Skip to Content

04. சாவித்ரி

சாவித்ரி

P.114  Its clear technique of firm and rounded lives
          தெளிந்த திறமையின் முழுமை பெற்ற வாழ்வு

  • உயிரில்லாத உருவங்களின் பெருமைநிறை மக்கள்
  • மூச்சுவிடும் முழுமை பெற்ற நம்போன்ற உடல்
  • ஆச்சரியத்தில் மூழ்கிப் புல்லரித்த புலன்கள்
  • தெய்வீகலோக சஞ்சாரம் உறவென உணர்த்தும்
  • அற்புத ரூபத்தை அளவுகடந்து பாராட்டி அருகணைத்து
  • தெய்வம் விளையாடும் கருவியாகச் சிறந்து
  • அழிவின் அம்சம் அழியா அமரத்துவம் பெற்றது
  • குறுகிய மூலைகள், ஒதுங்கி நிற்கும் ஓரம்
  • சிறியதன் உயர்வு உச்சத்தை எட்டும் அரியாசனம்
  • எதிர்காலம் கனவுலகையும் கடந்து நின்றது
  • எல்லையில்மட்டும் எழும் பூரணத்தின் முழுமை
  • தனக்குமட்டும் உரிய தகுதியைக் கடந்த உயர்வு
  • எப்பரப்புமற்ற எதுவும் அழிந்த நிலை
  • அளவிறந்ததின் சாயலுக்கும் இடமற்ற மாநிலம்
  • எடுத்துரைக்க முடியாதவனின் எக்காளம் எடுபடாத நேரம்
  • சொந்த அழகின் பூரிப்பில் இழந்த தன்வயம்
  • மந்திரம் வளையும் மாயக்கட்டின் மறுபுறம்
  • ஆத்மா ஒதுங்கி ஒளிந்து பெற்ற ஒருமை
  • எல்லையின் கீறல் எடுபடும் மிடுக்கு
  • நீலவானம் நிமிர்த்தியமைத்த ஆன்மா
  • ஜோதிமயமான கருவூலம் கட்டுப்படுத்தும் எண்ணம்
  • புற இலட்சியம் ஆழமற்ற நீச்சல் குளம்
  • வேலியுள் வாழும் வாழ்வின் தளர்நடை தன்னையேற்று
  • உடலின் செயல்தரும் சிறுதுளி மகிழ்வு
  • மனமெனும் மூலைக்குரிய சக்தியென முத்திரையிட்டு
  • வேகமற்ற பாதுகாப்பு வேண்டும்எனக் கொண்டு
  • ஆடிஓடி தூங்கும் அவள் குறுகிய உலகம்
  • பெரிய வேலையைப் பெற மறுத்து
  • சூறாவளிச் சூழலான பரந்த ஆசைகள் மறந்து
  • கிருஷ்ணன்போய் குசேலன் வந்ததை அறிய முடியாமல்
  • ஒளிமயமான பாதையில் அவள் ஒழுங்கு நடை ஓய்ந்தது
  • ஆத்மா அமைதியுறும் அழகின் உடல்
  • இனிய ஒளிச்சோலையில் சிரிக்கும் பண்பு
  • பொன்மயமான தூளியில் பொறுமையாக அசையும்
  • பெருவெளியின் குரல் அவள் மந்திரமயன் மாடத்தை அடைந்தது

P.115 She had no wings for wide and dangerous flight
          பரந்து விரியும் ஆபத்தை அனுபவிக்க அவளில்லை

  • வானமோ பாதாளமோ ஆபத்தை விளைவிக்கவில்லை
  • பெரிய கனவு இல்லை, பெரிய ராஜபாட்டை தோன்றவில்லை
  • இழந்த பெரிய அனந்தத்தை மீண்டும்பெற விழையவில்லை
  • சிறப்பான சித்திரம் சிறப்பான சட்டத்துள்ளிருக்கிறது
  • அவள் மனம் இக்கற்பனை லோகங்கட்குக் கட்டுப்படவில்லை
  • க்ஷணச் சுதந்திரம் ஆனந்தமாக நிம்மதி
  • சிறிய அளவு ஆனந்தம் தற்செயலாய் வந்த ஒரு மணி நேரம்
  • மேல்மனம் ஆத்மாவுக்குச் சலிப்பூட்டுகிறது
  • ரூபத்தின் அழகைக் கடந்து நின்ற கடவுள்அம்சம்
  • ஆழ்ந்த நிலைகளும், மறந்த சக்திகளும் அழைக்கின்றன
  • பெரிய ஜோதியைக் கடந்தது அவன் பார்வை
  • மலை ஏறிய ஆத்மா கடந்ததை மறந்தது
  • பெருநாட்களின் பெருவாழ்வை ஏற்ற அரசவை
  • செல்வம் நிறை அச்சொர்க்கத்தை விட்டகன்றான்
  • பெருவெளியின் அகன்ற வீச்சைக் கடந்தது அவன் கதி

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனம் பிரம்மத்தைத் தொட முடியும் என்கிறார் பகவான். மனமே பிரம்மத்தாலானது என்பதால் அதனால் முடியும். மனத்தில் பிரம்மமுள்ள இடத்தைத் தொட்டால் அதன் மூலம் பிரம்மத்தைத் தொடலாம்.
 
தானே பிரம்மம் என்பதால் மனம் பிரம்மத்தைத் தொடும்.

*****



book | by Dr. Radut