Skip to Content

லைப் டிவைன் கருத்து

P.30 The perfect human soul must be able to move to Non-Existence without losing hold of Existence.

 

தன் கட்சியை எடுத்துச் சொல்பவன் அரசியல்வாதி (politician). தான் ஒரு கட்சியைச் சேர்ந்தவனானாலும், நாட்டின் நன்மையைக் கருதுபவன் தேசபக்தியுள்ள அரசியல்வாதி (statesman).

மனிதன் குடும்பம் நடத்தலாம், அல்லது துறவறம் பூணலாம். ஒன்றை விட்டபிறகுதான் அடுத்ததை நாட முடியும் என்பது உலக அனுபவம். ஸ்ரீ அரவிந்தம் குடும்பஸ்தனுக்கு துறவியின் தூய்மையையும், துறவிக்கு இல்லறத்தின் பொறுப்பையும் வழங்குகிறது. குடும்பத்தை மட்டும் நடத்த முடியும் என்பதே இதுவரை உலகம் கண்ட உண்மை. துறவற நெறி பெரியது. குடும்பப்பொறுப்புகளை ஏற்றால் துறவறத்திற்குரிய சக்தியிருக்காது. மேலும் குடும்பம் ஆசை, பாசம், பற்றாலானது. பற்றறுத்த பின் ஆண்டவனைத் தேடுவது துறவறம். இது காணும் மனிதன் இரண்டில் ஒன்றை நாடினான். மனிதன் பூரணம் பெற,

  • துறவறத்தின் தூய்மை தேவை,
  • பாசமும், பற்றும் குறையானவை,
  • அவை அன்பாக மாற வேண்டும்,
  • அது எல்லா மனிதர்களாலும் இயலாது,
  • அன்பும், தூய்மையும் நிறைந்த இல்லறம் பூரணமானது.
  • குடும்பப்பொறுப்பை, உலகப் பொறுப்பாக மாற்றுவது துறவறம்.
  • இடையறாது குடும்பத்தில் ஈடுபடுவதுபோல், உலகவாழ்வில் துறவி ஈடுபட வேண்டும்.
  • குடும்பவாழ்வை மனதாலும், உணர்வாலும், உடலாலும் அனுபவிப்பதைப்போல் துறவி உலக வாழ்வை அனுபவிப்பதே பூரணம் தரும். 
  • துறவறம் பெற, இல்லறம் விலக்கப்பட வேண்டியதில்லை.
  • பூரணமான மனித வாழ்வு துறவறத்தின் தூய்மையையும், இல்லறத்தின் இன்பப்பொறுப்பையும் ஆன்மீக உயர்வுக்கு உயர்த்த வேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

வக்கீல் தன் கட்சி ஜெயிக்கப் பேசுபவர். எதிர்க்கட்சி வக்கீல்  அவர் கட்சி ஜெயிக்க சட்டம் பேசுபவர். ஒரு வக்கீல் கட்சிக்காரன் ஜெயிக்க வேண்டும் என்று மட்டும் நினைக்காமல் சட்டம் ஜெயிக்க வேண்டுமென நினைத்தால், மனதால் அவர் நீதிபதியின் நிலைக்கு உயருகிறார். ஸ்ரீ அரவிந்தர் கூறும் சட்டம், நியாயமாகும். வக்கீல் எதிர்க்கட்சியின் நியாயத்தை ஏற்கும் மனப்பான்மையுடையவராக இருப்பதின் அவசியத்தைக் கூறுகிறார்.

நியாயம் நிலைக்க சட்டத்தை விளக்கும் மனப்பான்மை வக்கீலை ஜட்ஜ் நிலைக்கு உயர்த்தும்பொழுது வக்கீல் உயர்ந்த மனிதனாவது போல், இல்லறத்தையும் துறவறத்தையும் இணைக்கும் மனித உள்ளம் தெய்வநிலையை எய்தும் என்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

                                                              ******

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் அன்னையை அறிவால் புரிந்துகொண்டு அழைப்பதால் நம் ஆர்வத்தில் குறை ஏற்படுகிறது.



book | by Dr. Radut