Skip to Content

1. உள்ளன்புடனுள்ள நல்லெண்ணம்

உள்ளன்புடனுள்ள நல்லெண்ணம்

அழகில்லை, பணமில்லை, வயது தாண்டிவிட்டது, இனித் திருமணமில்லை என்ற நிலையில் உள்ளவர் விரக்தி மயமாக இருப்பார்.

  • ஷார்லோட் விரக்திபடவில்லை.
  • மாறாக அவர் மனதில் நல்லெண்ணம் உற்பத்தியாயிற்று.
  • "ஜேன் பிங்லியை மணக்க என்ன செய்ய வேண்டும், டார்சி எலிசபெத் மீது நாட்டமாக இருப்பதை எலிசபெத் அறியவில்லை. எப்படி இவ்விருவரையும் திருமணம் செய்து வைக்கலாம்'' என்ற ஷார்லோட்டிற்கு சி 2000 வருமானம் உள்ள காலின்ஸுடன் திருமணம் நடந்தது. இதை ஏற்கனவே விவரமாக எழுதியுள்ளேன். இதன் கருத்தென்ன?
    1. நம் நிலைமையைப் புறக்கணித்து, இருக்கும் சந்தர்ப்பத்தில் யாருக்கு என்ன நல்லது செய்யலாம் என ஒருவர் நினைத்தால் அந்த சந்தர்ப்பத்திற்குள் அதிகபட்சம் அவர் மனம் நாடுவதை - அவர் தேடுவது மணம் - அவர் மனத்திற்கு (இராசி) ஏற்ப பூரண திருப்தி ஏற்படும்படி வாழ்க்கை அளிக்கும் என்பது உட்கருத்து.
    2. அதுவே அன்பருக்கு எல்லாக் கட்டத்திலும் ஒரு படி அதிகமாக அமையும்.
    3. உள்ள சந்தர்ப்பத்தில் அதிகபட்சம் மாறி இந்த சந்தர்ப்பத்தில் இல்லாதது வரும்.
    4. மனம் தேடும் அந்தஸ்து கிடைத்தது - மனம் கற்பனை செய்ய முடியாத அந்தஸ்து வரும்.

*******



book | by Dr. Radut