Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

உடலின் சுபாவம் உயிரற்ற ஜீவனின் பேரமைதி

  • பகவான் உலகுக்கு அளித்த ஆன்மீக ஞானம், யோக ஞானம் ஆகியவை பெரியவை.
  • அன்னை பகவானை முதலில் சந்தித்தபொழுது கீதை யோகத்தை அவர் முடித்திருந்தார்.
  • பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை சரியாக எழுதப்படவில்லை.
  • ஓர் இந்தியர் அன்னையிடம் அதைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது 1914க்கு முன்.
  • இறைவன் நெஞ்சிலிருக்கிறான் என்பதை கீதை கூறுகிறது.
  • அதை அறிந்த அன்னை சூறாவளியாக உள்ளே சென்றார்.
  • ஓர் ஆண்டில் இறைவனை உள்ளே கண்டார்.
  • அந்த நாளில் பாரிசில் அன்னை Cosmos என்ற குழுவில் தியானம் செய்வதுண்டு.
  • தியானத்தில் ஓர் ஆசியரைக் கண்டார். மீண்டும் மீண்டும் கண்டார்.
  • அவர் கரிய நிறமானவர். அவரை அன்னை "கிருஷ்ணா" எனக் குறிப்பிட்டார்.
  • தியோனை முதலில் சந்தித்தபொழுது அவரையே "கிருஷ்ணா" என நினைத்தார்.
  • வாழ்வின் மந்திரத்தைக் கண்டபொழுது தன் "கிருஷ்ணா" தியோனில்லை எனக் கண்டார்.
  • பகவானை மாடிப்படியில் முதலில் கண்டபொழுது "இவரே என் கிருஷ்ணா" என அறிந்தார்.
  • அன்னை வந்த புதிதில் miracles ஆச்சரியமான நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்தன.
  • அவை தெய்வீகமான சக்தி. அதனால் உலகம் திருவுருமாறாது என பகவான் அதைக் கைவிட்டார்.
  • பகவான் யோகத்தை ஆன்மீக உலகில் பின்பற்றினார்.
  • அன்னை யோகத்தை சூட்சும உலகில் அறிவார்.
  • பகவானுக்கு சூட்சும உலகம் அன்னைபோல் பரிச்சயமில்லை.
  • அந்த ஞானம் அன்னைக்கு அளவு கடந்துண்டு.
    • தன் உடலை விட்டு மீண்டும் மீண்டும் 12 முறை வெளி வந்தார்.
    • அவ்வுடலின் மீது சூரியனும், அதன் மீது சந்திரனும் உண்டு.
    • ஜடம் தன்னை மனம் கொடுமைப்படுத்தி அலட்சியம் செய்வதை சட்டமாக எதிர்பார்க்கிறது, எரிச்சல்படுவதில்லை.
    • பெண்கள் யோகத்திற்குப் பெரும் தகுதியுள்ளவர்.
    • மரம், செடி, கொடி, பூனை, எறும்பு பேசுவது அன்னைக்குப் புரியும்.
    • உடலுக்குரிய உணர்வுகள் ஏராளம். யோகம் அதை வெளிப்படுத்துவதில்லை.
    • சூட்சுமம் அந்த ஞானத்தைக் கொடுக்கும்.
    • உடல் காய்கறி போன்றது. உயிர் மரம்போல் எளிதில் போகாது.
      Coma என நாம் கூறுவது மயக்கம். அந்நிலையில் உடலின் பேரறிவு வெளிப்படும்.
      கால் கட்டை விரலை அசைத்தால் ஆப்பரேஷனான சிறுநீரகம் வேலை செய்யும்.
      மனித உயிர் க்ஷணத்தில் பிரியும். மரம் மரணத்தை மெதுவாக ஏற்கும்.
      உடலுக்கு மரத்தின் தன்மையுண்டு.
      அதை vegetative serenity மரம் போன்ற மகத்துவம் என்கிறார்.
      Hostile beings தீய சக்திகளும் என் குழந்தைகளல்லவா என்கிறார் அன்னை.
      பகவானுக்கு அன்னை 59 வருஷம் கூறிய நன்றியறிதல் அதுபோன்ற உள்ளுணர்விலிருந்து எழுவது.

********

ஜீவிய மணி
 
நம் சக்தி அனைத்தும் செயலில் செலவானால் நம்மால்
நம்மை பாராட்ட இயலாது.
நாம் அதை மறப்போம்.
நாம் மறந்ததை உலகம் ஏற்கும்.
 

 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மௌனம் கலையாமல் செய்யும் செயல்
மௌனத்தின் பின்னுள்ள மௌனத்தை எழுப்பும்.
 
 
 
*******

 



book | by Dr. Radut