Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 174: Arriving at a large and shadowy sense

கலங்கிய புலணுணர்வை முயன்று அடைந்து

  • தற்செயலான தன் செயலை விளக்க முனையாது
  • விநோதப் புதிரில் வேலை செய்யும் வாழ்வு
  • இனிய பெருமையுடைய சூரியனை இழந்து
  • கற்பனை உலகில், இதுவரை உண்மையைக் கண்டறியாத உலகில்
  • சிருஷ்டியின் எல்லையில் தயங்கி மின்னும் ஒளி
  • வழிதவறி வந்து, கனவு கண்டு, தடையின்றி சாதனை செய்து
  • சாதனை அழிக்கும் மாய லோகக் காலம்
  • மங்கிய மாலை நேர வியக்கும் அற்புதங்கள்
  • பெருமையாக விளங்கும், அழகு நிறை விநோதம்
  • கற்பனையுலகில் நிறைவு காணும் கனத்த பெருவெள்ளம்
  • முத்திரையிட்டு மூடிய மங்கிய சிறு அடையாளங்கள்
  • கண்ணைக் கவரும் ஆசை எழுந்து பெறும் தீவிரம்
  • கவர்ந்த எண்ணம் கட்டாயத்தை எதிர்கொண்டது
  • இதயத்தைக் கவர்ந்தது, முடிவை எட்ட முடியவில்லை
  • பெருநிறைக் காட்சிகள் மந்திரமாக எழுந்தோடின
  • பறந்து மறையும் மென்மை கொஞ்சம் தொடர்ந்து வந்தது
  • உயர்ந்த கலையின் ஓரங்கள் பயனின்றி ஒதுங்கின
  • உயர்ந்த நறுமண ஒளியில் கனவே கோலாக
  • நிலையற்ற வெள்ளிப் பின்னணியில்
  • உதய நேரம் எழும் இளம் சொர்க்க ஜோதி
  • பெரும் தீ எழுந்து பொறியெழுப்ப மறுத்து
  • விடியலைக் கூறும் தவழும் தென்றல்
  • கவரும் குறையை கருத்திலமைத்து நாடி
  • ஒளியால் பிடிபட்டு அறியாமைப் பொறியிலகப்பட்டு
  • தெய்வலோக ஜீவன்கள் உடலால் உந்தப்பட்டு
  • தெரியாத சிறகை அடித்து, இலட்சிய லோகத்தை நாடி
  • சிறு வாழ்வின் மகிழ்வை பெருவேகமாக நாடி
  • சிருஷ்டிக்கப்பட்ட மண்ணில் பாதம் படமுடியாத தெய்வம்
  • அழிபவற்றை அணைத்து அதன் வாழ்வில் பங்கு கொண்டு
  • உடலற்ற பிரகாசம் பெற்றெடுத்த பிண்டங்கள்
  • உருவமற்ற ஆன்மாவில் உதித்தெழுந்தது போல்
  • அழியாத ஆசை ஆர்வமாக விரட்ட
  • பார்வை பரவும் பல இடங்களிலும் நடந்து
  • முயற்சியற்ற உறுதி தவறியது, இங்கு பலித்தது
  • வாழ்வு பெரும் ஆராய்ச்சி, முடிவு காணவில்லை

*********

ஜீவிய மணி

எந்த நிலையிலும் அழைப்பு அடுத்த நிலைக்கு அழைத்துப் போகும்.

*********



book | by Dr. Radut