Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXIII. The Double Soul In Man
23. மனிதனுள் இரட்டை ஆத்மா
That term is something in us.
Page 220
அந்த விஷயம் நம்முள் உள்ள ஒன்று.
It has a special sense for us.
Para 4
அதற்கு விசேஷ பொருள் உண்டு.
We call it soul.
நாம் அதை ஆத்மா என்கிறோம்.
It is the psychic principle.
அது சைத்திய புருஷ தத்துவம்.
It is not life or mind.
அது மனமோ வாழ்வோயில்லை.
It is much less the body.
அத்துடன் உடல் சம்பந்தப்படாது.
There is an essence of mind, life and body.
மனம், வாழ்வு, உடலுக்குச் சாரமுண்டு.
There is a refined purity of being.
ஜீவனுடைய மிருதுவான தூய்மையுண்டு.
It is the peculiar delight of the mind, life and body.
கரணங்களின் விசேஷ ஆனந்தம் அது.
It is a delight of self, to light, to love, to joy and beauty.
அது ஆத்மாவுக்கு அழகு, சந்தோஷம், அன்பு, ஜோதி தரவல்லது.
The psychic holds the opening and flowering of these.
சைத்திய புருஷன் இந்த அம்சங்கள் மலர்வதைப் பெறத் தயாராக உள்ளது.
In fact there is a double soul in us.
உண்மையில் நம்மில் இரு ஆத்மாக்கள் உள்ளன.
It is the psychic.
இதற்குச் சைத்திய புருஷன் எனப் பெயர்.
It follows the rule of every other cosmic principle in us.
இதர பிரபஞ்ச தத்துவங்களுடைய சட்டத்தை ஆத்மாவும் பெற்றுள்ளது.
Therefore the soul too is double.
எனவே ஆத்மாவும் இரண்டாக இருக்கிறது.
We have two minds.
நமக்கு இரு மனம் உண்டு.
One is the surface mind.
ஒன்று மேல் மனம்.
It is our expressed evolutionary ego.
அது பரிணாமத்தில் வெளிவரும் அகங்காரம்.
It is the superficial mentality.
இது மேலெழுந்தவாரியான மனநிலை.
It is created by us in our emergence out of Matter.
ஜடத்திலிருந்து வெளிப்படும் பொழுது நாம் சிருஷ்டித்தது அது.
Another is the subliminal mind.
அடுத்தது அடி மனம்.
It is not hampered by our actual mental life.
அடி மனம் நம் மனவாழ்வால் பாதிக்கப்படவில்லை.
Our mind has strict limitation.
நம் மனம் கடுமையான வரையறைக்குட்பட்டது.
It is something large.
அடிமனம் விசாலமானது.
It is powerful and luminous.
அது ஜோதிமயமான சக்தி வாய்ந்தது.
It is our true mental being.
அதுவே நம் உண்மையான மனம் - மனத்தின் ஜீவன்.
It is behind that superficial mental personality.
அடிமனம் மேலெழுந்து மனத்தின் பின் உள்ளது.
We mistake that to be ourselves.
நாம் அதைத் தவறாக நாம் எனக் கருதுகிறோம்.
So also, we have two lives.
அதே போல் நமக்கு இரு வாழ்வுண்டு.
One is outer.
ஒன்று புறத்திற்குரியது.
It is involved in the physical body.
அது உடலுள் கலந்து உறைகிறது.
It is bound by its past evolution in Matter.
கடந்த கால பரிணாமத்தால் - ஜடத்துள் - அது கட்டுப்படுத்தப்பட்டது.
It lives, was born and will die.
அது பிறந்து, இருந்து, இறப்பது.
The other is a subliminal force of life.
அடுத்து அடிமன வாழ்வின் சக்தி.
It is not cabined between the narrow boundaries of our physical birth and death.
அது உடலின் பிறப்பு, இறப்பிடையே உள்ள குறுகிய சிறைக்குட்பட்டதில்லை.
But it is our true vital being.
அது உண்மையில் நம் வாழ்வின் ஜீவன்.
It is behind the form of living.
அது வாழ்வின் ரூபத்தின் பின்னுள்ளது.
We ignorantly mistake it for our real existence.
தவறுதலாக நாம் அதை நம் உண்மையான வாழ்வாகக் கொள்கிறோம்.
There is our matter of being.
நம் ஜீவனின் ஜடப் பகுதியுண்டு.
Even there, there is this duality.
அங்கும் இந்த இரு நிலைகள் உள்ளன.
There is a subtler material existence.
சூட்சுமமான ஜட வாழ்வுண்டு.
It is behind our body.
அது உடலின் பின்னுள்ளது.
It provides the substance.
அது பொருள் தருகிறது.
It is not only to our physical sheath.
அது உடலுக்கு மட்டுமல்ல.
It does so for our vital, mental sheaths.
அது பிராண, மன கோசங்களுக்கும் அளிக்க வல்லது.
Therefore it is our real substance.
எனவே அது நம் உண்மையான பொருள்.
It supports this physical form.
அது உடலெனும் உருவத்தை ஆதரிக்கிறது.
Our belief is erroneous.
நம் எண்ணம் தவறானது.
We imagine it to be the whole body of our spirit.
அதைத் தவறாக நம் முழு ஆத்மாவின் உடலாகக் கொள்கிறோம்.
So too, we have this double psychic entity in us.
அதே போல் நம்முள் இவ்விரு ஆத்மாக்கள் உள்ளன.
One is the surface soul – desire soul.
மேல் மனத்தின் ஆசையை நாம் ஆத்மாவாகக் கொள்கிறோம்.
It works in our vital cravings.
நம் ஆசையின் அவதிகளில் அது வெளிப்படுகிறது.
It works in our emotions, aesthetic faculty.
நம் உணர்ச்சிகளிலும் அழகுணர்விலும் அது செயல்படுகிறது.
It is there in our mental seeking for power.
மனம் அதிகாரத்தை நாடுவதிலும் அது உள்ளது.
Even in seeking knowledge and happiness it is there.
மனம் அறிவையும் சந்தோஷத்தையும் நாடுவதிலும் அது உள்ளது.
There is a subliminal psychic entity.
அடி மனத்திற்குரிய சைத்திய புருஷனுண்டு.
It is a pure power of light, love and joy.
அது ஒளி, அன்பு, சந்தோஷத்திற்குரியது.
It is a refined essence of being.
அது ஜீவனின் புனித சாரம்.
It is our true soul.
அது நம் உண்மையான ஆத்மா.
It is behind our outer form of psychic existence.
புற ஆன்மாவின் பின்னுள்ளது அது.
We often dignify it by that name.
புற ஆன்மாவை நாம் ஆன்மா என்று உயர்வாகக் கூறுகிறோம்.
This larger purer psychic entity comes to the surface.
இந்தப் புனித விசாலமான சைத்திய புருஷன் மேலே வரும்.
We then say Man has a soul.
அப்பொழுது மனிதனுக்கு ஆத்மாவுண்டு எனக் கூறுகிறோம்.
Sometimes it is absent.
சில சமயம் அது இருக்காது.
It is absent in his outer psychic life.
அவன் புற ஆன்மீக வாழ்வில் அது சில சமயமிருக்காது.
We then say he has no soul.
அப்பொழுது அவனுக்கு ஆத்மா இல்லை என்கிறோம்.
Our egoistic existence is small.
Page 221
அகந்தை வாழ்வு சிறியது.
They are the form of our being.
Para 5
அவை நம் ஜீவனின் உருவங்கள்.
They are external.
அவை புறத்திற்குரியவை.
We have a larger true individuality.
பெரிய உண்மையான ஜீவன் உண்டு.
It is the subliminal.
அவை அடிமனத்திற்குரியவை.
They are the formations of the larger part of us.
பெரிய ஜீவன் உருவாக்கியவை அவை.
They are the concealed part of our being.
அவை மறைந்துள்ள நம் ஜீவனின் பகுதிகள்.
There our individuality is close to our universality.
அங்கு நம் ஜீவன் பிரபஞ்சத்தை ஒட்டியுள்ளது.
It touches it.
நம் ஜீவன் பிரபஞ்சத்தைத் தொடுகிறது.
It is in constant relation with it.
அத்துடன் தொடர்ந்த தொடர்புள்ளது.
It is its commerce.
அதுவே அதன் தொழில்.
The subliminal mind in us is open to the universal.
அடிமனம் பிரபஞ்சத்திலிருந்து பெறக் கூடியது.
There is the universal knowledge.
பிரபஞ்சத்தில் ஞானமுண்டு.
It is of the cosmic Mind.
அது பிரபஞ்ச மனத்திற்குரியது.
We have a subliminal life.
அடிமன வாழ்வு நமக்குண்டு.
It receives from the universal force.
அது பிரபஞ்ச சக்தியைப் பெறுகிறது.
It is of the cosmic Life.
அது பிரபஞ்ச வாழ்வுக்குரியது.
There is the subliminal physicality in us.
அடிமன உடல் வாழ்வுண்டு.
There is the universal force-formation.
பிரபஞ்ச சக்தி உருவாகிறது.
It is of cosmic Matter.
அது பிரபஞ்ச ஜடம்.
Thick walls divide from these the surface mind, life and body.
மேல்மன வாழ்வு, உடலை அடிமனத்திலிருந்து தடித்த சுவர்கள் பிரிக்கின்றன.
Nature has to pierce them.
இயற்கை அவற்றை ஊடுருவ வேண்டும்.
It is of much trouble.
அது தொந்தரவானது.
It is imperfect.
ஊடுருவுவது அரைகுறையாகிறது.
It is by skillful-clumsy physical devices.
திறமையும், குழப்பமும் கலந்த ஜட சாதனங்களால் அது நடைபெறுகிறது.
These are there in the subliminal.
அவை அடிமனத்திலுள்ளன.
It is a rarefied medium.
அது நுட்பமான இடைவெளி.
It is of separation and communication.
அது பிரிக்கும், தொடர்பு கொள்ளும்.
So too the subliminal soul in us.
அடிமன ஆத்மா அது போன்றது.
It is open to the universal delight.
அது பிரபஞ்ச ஆனந்தம் பெற வல்லது.
The cosmic soul takes in its own existence.
பிரபஞ்ச ஆத்மா அதைத் தன் பகுதியாகக் கொண்டுள்ளது.
And so in the existence of the myriad soul.
இலட்சக்கணக்கான ஆத்மாக்களின் வாழ்வும் அப்படியே.
They represent it.
இவ்வாத்மாக்கள் பிரபஞ்சப் பிரதிநிதிகள்.
They do so in the operation of mind, life and matter.
மனம், வாழ்வு, ஜடச் செயல்களிலும் அப்படியே.
Nature lends herself to their play in them.
அவற்றுள் பிரகிருதியின் லீலை செயல்படுகிறது.
It is so in development.
வளர்ச்சியிலும் அதுவே சட்டம்.
The surface soul is shut off from this cosmic delight.
இப்பிரபஞ்ச ஆனந்தம் மேல்மன ஆத்மாவுக்கில்லை.
It is by egoistic walls of thickness.
அகந்தையின் கனத்த சுவர்கள் பிரிக்கின்றன.
There have been gates of penetration.
அவை ஊடுருவும் கதவுகள்.
They enter through them.
அச்சுவர் மூலம் நுழைகின்றன.
The touches of divine cosmic Delight become dwarfed.
தெய்வீக பிரபஞ்ச ஆனந்த ஸ்பர்சம் சுருங்கும்.
It is distorted.
அது சின்னாபின்னமாகிறது.
They have to come in masked as their own
opposites.
அவை முகமூடி அணிந்து எதிரானவையாக வர வேண்டும்.
This is the surface or desire soul.
Page 221
இது மேல்மன ஆன்மா, அல்லது ஆசையின் ஆன்மா.
It follows there is no true soul here.
Para 6
உண்மையான ஆத்மா இதிலில்லையென்று தெரிகிறது.
But this is a psychic deformation.
இது சைத்திய புருஷன் சிதைந்த நிலை.
Or, it is a wrong reception of the touch of things.
விஷயத்தின் ஸ்பர்சத்தை இது விபரீதமாக ஏற்ற நிலை.
The world has a malady.
உலகம் பெற்ற பெரும் குறையொன்றுண்டு.
It is the individual cannot find his real soul.
மனிதன் தன் உண்மையான ஆத்மாவை அறிய முடிவதில்லை.
Man lives in his real soul.
மனிதன் தன் உண்மையான ஆத்மாவில் வாழ்கிறான்.
He cannot meet in his embrace of things outward.
புற விஷயங்களில் அவனால் இவ்வாத்மாவைத் தழுவ முடியவில்லை.
This is the root-cause of this malady.
மனிதனுடைய குறைக்கு மூல காரணம் இதுவே.
Man seeks to find various essences.
பல்வேறு மூலங்களின் சாரத்தை மனிதன் நாடுகிறான்.
It is the essence of being.
இதுவே ஜீவனின் மூலம்.
It is the essence of power.
இது அதிகார சக்தியின் மூலம்.
It is the essence of conscious-existence.
அது தெளிந்த சத்தின் மூலம்.
It is the essence of delight.
அது ஆனந்த மூலம்.
He gets a crowd of impressions.
பல்வேறு உணர்ச்சி ரூபங்கள் கூட்டமாக வருகின்றன.
They are contradictory.
அவை முரண்பாடும், பிணக்கும் நிறைந்தவை.
He may find that essence.
அந்தச் சாரம் அவனுக்குக் கிடைக்கலாம்.
Then he would find the one universal being.
அது ஒரு பிரபஞ்ச ஜீவன்.
It is a universal power, conscious existence.
அது பிரபஞ்ச சக்தி, தன்னையறியும் சத்.
It is the universal delight.
அது பிரபஞ்ச ஆனந்தம்.
Even in this throng of touches and impressions, he would get them.
இந்தக் கூட்டமான ஸ்பர்சம், உணர்ச்சி ரூபங்களிடையே அவன் அவற்றைப் பெறுவான்.
They appear as contradictions.
அவை பிணக்காகத் தோன்றுகின்றன.
It would be reconciled in the unity and harmony of the Truth.
அவை சத்தியத்தின் சுமுகத்தில் முரண்பாட்டை இழந்துவிடும்.
It reaches out to us in these contacts.
இத்தொடர்பால் அவை நம்மை வந்தடைகின்றன.
At the same time he would find his true soul.
அதே சமயம் அவன் தன் உண்மையான ஆத்மாவை அறிவான்.
Through it he will reach his self.
அதன் மூலம் அவன் தன் பிரம்மத்தை அடைவான்.
The true soul is the delegate of his Self.
அவனது உண்மையான ஆத்மா அவன் பிரம்மத்தின் பிரதிநிதி.
His self and the self of the world are one.
அவனது பிரம்மமும், உலகத்தின் பிரம்மமும் ஒன்றே.
But this cannot do.
இது உதவாது.
There is the egoistic ignorance in the mind.
மனத்தில் அகந்தையின் அறியாமை உள்ளது.
It is the mind of thought, emotion and sense.
மனம் எண்ணம், உணர்ச்சி, உடலுணர்ச்சியுள்ளது.
They respond to the touch of things.
அவை விஷய ஸ்பர்சத்தை உணர்கின்றன.
It is not by courage.
அது தைரியமான செயலல்ல.
Not a whole-hearted embrace of the world.
உலகை முழுமனதுடன் தழுவும் தைரிய செயலில்லை.
It is according to the touch.
ஸ்பர்சத்தைப் பொறுத்து அமையும் தழுவல் அது.
It is by a flux of reachings.
உலகம் பலவகையாக மனிதனை வந்தடையும்.
It is by shrinkings.
மனிதன் அதனின்று விலகிச் சுருங்குவான்.
It is by cautious approaches.
ஜாக்கிரதையாக அணுகுவான்.
Or by eager rushes.
அல்லது ஆர்வமாக ஓடி வருவான்.
Or it may be sullen and discontented.
அல்லது வெறுப்பும் விரக்தியுமாகவும் வரலாம்.
Or panic or angry recoils.
அல்லது பயந்து கோபமாக ஓடிவிடுவான்.
The touch may please or displease.
ஸ்பர்சம் இனிமையாக அல்லது எதிராக இருக்கும்.
It may comfort or alarm.
அது பயத்தை எழுப்பும் அல்லது சௌகரியம் தரும்.
Or satisfy or dissatisfy.
அது திருப்தியாக அல்லது அதிருப்தியாக இருக்கும்.
The desire soul wrongly receives the delight.
ஆசை ஆனந்தத்தைத் தவறாக ஏற்கிறது.
It is the cause of triple misrepresentation.
மூவகையான தவற்றுக்கு அதுவே மூலம்.
Rasa is the delight of things.
ரஸம் ஆனந்த சாரம்.
We receive the pure essential joy of the being.
ஜீவனின் சாரமான தூய சந்தோஷம் வருகிறது.
It is rendered equally in three terms.
அது மூன்று வகையாக மாறுகிறது.
They are pleasure, pain and indifference.
அவை சந்தோஷம், வலி, பாராமுகம்.
Contd....
தொடரும்......
 

******



book | by Dr. Radut