Skip to Content

1. அன்னையின் பர்சனாலிட்டி

அன்னையின் பர்சனாலிட்டி

நாம் இராசி என்பதை ஆங்கிலத்தில் பர்சனாலிட்டி எனலாம். பொருள் நேரடியாகப் பொருந்தாது. நடைமுறையில் விளக்க உதவும். ஒரு பெரிய ஸ்தாபனத்தில் போய்ச் செயல்பட ஆரம்பித்தால் நமக்கு எந்த இடம் அமைகிறதோ அதை நாம் நம் இராசி என்போம். எது வந்தாலும் நம் பர்சனாலிட்டி அளவுக்கே பலிக்கும் என்ற உண்மையை இராசி சரியாக விளக்கும். கணக்கே எழுதப் பிடிக்காதவர் ஆசிரமம் வந்து சேர்ந்தார். அன்னை அவரைக் கணக்கெழுதச் சொன்னார்கள். இதுவே என் இராசி என்றார். சிறிய மனம் உள்ளவர்க்குப் பெரிய அதிர்ஷ்டம் வந்தாலும் பலிக்கும் நேரத்தில் சிறுத்துவிடுகிறது. அது பர்சனாலிட்டி அளவுக்குச் சுருங்கிவிடுகிறது என அறிகிறோம். பர்சனாலிட்டி சிறியதோ, பெரியதோ, நாம் பர்சனாலிட்டியைப் பாராட்டினால், பர்சனாலிட்டி பலிக்கும். பர்சனாலிட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு அன்னையைப் பாராட்டினால், "அன்னையின் பர்சனாலிட்டி” நம் வாழ்வில் பலிக்கும்.

  • காமராஜ் தண்டோரா போட்டவர். தமிழ்நாட்டுத் தலைவரானது பெரிய காரியம். முதல்வரானது அதனினும் பெரியது. அன்னை தரிசனம் செய்த பிறகு அவரைத் தேடிப் பிரதமர் வேலை வந்தது. இரு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்தது "அன்னை பர்சனாலிட்டி”.
  • ¼ கோடி வியாபாரம் செய்தவர் அன்னை தரிசனத்தின்பின் 800 கோடி வியாபாரம் பெற்றது, "அன்னை பர்சனாலிட்டி".
  • மாதம் 25 ரூபாயில் வாழ்க்கையை நடத்தியவர் அன்னைக்குச் சேவை செய்து, தரிசனம் செய்து, ரூ.100 காணிக்கை கொடுத்து, ஆயிரக்கணக்கான ரூபாய் வருமானத்தை 60ஆம் வயதில் பெற்றது "அன்னை பர்சனாலிட்டி”.
  • அன்பர் அன்னையைப் பற்றி எழுதியவற்றைக் கேள்விப்பட்டு, உலகப் பிரசித்திபெற்ற ஸ்தாபனத் தலைவர் அன்பரை வந்து பார்த்தது, அவருடைய பர்சனாலிட்டியாலன்று, "அன்னையின் பர்சனாலிட்டி”யால்.
  • பல்கலைக்கழகத்தில் புதியதாக வேலையில் சேர்ந்த இளம் ஆசிரியர் செய்த சேவையால் ஓராண்டில் வைஸ்சான்ஸ்சலருக்குச் சமமாக உயர்ந்தது "அன்னை பர்சனாலிட்டி”.
  • 27,000 ரூபாய்க்கு விற்க முடியாத சொத்தை 12 மணிக்கு அன்னை சமாதியைத் தரிசனம் செய்ய ஒத்துக்கொண்டவர் மாலை 4 மணிக்கு 81,000 ரூபாய்க்கு விற்றது "அன்னை பர்சனாலிட்டி”.

******



book | by Dr. Radut