Skip to Content

06. அன்பர் கடிதம்

 

     ஸ்ரீ அன்னை, ஸ்ரீ பகவான் அவர்களை வணங்கிக்கொண்டு அவர்களின் திருவடியில் இந்தக் கடிதத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.

     என்னுடைய சகோதரியின் குழந்தைக்குத் (ஸ்ரீ வர்ஷா) திடீர் என்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடலில் சில இடங்களில் திட்டுத்திட்டாகக் கருப்பாக உடலில் தழும்பு போன்று தோன்றியது. அதனைப் பார்த்த வீட்டில் உள்ளோர் ஏதாவது பூச்சிக் கடியாக இருக்கும் என்று கூறிவிட்டனர். குழந்தையை checkupக்குக் கூட்டிச் சென்றபோது டாக்டர்கள் checkup செய்துவிட்டு இது பூச்சிக்கடி இல்லை, இரத்தம் உரைதலில் பிரச்சினை என்று கூறி ஒரு specialist இடம் அனுப்பினர். அவர்களும் பரிசோதித்துவிட்டு குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது உடனடியாக Child Trust அல்லது Apolloவில் அட்மிட் செய்து விடும்படிக் கூறினர். மேலும் அங்கெல்லாம் சென்றால் அதிகப் பணம் ஆகும் என்று கூறி Children Hospitalஇல் சேர்த்துவிடும்படிக் கூறினார். ஆனால் அந்த Hospitalஇல் சுத்தம் கிடையாது அதுதான் பிரச்சனை என்று கூறினார். வேறு ஒருவரிடம் கேட்டதற்கு அங்குச் சேர்த்தால் தொற்றுநோய் போன்ற வேறு ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று கூறினார். என்ன செய்வது என்று எல்லோரும் குழம்பினர். வீட்டிற்கு வந்தவுடன் அனைவரும் அன்னையிடம் பிரார்த்தனை செய்தோம். பிறகு அக்காவின் கணவர்க்கு - மாமாவுக்குத் தகவல் தெரிவித்தோம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மறுநாள் Hospitalக்கு அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அடுத்த நாள் Child Trust Hospital சென்று checkup செய்தோம். Doctors எல்லா testஉம் எடுக்க வேண்டும் என்று கூறி ஒவ்வொரு testக்கும் எழுதிக் கொடுத்துவிட்டனர். Resultஐப் பார்த்து விட்டு மறுநாள் வரச் சொன்னார்கள். சரி என்று எல்லோரும் வந்துவிட்டோம். ஏதோ சாதாரண பிரச்சனை என்று இருந்துவிட்டோம். அந்த Resultஇல் bloodஐப் பற்றிச் சில குறிப்புகள் இருந்தன. என்னுடைய சகோதரன் biochemistry படித்தவன். Reportஐப் பார்த்தவுடன் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு என்னை மட்டும் தனியே அழைத்துசென்று குழந்தையின் blood groupஇல் சில சிக்கல் உள்ளது. அதனைத் தீர்ப்பது மிகமிகச் சிரமம், குழந்தையை நம்மால் காப்பாற்ற முடியாது, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். தயவுசெய்து இந்த உண்மையை யாரிடமும் கூறிவிடாதே என்று சொல்லிவிட்டான். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. யாரிடமும் எதுவும் சொல்லாமல் அன்னையிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். மறுநாள் நான் என் அப்பா, அம்மா, குழந்தை, அக்கா, மாமா அனைவரும் Child Trust Hospitalக்குச் சென்றோம். டாக்டர்கள் கிட்டதட்ட 4 மணி நேரம் பரிசோதித்துவிட்டு குழந்தையை அட்மிட் செய்துவிடுங்கள் குழந்தை கடும் பிரச்சனைக்குரிய நிலையில் இருக்கிறது என்று கூறிவிட்டார்கள். மேலும் சில test எடுக்க வேண்டும். அந்த resultஐ வைத்துத்தான் எந்த முடிவும் எடுக்க முடியும். அந்த வசதி இந்த hospitalஇல் இல்லை எனவே அதனை வெளியே வேறு hospitalஇல் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர். test நாளை காலையில் செய்ய வேண்டும் என்றும் கூறினர். கையில் வைத்திருந்த பணம் செலவழிந்துவிட்டது, hospitalஇல் அட்மிட் செய்தாகவேண்டும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துவிட்டு அன்னை நமக்கு வழி காட்டுவார் என்று கூறி வீட்டுக்குச் சென்று பணம் எடுத்து வருகிறேன் என்று நான் வீட்டுக்கு வந்தேன். வீட்டில் உள்ள பணம் அனைத்தையும் சேர்த்தால் தேவையான அளவு பணம் இருந்தது. எடுத்துக்கொண்டு hospitalக்குச் சென்று பணம் கட்டினோம். மாலை 6 மணிக்குத்தான் room கிடைக்கும் என்று கூறிவிட்டனர். மாலை 3 மணி சுமாருக்கு doctor எங்களை அழைத்து test எடுக்க வேண்டும், அதனை Apollo Hospitalஇல் செய்ய வேண்டும், அதற்கான letter இது. இதனைக் கொண்டு போய் கொடுத்து test tube வாங்கி வாருங்கள் என்று கூறினார். அந்த letter blood groupஇல் உள்ள factorஐப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தனர். அதன் குறியீடு இருந்தது. நானும் என் மாமாவும் hospital சென்று coagulation lab test tube வாங்கிக் கொண்டு எவ்வளவு ஆகும் என்று கேட்டோம். cash counterஇல் கேளுங்கள் என்று கூறினர். அங்கு போய் கேட்டால் 4855 ரூபாய் ஆகும் என்று கூறினர். எனக்கும் என் மாமாவிற்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏற்கனவே ஏகப்பட்ட செலவாகிவிட்டது, பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்று குழம்பிப் போய்விட்டோம். பணம் bankல் எடுக்கவேண்டும் என்றால்கூட நாளை 12 மணி ஆகிவிடுமே, 8 1/2 மணிக்கு testஆச்சே அப்பாவிடம் கூறியவுடன் எப்படியாவது சமாளிப்போம் அன்னை வழி காட்டுவார் அன்னைக்கு நம் நிலைமை தெரியும், கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். அவரே பக்கத்து வீட்டிற்கு phone செய்து என் மற்றோர் சகோதரியிடம் பேசினார். பணத்திற்கு ஏற்பாடு செய்யும்படிக் கூறினார். நான் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது வீட்டில் 200 ரூபாய்தான் இருந்தது. அருகில் உள்ளவர்களிடம் அதிகப் பழக்கம் கிடையாது. என்ன செய்வது அன்னையே நீங்களே அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டேன். இரவு 8 1/2 மணிக்கு நான், என் அப்பா, என் மாமா அனைவரும் வீட்டிற்கு வந்தோம். வீட்டில் நுழைந்தவுடன் என் அக்கா பணம் கிடைத்துவிட்டது என்று கூறினார். எப்படி என்று கேட்டேன்? அருகில் உள்ள தியான மைய அன்பர்களிடம் உதவி கேட்டதாகவும், அவர்கள் உங்கள் எதிர்வீட்டில் உள்ள ஒரிசாக்காரர்களிடம் கேளுங்களேன் என்று கூறி உள்ளார்கள். எதிர்வீட்டார்கள் ஹிந்தி பேசுபவர்கள். அவர்கள் தீவிரமான Mother பக்தர்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த மரியாதை உண்டு. நாங்கள் பேசினால் Mother பற்றி மட்டுமே ஒருவர் மொழியில் ஒருவர் பேசுவோம். அவர்களிடம் என் சகோதரி போய் பணம் 5000 ரூபாய் கேட்டார்கள். அவர்கள் எங்கள் நிலையை உடனே புரிந்துகொண்டு பெட்டியைத் திறந்து 50ரூபாய் கட்டு ஒன்று எடுத்துக் கொடுத்தனர். Mother அருள் புரிவார் என்று சைகை பாஷையில் கூறி அனுப்பினர். இதனை அக்கா எங்களிடம் கூறியபோது மதருக்கு நன்றி கூறி factor result நல்லபடியாக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம். யாருக்கும் தூக்கமே இல்லை. அடிக்கடி இரவில் அன்னையிடம் பிரார்த்தனை செய்தோம். மறுநாள் testக்கு blood எடுத்துச் சென்றனர்.Doctorகள் மாறிமாறி குழந்தையைப் பரிசோதித்தனர். இரண்டுநாளில் குழந்தை மிகவும் இளைத்துவிட்டது. சிரிப்பே இல்லை. அதிகமாக அழ ஆரம்பித்தது. யாரைப் பார்த்தாலும் கதறி அழுதது. எங்களால் அதனைத் தாங்கவே முடியவில்லை. வீட்டில் அனைவரும் அழுதுவிட்டனர். பின்னர் அனைவரும் மனத்தைத் திடப்படுத்தி அன்னை எப்படியும் குழந்தையைக் காப்பாற்றுவார் என்று நம்பினோம். வீட்டிற்கு வந்தவுடன் இதுவரை வந்த resultஐ என் தம்பியிடம் காட்டி கேட்டபோது அவன் முகத்தில் வேதனைக் கோடுகளைப் பார்க்க முடிந்தது. எல்லோரும் மிகுந்த துயரமும் கவலையும் அடைந்தோம்.

     அன்னையின் திருவுருவப் படம் முன்பு மிகுந்த வேதனையோடு பிரார்த்தனை செய்தேன். அன்னையின் திருவுருவப்படத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது மனத்தில் திடீர் என்று 'அறிவை நம்பாதே' என்ற வாசகம் நினைவிற்கு வந்தது. இனி Doctor சொல்லுவது, என் தம்பி கூறுவது மற்றும் result report எதையும் நம்பப் போவது இல்லை. அன்னை எப்படியும் குழந்தையைக் காப்பாற்றி விடுவார் என்று உறுதியாக நம்பினேன். மனத்திற்குப் புது ஒளி கிடைத்ததுபோல் இருந்தது. என் சகோதரியிடம் அன்னையின் கைகள் குழந்தையின் உடலில் இரத்தம் உறைந்த இடத்தில் தடவுமாறு கற்பனை செய்யுங்கள், வெள்ளொளி குழந்தையை சூழ்ந்து இருக்குமாறு செய்யுங்கள், குழந்தையிடம் சாவித்ரி புக்கைப் படித்துக் காட்டுங்கள், என் அம்மாவிடம் மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டியால் வெளியிடப்பட்ட அருளமுதம் புத்தகம் படியுங்கள் என்று கூறினேன். நானே அந்தப் புத்தகத்தை எடுத்து திடீர் என்று திறந்து படித்தேன். அதில் தொந்திரவான பிரச்சினை என்ற தலைப்பில் தொந்திரவான பிரச்சினை வந்தபோதும் அன்னையை நினைவு கூர்ந்தால் அன்னையால் மாற்ற முடியாது எதுவும் இல்லை என்பதை எப்போதோ பென்சிலில் கோடு கிழித்து இருந்தேன். அதைப் பார்த்தவுடன் மேலும் நம்பிக்கை அதிகரித்தது. கவலை பெரும்பகுதி குறைந்து மனம் லேசாக மாறிவிட்டது. அன்று இரவு நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். என் அருகில் என் அம்மாவும் இருந்தார். வழக்கமாக checkup timeஇல் ஒரு இளம் வயது டாக்டர் வந்தார். அவர் குழந்தையைப் பரிசோதித்துவிட்டு உடலில் உள்ள தழும்பு போன்ற பகுதியைத் தடவினார். அவர் கையில் மதர் சிம்பல் போட்ட மோதிரம் இருந்தது. அவரிடம், நீங்கள் மதர் பக்தரா என்று கேட்டேன். மிகவும் மென்மையாகச் சிரித்துவிட்டு ஆம் என்று தலை அசைத்து சென்றார். எல்லா Doctors இடமும் அழுத குழந்தை அவரிடம் அழவே இல்லை! அவர் எங்குச் சென்றாலும் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தது. அந்த Doctor என்னிடம் குழந்தைக்கு இரத்தம் உறைதலில்தான் பிரச்சினை, குழந்தைக்கு எடுத்த factor result வைத்து நல்லபடியாக வந்தால் அதற்கேற்ற முறையிலும், மாறி வந்தால் அதற்கேற்ற முறையிலும் treatment எடுப்போம், பயப்படவேண்டாம், கவலையே படவேண்டாம் என்று கூறினார். அவர் கூறியது, பகவானே வந்து நேரில் கூறியது போன்று இருந்தது. நான் குழந்தை அருகில் அமர்ந்து சாவித்ரி புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது அருகில் உள்ள மற்றோர் குழந்தையின் தாயார் என்னிடம் வந்து நீங்கள் அடிக்கடி இந்தப் புத்தகத்தைத் திறந்துவைத்துப் படித்து பிரார்த்தனை செய்கிறீர்கள், நானும் அவ்வாறே பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறினார். நானும் கொடுத்தேன். அவரும் வாங்கிப் படித்தார். நாளை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்தேன். மனமுழுவதும் மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக மாறியிருந்தது. Resultஐ Appolloவில் test செய்ததாகவும் அதில் primary testஇல் எந்த பிரச்சினை இல்லை என்றும் அதனால் factor result தேவை இல்லை என்றும் கூறியதாகவும் பணத்தைக்கூட திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார்கள் என்றார். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக ஆகிவிட்டது. அன்று சுமார் 1 மணிக்கு நீயே போய் report வாங்கி வந்துவிடு என்று கூறினார். நான் hospital சென்றேன். அந்த labஇல் உள்ளவர் பேசியபடி இருந்தபோது அந்த அறையில் அந்த lab head இருந்தார். மற்றவர்களிடம் பேசியபடி இருந்தவர்கள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தனர். நான் அவர் கைகளைப் பார்த்தேன் அவர் கைகளில் மதர் சிம்பல் போட்ட மோதிரம் இருந்தது. எனக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. அந்தப் பெண்மணி நிச்சயம் மதராகவே இருக்கவேண்டும் என்று கருதினேன். அவர்களிடம் நீங்கள் மதர் பக்தரா என்று கேட்டேன் அவர் சிரித்துவிட்டு தீவிரமான பக்தர் என்று கூறினார். Result பற்றிக் கேட்டவுடன் அக்கா, மற்றும் மாமாவின் blood groupஐக் கேட்ட அவரே கணக்கிட்டு பயப்படும்படி ஒன்றும் இல்லை, PT, PTT test செய்து உள்ளோம், கவலையே படவேண்டாம் என்று கூறி மற்றொருவரிடம் பணம் திரும்பப் பெறும் முறையைக் கூறி சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் கட்டிய பணம் முழுவதும் திரும்பக் கிடைத்துவிட்டது. PT, PTT testக்கு மிகவும் குறைந்த அளவு பணம்கட்டச் சொன்னார்கள்.Resultஐ எடுத்துக் கொண்டு hospitalக்கு வந்தேன். விஷயத்தைக் கூறியவுடன் அனைவரும் சந்தோஷப்பட்டனர். பக்கத்து பெட்டில் உள்ள என்னிடம் சாவித்ரி வாங்கிப் படித்த பெண்மணியின் குழந்தை நலமடைந்துவிட்டது என்றும் discharge ஆகிச் சென்றுவிட்டது என்றும் கூறினர். அது எனக்கு மேலும் மகிழ்ச்சி அளித்தது. பிறகு Doctorகள் குழந்தையை பரிசோதித்தார்கள். குழந்தைக்கு வைட்டமின் K ஊசி போட்டார்களா என்று கேட்டார்கள் இல்லை என்று கூறியவுடன் இல்லையா பிறகு குழந்தை எப்படி active ஆக உள்ளது என்று ஆச்சரியப்பட்டு மற்ற specialistடிடம் கலந்து ஆலோசித்துவிட்டு குழந்தை ஆச்சரியமான முறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கூறினர். அவர்கள் எதிர்பார்த்தபடி குழந்தையிடம் எந்தவிதமான எதிர்மறை விளைவும் ஏற்படவில்லை. உடனே Chief Doctor குழந்தையை புகைப்படம் எடுத்து கொண்டார். Junior Doctorகளிடம் விளக்கம் கொடுத்து இந்த கேஸ் குழப்பமாக உள்ளது கவனியுங்கள் முக்கியமாக என்று கூறினார். மறுநாள் என் சகோதரிக்கு test எடுக்க சொன்னார்கள். பின் அவர்கள் வேண்டாம் என்றனர். வைட்டமின் K ஊசி போட்டனர். பிறகு அனைத்து ஸ்பெஷலிஸ்ட்டுகளும் பரிசோதித்துவிட்டு பயப்பட ஒன்றும் இல்லை discharge செய்துவிடலாம் என்று கூறினார்கள். ஒரு Junior Doctor குழந்தையை எப்படிப் பராமரிக்கவேண்டும் என்று கூறி 10 நாள் கழித்து மீண்டும் checkupக்கு வாருங்கள் என்று கூறினார். சிறிது நேரம் கழித்தபின் Chief Doctor உங்களை அழைக்கின்றார், முக்கியமாகப் பேசவேண்டும் என்று கூறினார் என்று ஒரு Doctor சொல்ல என்னவோ ஏதோ என்று உள்ளே செல்ல, என் சகோதரியிடம் குழந்தை பற்றிப் பேசக் கூப்பிடவில்லை நீங்கள் குழந்தை அருகே அமர்ந்து படித்த அந்த சாவித்ரி புக்கைத் தாருங்கள் நான் படித்துவிட்டுத் தருகிறேன் என்று கூறினார். எனக்கு அன்னையே அனைவரையும் ஆட்கொள்கிறார்கள் என்று புரிந்தது. Discharge ஆகி வரும்போது வழியில் கட்டை மீசைக்காரர் ஒருவர் hospital அருகில் பகவானின் புத்தகம் ஒன்றைப் படித்தபடி இருந்தார். அவர் என்னை நிமிர்ந்து அமைதியாகப் பார்த்துவிட்டு புத்தகத்தில் ஆழ்ந்தார். எங்களைப் பத்திரமாகப் பாதுகாக்கின்ற பகவானே இவர் என்று கருதினேன். வீட்டிற்கு மற்றவர்கள் ஆட்டோவில் வர நானும் தம்பியும் Busஇல் வந்தோம். Busஇல் வந்தபோது தம்பி என்னிடம் Result வந்தபடி எதுவுமே நடக்கவில்லை. முதலில் வந்த resultஇல் உள்ளதற்கும் இரண்டாவது வந்ததிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இரண்டு நாளில் இவ்வளவு மாறுபாடு வரவே வராது. இரண்டுமே உண்மைதான். ஆனால் இடையே அன்னை சரிசெய்து உள்ளார்கள். அன்னை நம்மைக் கைவிடவே இல்லை என்றான். உண்மைதான் நான் அவனிடம் செலவுகூட குறைவாகத்தான் ஆயிற்று என்று கூறினேன். வீட்டிற்கு வந்தவுடன் என் அப்பா என்னிடம் தங்கள் ஆட்டோ வரும்போது கூடவே அன்னையின் வாகனம் என்ற மற்றோர் வாகனம் வந்ததாகவும் அன்னையே பத்திரமாக அழைத்து வந்ததாகவும் கூறிச் சந்தோஷப்பட்டார்.

     ஸ்ரீ அன்னையின் அருளால் குழந்தை வர்ஷாவிற்கு வந்த பெரிய கண்டம் நீங்கிவிட்டது. மருத்துவம், அறிவியல் எல்லாவற்றையும் தாண்டி அன்னையின் அருள் செயல்பட்டு அனைத்தையும் மாற்றிவிட்டது. இந்தப் பிரச்சனை வந்து போனதில் மேலும் ஒருபடி அன்னையை நெருங்கி உள்ளோம்.

      குழந்தை ஸ்ரீவர்ஷா நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற அன்னையின் ஆசீர்வாதம் வேண்டுகிறேன்.

....

 



book | by Dr. Radut