Skip to Content

2. கனமான எழுத்து

கனமான எழுத்து

The Life Divine கனத்த கருத்தை சுமந்து வரும் செறிந்த எழுத்து. அன்பரல்லாத குடும்பத்து எளிய சூழலில் ஒருவர் The Life Divine-ஐ டைப் அடிக்க முயன்றால் கரண்ட் நின்று விடும். கரண்ட் வந்த பின்னர் அடிக்கலாம் என்று எதிர்பார்க்கும்வரை கரண்ட் வாராது. டைப் செய்ய வேண்டாம் என நினைத்தால் உடனே கரண்ட் வரும். 7-ஆம் மடம் காலியானவர் தரித்திரம் அவர் குடும்பத்தை அழிக்கும். போகுமிடமெல்லாம் அதையே செய்யும். அவரிடம் The Life Divine-ஐப் பற்றிப் பேச ஆரம்பித்தால் தெருவில் விபத்து நடக்கும். அடுப்பங்கரையில் துணி பற்றி எரியும். அன்பரிடம் The Life Divine-ஐ அடிக்கச் சொன்னால் தினமும் 1 மணி டைப் செய்ய முடிவு செய்தால், தினமும் 3 மணி power cut 2 மணியாகக் குறையும். தொடர்ந்து டைப் செய்தால் 1 மணியாகி முடிவாக power cut விலகும். அருளை பவர் ஏற்றால் power cut போகும்.

  • அருளை மனம் ஏற்றால் முகம் பிரகாசமாகும்.
  • உடல் ஏற்றால் உடல் புளகாங்கிதமடையும்.
  • குடும்பம் ஏற்றால் சுமுகம் பெருகும்.
  • ஆத்மா ஏற்றால் The Life Divine புரியும்.
  • ஏற்பவர் ஏற்றமடைவர்.

*******



book | by Dr. Radut