Skip to Content

05. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XX. Death, Desire, and Incapacity
20. மரணம், ஆசை, இயலாமை
This is a view.
Page No.189
Para No.3
இது வாழ்வைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.
Life appears as a form of energy.
வாழ்வு சக்தி ரூபமாகக் காணப்படுகிறது.
It is an energy of consciousness.
அது ஜீவியத்தின் சக்தி.
It is intermediary.
வாழ்வு இடைப்பட்ட சக்தி.
It is appropriate to the action of Mind on Matter.
மனம் ஜடத்தில் செயல்படுவதற்கு வாழ்வு பொருத்தமானது.
In a sense it may be said to be an energy aspect of Mind.
மனத்தின் சக்தி ரூபம் வாழ்வு எனவும் கூற முடியும்.
When it creates and relates itself no longer to ideas.
வாழ்வு சிருஷ்டிக்கும்பொழுது கருத்துடன் தொடர்பு கொள்வதில்லை.
It relates to motions of force.
சக்தியின் சலனத்துடன் தொடர்பு கொண்டது வாழ்வு.
It also relates to forms of substance.
பொருள்களின் ரூபத்துடன் தொடர்பு கொண்டது.
We must immediately add another thing.
உடன் கூற வேண்டியது ஒன்றுண்டு.
Mind is not a separate entity.
மனம் தனித்துச் செயல்படுவதில்லை.
All Supermind is behind it.
சத்தியஜீவியம் அதன் பின்னுள்ளது.
It is Supermind that creates with Mind.
சத்தியஜீவியம் மனம் சிருஷ்டிக்க உதவுகிறது.
Mind is its final individualising operation.
சத்தியஜீவியம் தனிப்பட்டுச் செயல்படுவது மனத்தில்.
Life is also of separate entity or movement.
வாழ்வும் தனிப்பட்டுச் செயல்படும் சலனமன்று.
But has all Consciousness-Force behind it.
ஜீவிய-சக்தி அதன் பின்னுள்ளது.
It exists and acts in created things.
அது உண்டு. சிருஷ்டிக்கப்பட்ட பொருள்களில் அது செயல்படுகிறது.
Life is only its final operation.
வாழ்வு அதன் முடிவான செயல்.
It is intermediary between Mind and Body.
வாழ்வு மனத்திற்கும் உடலுக்கும் இடைப்பட்டது.
This is a dependence.
இது தொடர்பு.
All that we say must therefore be subject to this qualification.
நாம் கூறுவது அனைத்தும் இந்த நிபந்தனைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
We do not really know Life.
நமக்கு வாழ்வு தெரியாது.
The Consciousness-Force is working in it.
ஜீவிய சக்தி வாழ்வில் செயல்படுகிறது.
It is only an external aspect.
வாழ்வு புற அம்சம்.
It is an instrumentation.
வாழ்வு அதன் கருவி.
We must be aware of it and grow conscious of it.
நாம் ஜீவிய சக்தியை அறிந்து உணர வேண்டும்.
Until then we do not know the nature of life.
அதுவரை வாழ்வின் சுபாவத்தை நாமறிய முடியாது.
We cannot know either its process.
வாழ்வின் வழிமுறையையும் நாம் அதுவரை அறிய முடியாது.
Then only we can pursue with knowledge.
அப்பொழுது ஞானத்துடன் நாம் அதைத் தொடரலாம்.
We can so execute.
அப்படியே செயல்படுத்தலாம்.
Such is the individual soul-form.
மனிதனின் ஆத்ம ரூபம் அது.
They are the mental instruments of the Divine.
அவை இறைவனுடைய கருவி, மனத்திலுள்ளவை.
They are bodily instruments too.
அவை உடலின் கருவியுமாகும்.
It is the Will of God in life.
அது வாழ்வில் இறைவனின் திருவுள்ளம்.
Mind and Life proceed in paths and movements.
மனமும், வாழ்வும் செல்லும் பாதையிது. அதுவே சலனமாகும்.
They are of ever-increasing straightness.
அப்பாதை நேராக நிமிரும் பாதை.
It is a path of the truth in ourselves and things.
நம் சத்தியப் பாதையிது.
There are crooked perversions of Ignorance.
அவை அறியாமையின் கோணல் குதர்க்கம்.
The perversions shrink by constant diminishing.
இக்குதர்க்கம் விஷயத்தைத் தொடர்ந்து சுருக்கும்.
Mind has to unite itself with Supermind.
மனம் சத்தியஜீவியத்துடன் ஐக்கியமாக வேண்டும்.
It is separated from the Supermind by Avidya.
அஞ்ஞானத்தால் மனம் சத்தியஜீவியத்தினின்று பிரிக்கப்படுகிறது.
Life has to become aware of the Conscious-Force.
வாழ்வு சித் சக்தியுடன் இணைய வேண்டும்.
It operates in it.
அது வாழ்வில் செயல்படுகிறது.
It does so for ends with a meaning.
ஒரு பலனுக்காக காரணத்துடன் அது அப்படிச் செயல்படுகிறது.
Of which life in us is unconscious.
இச்செயல்பாட்டை நம் வாழ்வு அறியாது.
It is so as it is absorbed.
வாழ்வில் அது கிரகிக்கப்படுவதால் தெரிவதில்லை.
It is absorbed in the mere process of living.
வாழ்வில் அது அப்படி கிரகிக்கப்படுகிறது.
Its action is darkened.
வாழ்வில் செயல் கருமையுடையது.
It serves them blindly.
கண்மூடி சேவை செய்கிறது.
It serves ignorantly and not luminously.
அது ஒளியால் செயல்படவில்லை, அறியாமையால் நடக்கிறது.
It must be so in its liberation.
விடுதலை பெற்றால் ஒளியால் செயல்பட வேண்டும்.
It must serve with a self-fulfilling knowledge, power and bliss.
தன் நிறைவு பெறும் சக்தி, ஆனந்தத்தால் அது சேவை செய்யும்.
Our Life is subservient to Mind.
Page No.190
Para No.4
வாழ்வு மனத்திற்குப் பணிந்தது.
Mind is darkened.
மனம் இருண்டது.
Mind's operation divides.
மனம் துண்டு செய்யும்.
Life undergoes all that subjection to death.
வாழ்வு மரணத்திற்கு உட்பட்டது.
It is subjected to limitation, weakness.
இயலாமைக்கும், வரையறைக்கும் உட்பட்டது.
It is also subjected to suffering and ignorant functioning.
அறியாத செயலுக்கும், துன்பத்திற்கும் உட்பட்டது.
Of which the bound and limited creature - Mind is the present
cause.
கட்டுப்பட்ட வரையறைக்குட்பட்ட மனம் இவற்றிற்குக் காரணம்.
There is an original source of perversion.
குதர்க்கத்திற்கு ஒரு மூலகாரணம் உண்டு.
We have seen it.
நாம் அதைப் பார்த்தோம்.
The Individual soul is bound to ignorance.
ஆத்மா அஞ்ஞானத்தை ஏற்கிறது.
It regards itself as separate.
தன்னைத் தனித்த ரூபமாகக் காண்கிறது.
To it all cosmic consciousness is a presentation.
பிரபஞ்ச ஜீவியம் அதற்கு ஒரு தோற்றம்.
The cosmos is a conscious form of the One.
பிரபஞ்சம் ஏகனுடைய ஆத்ம ரூபம்.
It embraces all consciousness.
அது எல்லா ஜீவியத்தையும் தழுவுகிறது.
It embraces all will, all force and all being.
எல்லா ஜீவனையும், எல்லா சக்தியையும், எல்லா உறுதியையும் அது தழுவுகிறது.
All enjoyment and all being are one with it.
எல்லா ஜீவனும், அனுபவமும் அதனுடன் இணைந்தது.
Instead of this knowledge, it considers itself separate.
இதை ஏற்காமல், தன்னைத் தனியாக ஆத்மா கருதுகிறது.
There is the universal life in us.
நம்முள் பிரபஞ்ச வாழ்வுண்டு.
It obeys the direction of the soul.
ஆத்மாவின் அதிகாரத்தை அது ஏற்கிறது.
Our soul is imprisoned in mind.
ஆத்மா மனத்துள் சிறைப்பட்டுள்ளது.
The universal life itself becomes imprisoned in the individual
action.
பிரபஞ்ச வாழ்வு தனி நபர் செயலுக்கு உட்படுகிறது.
It exists and acts as a separate life.
அது தனித்திருந்து தனியாகச் செயல்படுகிறது.
Its capacity is limited and insufficient.
அதன் திறமை போதாது, அளவுக்குட்பட்டது.
It undergoes the shock and pressure.
எல்லா அழுத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்கிறது.
They come from all life around.
சுற்றியுள்ள வாழ்வு அவற்றைத் தருகிறது.
It does not freely embrace it.
அவற்றை அவற்றிற்குக் கட்டுப்படாமல் ஏற்க அதனால் முடியவில்லை.
It is thrown into the cosmic interchange constantly.
பிரபஞ்சத் தொடர்பில் அது இடையறாது இணைந்து இயங்குகிறது.
The interchange is in the universe.
இத்தொடர்பு பிரபஞ்சத்திற்குரியது.
It is a poor, limited, individual existence.
தனிநபர் வாழ்வு அளவுக்குட்பட்டது, தாழ்ந்தது.
Life at first helplessly suffers.
ஆரம்பத்தில் வாழ்வு ஆதரவற்று சிரமப்படுகிறது.
It obeys the giant interplay.
பிரம்மாண்டமான தொடர்பை ஏற்றுள்ளது.
It reaction is mechanical.
ஜீவனற்றுச் செயல்படுகிறது.
Life is attacked, devoured, enjoyed, used and driven.
வாழ்வைத் தாக்கி, விழுங்கி, அனுபவித்துப் பயன்படுத்தி ஆள்கிறது.
But consciousness develops.
ஜீவியம் வளர்கிறது.
It does so as the light of its own being emerges.
தன் ஜீவஜோதி வளர்வதால், ஜீவியம் வளர்கிறது.
It emerges from the inner darkness.
அக இருளினின்று ஜோதி எழுகிறது.
It is a darkness of involutionary sleep.
சிருஷ்டியின் உறக்கத்தின் இருள் அது.
The individual existence becomes dimly aware of the power in it.
ஜீவாத்மாவின் வாழ்வு லேசாக அதன் சக்தியை அறிகிறது.
It seeks it in two stages.
இரண்டு கட்டங்களில் அச்சக்தியை நாடுகிறது.
First it is nervous.
முதலில் உணர்வால் தேடுகிறது.
Next it is mental.
அடுத்தாற்போல் அறிவால் நாடுகிறது.
It is to master, use and enjoy the play.
லீலையை அடக்கி, பயன்படுத்தி, அனுபவிக்க முயல்கிறது.
This awakening is gradual to self.
ஆத்மாவுக்கு இவ்விழிப்பு படிப்படியாக வருவது.
It is an awakening to the Power.
இந்த விழிப்பு பவரையறியும்.
For Life is Force.
வாழ்வு என்பது சக்தி.
Force is Power.
சக்தியென்பது பவர்.
Power is Will.
பவர் உறுதியாகும்.
Will is the working of the Master-Consciousness.
உறுதியென்பது புருஷலிஜீவியம் செயல்படுவது.
Life has its depths.
வாழ்வு ஆழமானது.
Life in the individual becomes more and more aware in the depths.
மனித வாழ்வு தன் ஆழத்தில் விழித்தெழுகிறது.
It too is the Will-Force.
அதுவும் உறுதியின் சக்தி.
It is of Sachchidananda.
அதுவும் சச்சிதானந்தத்துடையது.
It is the master of the universe.
அது பிரபஞ்சத் தலைவன்.
It aspires to be individually master.
தானும் தனிப்பட்ட முறையில் தலைமைபெற ஆவலுள்ளதாகயிருக்கிறது.
It is mastery of its own world.
தன் உலகத் தலைமைபெற முயல்கிறது.
All individual life has its impulse.
தனிநபர் வாழ்வுக்கு வேகமுண்டு.
It increases.
அந்த வேகம் வளர்கிறது.
It tries to realise its power.
தன் சக்தியை அறிய முயல்கிறது.
It also wants to master and know its world.
தன் உலகை அறிந்து அதிகாரம் பெற முயல்கிறது.
The increasing impulse does it.
வளரும் சக்தி அதைச் செய்கிறது.
Ours is cosmic existence.
நம் வாழ்வு பிரபஞ்ச வாழ்வு.
The Divine manifests itself there.
இறைவன் அங்கு தன்னை வெளிப்படுத்துகிறான்.
Contd....
தொடரும்....
 
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கடந்த நாட்களின் அனுபவத்தின் சாரத்தை முழுமையாகப் பெறுதல் சைத்தியபுருஷனை அடைய உதவும். எந்த அளவில் இதைச் செய்ய முடிகிறதோ அந்த அளவில் சைத்தியபுருஷன் வெளிப்படும்.
 
கடந்ததை மனதால் கடந்தால் சைத்தியம் விழித்தெழும்.
 
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆன்மா, ஜடப்பொருளை நிர்ணயிப்பது முடிவு. அதற்கு முன் ஆன்மா, மனத்தை நிர்ணயிக்க வேண்டும். ஆன்மா வாழ்வின் செயலை நிர்ணயிக்கும்.
 
இலட்சியத்தையடைய, ஆன்மா எண்ணத்தை நிர்ணயிப்பதும் செயல் ஆன்மாவைக் கட்டுப்படுத்தாததும் முதற்படிகளாகும்.
 
******



book | by Dr. Radut