Skip to Content

பகவானுடைய இதர நூல்கள்

Archives Dec. 1981

ஸ்ரீ அரவிந்தர் The Hindu, இந்து பத்திரிகையில் 1911 பிப்ரவரி 23ஆம் தேதி எழுதிய கடிதம் - அதன் பகுதிகள்

  • நான் புதுவையில் தங்கியுள்ளபொழுது என் நல்ல பெயரைக் கெடுக்க எடுக்கும் முயற்சிகளினின்று என்னைப் பாதுகாக்க இக்கடிதம்எழுதுகிறேன்.
  • கராச்சி, பஞ்சாபிலிருந்து என்னைப் பார்க்க வேண்டி வரும் "சிஷ்யர்''கள் - நான் பார்க்க மறுத்த பின்னும் - "என் பார்வை பட்டால் மோட்சம் கிடைக்கும் என நம்புபவர்கள்'', தூர இருந்து தரிசித்துப் போகிறோம் என்பவர்கள், புதுவையில் வலம் வருகிறார்கள், ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறார்கள்.
  • சுற்றியுள்ள போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்து அவர்கள் எனக்குக் கடிதம் எழுதுகின்றனர்.
  • அதுபோல் என்னை நாடி வருபவர்கட்கெல்லாம் நான் கூறுவது, "என்னைப் பார்க்க முயல்வது பயன் தாராது''.

அவர்கள் என்னுடன் பேசியதாகக் கூறுபவற்றை எவரும்   நம்பவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

  • நான் தனிமையில் வாழ்கிறேன்.

உள்ளூர் நண்பர்கள் சிலரும், நாட்டின் முக்கியஸ்தர்கள் சிலர் புதுவை வரும்பொழுதும் நான் சந்திக்கின்றேன். வேறு எவரையும் சந்திப்பதில்லை, சந்திக்க விரும்பவில்லை.

  • தேசத்தொண்டு செய்தபொழுது எவரும் எனக்கு ஊதியம் அளிக்கவில்லை என்பதை மக்களுக்கு நான் கூறவேண்டியதில்லை.
  • அரசியல் தொண்டு செய்ததற்கு எனக்கு எவரும் சன்மானம் தரவில்லை எனக் கூறத் தேவையில்லை. "வந்தேமாதரம்" பத்திரிகையில் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தபொழுது என் கட்டுரைகட்குச் சன்மானம் வந்தது தவிர நான் எவரிடமும் எதுவும் பெற்றதில்லை.
  • சென்னையில் சில இளைஞர்கள் என்னுடைய சிஷ்யர்கள் என்ற பெயரில் நானிட்ட சேவைகளைச் செய்வதாகவும், என் புதுவை வாசத்திற்குப் பணம் வசூல் செய்வதாகவும் கேள்விப்படுகிறேன். அவை உண்மைக்குப் புறம்பானவை.
  • பலர் திடீரென புதுவைக்கு வந்து என் இருப்பிடம் தேடி வருவதால் இக்கடிதம் எழுத நேரிட்டது.

- அரவிந்த கோஷ்

                                                             ******

அடுத்த மாதத்தில் வரும் தரிசனநாள்

ஆகஸ்ட் 15 பகவானின் ஜன்ம தினம்



book | by Dr. Radut