Skip to Content

1. இனிமையான மறுப்பு வெறுப்பான உதவி

இனிமையான மறுப்பு

வெறுப்பான உதவி

இனிமையாக இல்லை என்பவர்க்கு நல்ல பெயர். உதவியைச் செய்யும்பொழுது வெறுப்பாக நடப்பவருக்குக் கெட்ட பெயர். நாளாவட்டத்தில் உலகம் நல்லவரைநல்லவர் எனவும், கெட்டவரை கெட்டவர் எனவும் பிரித்து அறியும்.

  • உள்ளம் நெகிழ்ந்த அளவு பழக்கம் பக்குவமாகாதது ஒருநிலை.
  • உயர்ந்த பழக்கமும், தாழ்ந்த உள்ளமும் அரிபொருளாகச் சேர்ந்திருக்கும்.
  • உள்ளம் நெகிழ, செல்வம் வளமாக இருக்க வேண்டும்.
  • பழக்கம் பக்குவமாக பரம்பரை பண்புடையதாக இருக்க வேண்டும்.
  • செல்வம், குடும்பம், பண்பு, பாரம்பரியம் விரும்பத்தக்கது.
  • படிப்பில்லாத பணம், பணமில்லாத மனம், எதுவுமில்லாத இனிமை சகஜம்.
  • அன்பருக்கு எது இல்லையென்றாலும் எது வேண்டுமென்றாலும் அன்னையிடம் கேட்டுப் பெறலாம் எனத் தோன்றுவது அரிது. தோன்றினால், கேட்டால் பெறலாம்.
  • உலகம் 100 ஆண்டில் 5 தலைமுறைகளில் பெறுவதை அன்பர் 100 மாதத்தில் 100 நாளில் பெறலாம்.
  • கேட்கத் தோன்றாது, பெறத் தோன்றாது. தோன்றினால் செய்ய மாட்டார்கள். தோன்றி, கேட்டு, செய்தால், வரும் பலன் சிறு முயற்சிக்குண்டு.

*******



book | by Dr. Radut