Skip to Content

08. அஜெண்டா

அஜெண்டா

Pg.306 Vol. V

Before the first Man was born Mother's memory could go. There was direct power over Matter

அன்னையின் நினைவு மனிதன் பிறப்பதற்கு முன் சென்றது. ஜடம் நம் செயலுக்குட்பட்டது.

  • ஒரு பொருளை நகர்த்த நாம் செயல்பட்டு நகர்த்துகிறோம்.
    நினைவே நகர்த்தினால் ஜடம் நம் செயலுக்குட்பட்டதாகும்.
  • நினைவு பிறப்பதற்கு முன்னும், இறப்பிற்குப் பின்னும் இருப்பதில்லை.
  • பிறப்பதற்கு முன்னுள்ள நினைவை பூர்வஜென்ம ஞாபகம் என்கிறோம்.
  • யோகத்தில் அது பலிப்பதுண்டு.
  • நமது ஸ்தாபனத்திற்கு முதல்வரோ, பிரதமரோ ஒரு விழாவுக்கு வரலாம். அது யோகம் பலிப்பதைப் போல. என்றும் பிரதமர் நம் ஸ்தாபனத்திற்கு வருவது என்பது அன்னை பெற்ற பூர்வஜென்ம ஞாபகம்.
  • கம்பன் கவிதையை நாம் மனப்பாடம் செய்து சொல்வது முடியும்.
  • நாமே கவிதை எழுதுவது, நாமே கம்பன் போன்ற கவியாவது.
  • அன்னைக்குப் பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது அன்னையே ஞாபகத்தை ஏற்படுத்திய இறைவனாவது.
  • நிலம் பயிராவது விவசாயம். இயற்கை உற்பத்தி செய்ததை மனிதன் உற்பத்தி செய்கிறான்.
  • நிலத்தின் சத்தை அறிந்து உரமிட்டால் ஏராளமாகப் பயிராகிறது. நிலம் மனித அறிவால் செயல்படுவது இது.
  • மாமரத்தினிடையே பிரார்த்தனை செய்தால் பருவம் மாறிய பின்னரும் பழம் தரும்.
  • இது தெய்வ சக்திக்குட்பட்டு மரம் செயல்படுவது.
  • மரமே தன்னுள்ளிருந்து தெய்வ சக்தியை வெளிப்படுத்தினால் அது வருஷம் முழுவதும் பழுக்கும்.
    ஆயிரம் பழம் தரும் மரம் 10,000 பழம் தரும். தினமும் அபரிமிதமாகப் பழுக்கும்.
  • சத்திய ஜீவிய திருவுருமாற்றம் பூமியில் ஏற்பட்டால், ஜடமும் தனக்கு உயிரும், ஆன்மாவும் இருப்பதாகச் செயல்படும்.
  • நிலம் அட்சய பாத்திரமாகும். உலகில் உணவுப் பற்றாக்குறையிராது.
  • நமக்கு அஞ்ஞானம் பெரும் பகுதி. ஞானம் சிறு பகுதி.
  • படிப்பால் அஞ்ஞானம் குறைந்து ஞானம் அதிகமாவதால் விஞ்ஞானம் எழுகிறது.
  • சத்திய ஜீவியத்தில் அஞ்ஞானமேயில்லை. அது ஞானமாகவே செயல்படும்.
  • நம் உடல் நலம் நம்மைவிட டாக்டருக்குத் தெரியும்.
  • 50,000 ஆண்டுகட்கு முன் மனிதனுக்குத் தன் உடல் நலனை அறியும் திறமையிருந்தது.
  • மூலிகைகளின் சக்தியை மனிதன் அப்படியே அறிந்தான்.
  • ஞானம் முதிர்ந்தால் உலகை மனம் அறியும்.
  • நினைத்தது நடக்கும்.
  • எங்குச் செல்ல வேண்டுமானாலும் அதே சமயம் உடல் அங்கிருக்கும்.
  • இது சத்திய ஜீவிய ஞானம்.
  • அன்னை இந்த ஞானத்தைப் பெற்ற பொழுது ஜடம் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டது.
  • அது புது உலகம்.

*******



book | by Dr. Radut