவள் பாரத யுத்தத்தை ஜெயித்தாள்.
  • ‘அனைவர் ஆத்மாவையும் நான் ஏற்கனவே கொன்று விட்டேன். நீ அவர் உடலையே சாகடிக்க வேண்டும்’ எனக் கிருஷ்ணன் அர்ஜூனனிடம் கூறினார்.
  • பாண்டவர் கிருஷ்ணனைத் திரௌபதி அழைத்தது போல் அழைக்கவில்லை.
  • கிருஷ்ணன் உடனிருந்தாலும் ஆத்மாவின் அழைப்புக்கே அவன் தெய்வாம்சம் வெளிப்படும்.
  • அதைச் செய்தவள் திரௌபதி.
  • திரௌபதிக்குச் சேலை வளர்ந்த நேரம் யுத்தம் வெல்லப்பட்டது.
  • ‘ஆண்டவன் அவர் கையால் என்னை அடித்தபொழுது மீண்டும் அதைச் செய்ய வேண்டாம் என நான் கூறலாமா? ஆண்டவன் என்னைத் தீண்டியதை அறிவதா? அடித்தார் என அறிவதா? மீண்டும் மீண்டும் அதைச் செய்ய என் நெஞ்சம் குரலெழுப்பாதா?’ என்பது ஆழ் மனத்தைக் கடந்த ஆத்ம ஞானம்.
  • இதைச் சூட்சுமமாக அறிந்த மனிதன் வாழ்வில் பிரச்சனைகளை, சிக்கல்களை, சிரமங்களை, விரும்பி எழுப்புகிறான் என அன்னை கூறுகிறார்.
  • உலகம் இருளில்லை, தீமையில்லை என்பதின் மறுபுறம் இச்சொல்.
  • ஆத்ம நிலையை அறிவது ஆழ்மனம்.
  • கண்ணுக்குத் தெரிவது சிறியது, தவறு, கஷ்டம். கண்ணுக்குத் தெரியாதது பெரியது, சரி, இன்பம்.
  • எந்த நேரமும் ஆண்டவன் பேரின்பம் அனுபவிக்கும் உலகில் மனிதன் காண்பது துன்பம்.
  • பார்வைக்குத் துன்பம். அது பவித்திரமான இன்பம்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்னை அன்பன் அன்னையை அறிந்து, ஆன்மவிழிப்பால் அன்னையை நம்பி, யோகத்தை நாடாமல், வாழ்வு பூரணம் பெற முயன்றால், யோகம் வாழ்வை விளக்கும்.

********



book | by Dr. Radut