Skip to Content

“ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன்

கர்மயோகி

VIII. The Methods of Vedantic Knowledge

Page No: 66

Para No: 11

What we see is not true

It is apparent reality.

Fundamental Reality is behind.

We see the movement.

We see the formation.

Vedantic experience saw behind them.

 

Their analysis led them to a concept.

 

Sat is their last concept.

That was Brahman for them.

It is pure Existence.

They could not define it.

 

It was infinite.

It was absolute.

Our consciousness is ordinary.

Our experience is normal.

 

It does not warrant this conception.

 

Vedantic rishis went beyond them.

We live by senses.

Our mind is sense - mind.

8. வேதாந்த ஞானம்

 

 

நாம் காண்பது உண்மையன்று.

அது தோற்றம்.

சத்தியம் பின்னாலிருக்கிறது.

நாம் காண்பது அசைவு.

அது ரூபம்.

வேதாந்தம் அசைவையும், ரூபத்தையும் கடந்த பார்வையுடையது.

அவர்களுடைய ஆராய்ச்சி முடிவு பெற்றது.

அப்படி சத் என்பதைத் கண்டனர்.

அதைப் பிரம்மம் என்றனர்.

அது தூய்மையான சத்தாகும்.

விளங்கும்படிச் சொல்லக் கூடியதன்று சத் என்பது.

அது அனந்தம்.

பூரணமானது.

நம் ஜீவியம் எளியது.

நம் அனுபவம் அன்றாட வாழ்க்கைக்குரியது.

 

அதன் மூலம் பிரம்மத்தைக் காண முடியாது.

வேதாந்தம் நம் ஜீவியத்தைக் கடந்த பார்வையுடையது.

நம் வாழ்வு புலன்களாலானது.

நம் மனம் புலன்கட்குரியது.

Existence is pure.

It is absolute.

Senses do not know the existence.

Senses experience movement.

Form reveals to the senses.

Senses tell us about form and movement.

 

Forms exist.

They are not pure.

They are always mixed.

They are combined.

 

They are aggregated.

They are relative.

 

We can go within ourselves.

 

Precise form vanishes then.

But movement remains.

 

Change persists even inside.

Matter is in motion.

Motion is in Space.

Motion is in Time.

They seem to be the conditions of existence.

 

We may call this existence.

 

The ideas of existence are no reality.

 

They correspond to no discoverable reality.

There is the phenomenon of self-awareness.

 

We can go behind it.

 

There is something immovable

சத் பிரம்மம் தூய்மையுள்ளது.

பூரணமானது.

புலன்கள் பிரம்மத்தை அறியா.

புலன்கள் அனுபவிப்பது சலனம்.

ரூபம் புலனுக்குப் புலப்படும்.

புலன் நமக்குச் சலனத்தையும் ரூபத்தையும் அறிவிக்கின்றது.

ரூபம் உண்மை.

அவை தூய்மையானவையில்லை.

கலப்படம் ரூபத்தின் தன்மை.

இணைந்திருப்பது ரூபத்தின் இயல்பு.

பல சேர்ந்த நிலை ரூபத்தின் சுய உருவம்.

ரூபம் வாழ்வுக்குரியது.

உள்ளே சென்று நாம் உணரவேண்டும்.

 

ரூபத்தின் சிறப்பு அங்கே மறைகிறது.

சலனம் நிலைத்து நிற்கிறது.

உள்ளே மாற்றம் உருவத்துடனிருக்கிறது.

ஜடம் அசைகிறது.

ஜடம் அசைய இடம் தேவை.

அசைவு காலத்திற்குரியது.

காலமும், இடமும் சிருஷ்டிக்கேயுரியவை எனத் தோன்றுகிறது.

இதையே சிருஷ்டி எனவும் கூறலாம்.

சிருஷ்டியைப் பற்றி அறிவது முடிவில்லை எனவும் தோன்றும்.

எந்த சத்தியமும் அதன் மூலம் வெளிப்படாது.

சில சமயங்களில் ஆத்மானுபவம் பெறுகிறோம்.

அதன் பின்னும் சில சமயங்களில் காண்கிறோம்.

அசைவற்றதை அங்குக் காண்கிறோம்

It is the beginning of higher knowledge.

 

Reason comes later.

It examines the shining harvest.

Reason profits from Intuition.

 

Man's reason is lower reason.

It presents a contradiction.

It pursues man forever.

It is his normal experience.

There is something behind.

It is beyond.

Intuition gives us that idea.

 

Man formulates that formless perception.

It is more positive of God, Immortality.

Intuition impels man to do them.

 

God, Immortality, Heaven represent what is beyond.

 

Intuition is strong.

It is strong like Nature.

It springs from Nature.

 

The very soul of Nature gives birth to Intuition.

It is contradicted by experience.

Also reason denies it.

Intuition cares nothing for these denials.

 

Intuition knows what is.

It knows what it is.

It knows it because it is of it.

அதுவே ஆத்ம ஞானத்தின் ஆரம்பம்.

பகுத்தறிவு பின் தொடர்கிறது.

பகுத்தறிவு ஞானம் பெற்றதைப் பரிசீலனைசெய்கிறது.

நேரடி ஞானத்தால் பகுத்தறிவு பலன் பெறுகிறது.

மனித அறிவு தாழ்ந்தது.

அது முரணானது.

நம் வாழ்வை அது நிரப்புகிறது.

இதுவே நம் அன்றாட அனுபவம்.

அதைக் கடந்ததுண்டு.

அது கடந்த நிலை.

நேரடி ஞானத்தால் நாம் அதை அறிகிறோம்.

உருவமற்றதை மனிதன் உருவகப்படுத்துகிறான்.

அமர வாழ்வு கடவுள் என்பதாகும்.

அதைச் சாதிக்க நேரடி ஞானம் உந்துகிறது.

சொர்க்கம், கடவுள், அமர வாழ்வு என்பவை கடந்த நிலையைக் குறிக்கின்றன.

 

நேரடி ஞானம் வலுவானது

இயற்கை போன்ற வலுவுடையது.

 இயற்கையினின்று பிறந்தது.

நேரடி ஞானம் இயற்கையின் ஆழத்திலிருந்து பிறந்தது.

அனுபவம் அதற்கெதிரானது.

பகுத்தறிவு அதை மறுக்கிறது.

நேரடி ஞானம் மறுப்பைப் பொருட்படுத்துவதில்லை.

தான் யாரென நேரடி ஞானம் அறியும்.

சத்தியத்தையும் அது அறியும்.

சத்தியத்திருஷ்டியிலிருந்து பிறப்பதால், நேரடி ஞானம் அதை அறியும்.

 

It is immutable.

We get a glimpse of it.

It is vague.

 

We perceive it.

We imagine it to be beyond life and death.

We think it is beyond formation and action.

 

This is a door.

Sometimes it swings open.

Beyond is the splendour of truth.

It shuts at once.

 

The door, before shutting, allows a ray to pass.

The ray touches us.

 

It is a luminous imitation.

We may hold on to it.

 

It needs strength and faith.

That gives a new starting point.

It is another play of consciousness.

It is of Intuition.

It is different from sense-mind.

Page No: 67

Para No: 12

We must examine carefully.

We make a discovery.

Intuition is our first teacher.

The Unknown is behind.

 

It has brilliant messages.

Intuition brings these messages.

அது அழிவற்றதுமாகும்.

அதன் சாயல் தெரிகிறது.

தெளிவற்ற உருவம் அதனுடையது.

நமக்கு அது புலப்படுகிறது.

வாழ்வையும், மரணத்தையும் கடந்ததாக நாம் நினைக்கிறோம்.

செயலையும், ரூபத்தையும் கடந்ததாகத் தோன்றுகிறது.

அது பெரு வாயில்.

சட்டென அது திறப்பதுண்டு.

சத்தியத்தின் அற்புதம் கண்ணில் படுகிறது.

உடனே திறந்த கதவு மூடுகிறது.

மூடுமுன் மின்னல்போல் காட்சி தெரிகிறது.

ஓரிழை ஒளி நம்மைத் தீண்டுகிறது.

ஜோதிமயமான தோற்றம் அது.

நாம் அதைப் பிடித்துக் கொள்ளலாம்.

நம்பிக்கையும் பலமுமிருந்தால் முடியும்.

அது புதிய திருப்பம்.

அது ஜீவியத்தின் புதிய நிலை.

அது நேரடி ஞானம்.

இது புலனறிவைக் கடந்த நிலை.

 

 

நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

புதியன புறப்படும்.

நேரடி ஞானம் கற்பிக்கப்படுகிறது.

திரை மறைவில் இதுவரை காணாததுள்ளது.

அது அற்புதமானது.

நேரடி ஞானம் அதை நமக்குணர்த்துகிறது.

It has come from that.

The denial is a becoming.

The contradiction is an appearance.

Intuition will not yield to these.

 

There is a point of light in us.

This is the advantage of Intuition.

 

It opened the door in our self-awareness.

Intuition proceeds from this point.

 

Therefore Intuition tells us of it.

It speaks of Existence.

 

Better still, it speaks of the Existent.

 

Ancient Vedanta seized this message.

 

This is from Intuition.

Vedanta formulated it in three great declarations.

"I am He", "Thou are That", "All this is Brahman, this Self is Brahman" are the three declarations.

 

 

Cond..

அதனினின்று வருவது இது.

மறுப்பு இயற்கைக்குரியது.

முரண்பாடு தோற்றம்.

நேரடி ஞானம் இவற்றை ஏற்பதில்லை.

நம்முள் பொறியான ஜோதியுண்டு.

இப்பொறியே நேரடி ஞானத்திற்கு ஆதரவு.

நம்மை அறிய உதவும் கதவு இப்பொறி.

நேரடி ஞானம் இங்கிருந்து புறப்படுகிறது.

ஞானம் நமக்கிதை உணர்த்துகிறது.

சத்தைப் பற்றி அது கூறுகிறது.

 

மேலும் சத் புருஷனைத் பற்றிக் கூறுகிறது.

வேதாந்தம் இதைப் பற்றிக் கொண்டது.

அதைக் கூறியது நேரடி ஞானம்.

மூன்று மந்திரங்களாக அதை வேதாந்தம் புனைந்தது.

"நானே அவன்'', "நீயே அது'', "சர்வம் பிரம்மம், ஆத்மா பிரம்மமாகும்'', என்பவை அம்மந்திரங்கள். சோகம் அகம் பிரம்மம். சர்வம் பிரம்மம்.

தொடரும்...

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

தொந்தரவை விலக்க, பிரச்சினையைத் தீர்க்க, வாய்ப்பை எழுப்ப, ஜீவியம் செறிய, திருவுருமாற்றமடைய அன்னையை அழைப்பது பல்வேறு நிலைகளிலுள்ளன. ஒவ்வொன்றும் அடுத்ததிலிருந்து வேறுபட்டது. ஆனால் அனைத்தையும் அழைப்பு என்கிறோம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதனால் முடியாத இடத்தில் அன்னை ஆரம்பிக்கின்றார். மனிதன் அழைக்கும் நேரம் அன்னை செயல்படுகிறார். மனித முயற்சி அகந்தையின் வெளிப்பாடு. மனித முயற்சி அவசியம். ஆனால் அன்னையைப் புறம்பாக்கும் முயற்சி கூடாது.

அன்னையை அழைத்து அவருள்ளே வந்தபின் அன்னை செயல் நம்மில் பூர்த்தியாக முயற்சி தேவை.book | by Dr. Radut