Skip to Content

சாவித்திரி

P. 4 Obeyed the unforeseeing instant's urge,

 

எதிர்பாராத உந்தலை ஏற்கும் மனிதன்,

மனிதன் தன்னை அறியாதவன், தன் வாழ்வு ஆழத்திற்குரியது எனத் தெரியாதவன். தன்னையேயறியாதவன், தன் ஆழத்தை அறிய முடியாது. அவன் உந்தல்கள் அனைத்தும் உற்பத்தியாவது அவ்வாழ் மனதில், அவற்றை அவனால் மீறமுடியாது.

ஒரு திசையில் செல்லும் மனிதனை ஆழத்து உந்தல் அடுத்த திசைக்கு இழுக்கும்பொழுது தன்னை மீறி அதை மனிதன் ஏற்பது அவன் அன்றாட வாழ்வு நிலை.

மனிதன் மனத்திற்குரியவன். மனம் இரு பகுதிகளாலானது. நாமறிவது மேல் மனம், நம் எண்ணங்களும், ஆர்வங்களும் அங்குள்ளன. அவற்றையே முடிவாக நாம் ஏற்கிறோம். கல்லூரி மாணவன் வாழ்க்கை அவன் வீட்டிற்குரியது. ஹாஸ்டலுக்குரியதன்று. ஹாஸ்டல் வாழ்வே முடிவானது என நினைக்கும் மாணவனைப் போன்றது மனித வாழ்வு. ஹாஸ்டலில் கட்டும் கோட்டைகளை வீட்டிலிருந்து வரும் ஒரு கடிதம் தகர்க்கும். வீடு நிலையானது, ஹாஸ்டல் தற்காலிகமானது. வீட்டிலிருந்து எழும் உத்தரவுகளை மாணவன் எதிர்பார்ப்பதில்லை, வந்தால் மறுக்கமுடியாதபடி ஏற்றுக்கொள்கிறான்.

மேல் மனத்தில் வாழும் மனிதன் ஆழ்மன உந்தல் எழுவதை எதிர்பார்ப்பதில்லை. வந்தால் தவிர்க்க முடியாதவை என ஏற்று அதன்படிச் செயல்படுகிறான். இது சம்பந்தமான கருத்துகளை, சாவித்திரி விவரிக்கிறது.

  • கண் மூடித்தனமான வாழ்வின் சுழல்கள்.
  • விதியின் கதியைத் தாங்கும் மனிதன். 
  • தெரியும் வழிகளின் தெளிந்த அழகு.
  • நீர்க் குமிழின் நித்தியானந்தம்.
  • மனித வாழ்வுக்குப் புறம்பான புனிதம்.
  • ஆழ்ந்துறையும் ஆன்மாவின் அமைதி.
  • மனத்தைத் தட்டி எழுப்பும் அறை கூவல்.
  • ஆசையின் மாயை அறிவிக்கும் வண்ணங்கள்.
  • இதயத்தின் இனிமை உணர்வுக்குப் புறம்பு.
  • தெய்வத்தின் வருத்தம் தேங்கிய இதயம்.
  • நித்தியத்தை வெல்லும் அநித்தியம்.
  • காலமென்னும் படுகுழியில் சிறு அசைவு.

                                                       *****

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன்னை அறியும் நிலையிலேயே ஜீவியம் பிறக்கிறது. தன்னையறிய வேண்டிய அவசிய மில்லாதபொழுதும் சத்தியம் உண்டு.



book | by Dr. Radut