Skip to Content

06. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

60. இதயத்தில் பொன்னொளி - ஒவ்வொரு லோகத்துக்கும் உரிய நிறமுண்டு.

  • புரந்தரதாஸர் மனைவிக்கு மூக்குத்தியும், காரைக்கால் அம்மையாருக்கு மாம்பழமும் கிடைத்தபின், குடும்பத்தில் அவர்கட்கு வேலையில்லை.
  • பொன்னொளியை நெஞ்சில் கண்டவுடன், இனி அவருக்கு வேலை யோகத்தில் என அறிய வேண்டும்.
  • காங்கிரஸ் M.P.க்களில் மூத்தவர் நரசிம்மராவானால், M.P.ஆக இல்லாவிட்டாலும் பிரதமர் பதவி அவருக்கே.
  • புதுவைக்குப் புதியதாக வருபவர்கள் நீல நிற சுண்ணாம்பு அடித்த வீடுகளை ஆசிரம வீடு என அறிவார்கள்.
  • நீல வண்ணக் கண்ணா என்ற நீல நிறம் கிருஷ்ணனுடையது. அது தெய்வீக மன நிறம்.
  • மஞ்சள் நிறம் மனத்தைக் குறிக்கும்.
  • சிவப்பு நிறம் உடலுக்குரியது.
  • ஊதா நிறம் உயிருக்குரியது.
  • ஒவ்வொரு லோகத்திற்கும் உரிய நிறம் உண்டு, மணம் உண்டு.
  • ஆன்மீகச் சூழல் ஒருவரிடமிருந்தால், சந்தன மணம் அவர் மீது எழும்.
  • புரந்தரதாஸர், மனைவிக்கு வைர மூக்குத்தி அளித்தார்.
  • ஏழைப் பிராமணன் மகள் திருமணத்திற்காக மனைவியிடம் உதவி கேட்டான்.
  • அவர், கணவன் அளித்த வைர மூக்குத்தியை அவனுக்குக் கொடுத்தார்.
  • பெற்றவன் விவரம் தெரியாமல் அதை விற்கப் போன கடை புரந்தரதாஸருடையது.
  • விவரம் அறிந்த தாஸர் மனைவியிடம் வந்து கோபமாக, "எங்கே மூக்குத்தி?'' என்றார்.
  • பயந்தவள், விஷம் கரைத்துக் குடிக்கப் போனாள்.
  • கரைக்கும் பொழுது ஏதோ தட்டுப்பட்டது.
  • அது வைர மூக்குத்தி.
  • இனி எனக்குக் குடும்பத்தில் வேலையில்லை என மூக்குத்தியைக் கணவனிடம் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.
  • காரைக்கால் அம்மையார் மாம்பழக் கதையும் இதுவே.
  • ஆன்மா விழித்த நேரம் அற்புதம் நடக்கிறது.
  • பொன்னொளி சத்திய ஜீவிய உலகுக்குரியது.
  • பகவான் சமாதியானபின் அவர் உடம்பில் பொன்னொளி பரவியது.
  • அப்பொன்னொளி உலகுக்கு வரவே அவர் உடலை நீத்தார்.
  • அன்பர்கட்கு மனத்தில், போட்டோவில், நெஞ்சில், பொன்னொளி தியானத்தில் தெரியும்.
  • அது மூக்குத்தி, மாம்பழம் போன்றது.
  • அதைக் கண்ட அன்பர் தனக்கு யோகம் பலிக்கும் என அறிய வேண்டும்.
  • ராஜ யோகம் ஆயிரத்தில் ஒருவருக்குரியது.
  • கீதை யோகம் அதைக் கடந்தது.
  • பூரண யோகம் அதையும் கடந்தது.
  • அதற்குரிய தகுதியை நெஞ்சில் பொன்னொளி அறிவிக்கிறது.

தொடரும்.....

******



book | by Dr. Radut