Skip to Content

06.அஜெண்டா

“Agenda”

Sri Aurobindo left without revealing the secret.

ஸ்ரீ அரவிந்தர் இரகஸ்யத்தைக் கூறாமல் போய்விட்டார்.

இரகஸ்யம் என்று அன்னை கூறுவது பெரியது. ஒஸாமாவை அமெரிக்கர்கள் வருஷத்திற்குமேல் தேடுகிறார்கள். கிடைக்கவில்லை. அவனிருக்குமிடம் தெரிந்தவனுக்கு ஒஸாமாவைப் பிடிப்பது எளிது. ஒரு காட்டில் புதையலைத் தேடுவது எப்படி? எத்தனையிடங்களைத் தோண்டிப் பார்க்க முடியும்? தெரிந்தவன் நேரே போய் கண்டுபிடிப்பான்.

பிரம்மாண்டமான மாற்றத்தை நாம் இப்பக்கத்திலிருந்து தேடுகிறோம். அடுத்த பக்கத்திலுள்ளவர்க்கு அதன் இரகஸ்யம் கண்ணுக்குத் தெரியும். நாம் தேடுவது 100 ஆண்டுகள், 1000 ஆண்டுகள் என ஆகலாம். இரகஸ்யத்தைக் கூறினால் உடனே கண்டுபிடிக்கலாம். அப்படிக் காணவேண்டிய இரகஸ்யங்கள் 3:

1) மனத்திற்குரிய இரகஸ்யம்

2) வாழ்வுக்குரிய இரகஸ்யம்.

3) உடலுக்குரிய இரகஸ்யம்.

The Life Divine மனத்திற்குரிய இரகஸ்யத்தை வெளிப்படையாகக் கூறுகிறது. இந்நூல் புரிந்தால் நாம் ஜட உலகினின்று சூட்சும உலகுக்குப் போகலாம். உலகில் விளங்காதது எதுவுமிருக்காது. எப்படி வறுமையை ஒழிப்பது, துன்பத்தைத் துடைப்பது, ஆதியின் இரகஸ்யமான பிரம்மத்தைக் காண்பது ஆகியவை இதனுள் அடக்கம்.

இரண்டாம் இரகஸ்யம் வாழ்வுக்குரியது. அன்னையின் கோட்பாடுகள் (10) அவற்றைக் கூறுகின்றன. ஆன்மாவை நம்பி, வசதி தேடாமல், குறை கூறாமல், வேலையைப் பிரியமாக ஏற்று, புறத்தை அகமாகக்கொண்டு, எந்த நேரமும் முன்னேறப் பிரியப்பட்டுச் சமர்ப்பணத்தை ஏற்றால் வாழ்வு அதிர்ஷ்டமாகவும், அருளாகவும் மாறும்.

மூன்றாம் இரகஸ்யம் உடல் திருவுருமாறுவது. அன்னைக்குக் கிடைக்கவில்லை. இந்த இரகஸ்யம் கிடைத்தால் மரணம் அழியும், சத்தியஜீவன் பிறப்பான். 100 ஆண்டுகள் வாழ்ந்தால் தமக்கு அது கிடைக்கும் என்றார் அன்னை. இதனுள் உள்ள கருத்துகள்,
 . சாதாரண பொருள்களைக் கொடுப்பதுபோல் பெரியவற்றைத் தரமுடியாது.

. அப்படிக் கொடுத்தால் அடுத்தவர் பெற்றுப் பயனடைய முடியாது.

. நாம் கொடுத்து அவர் பயனடையாவிட்டால், மீண்டும் எவருக்கும் அதைக் கொடுக்கும் திறனை நாம் இழப்போம்.

. என் ஞானத்தை நான் எவர்க்கும் தரமாட்டேன் என்பதும், தகுதியற்றவர்க்கு நான் வந்து தருவேன் என்பதும் ஒரே மனப்பான்மை.

. ஐரோப்பிய நாடுகளைக் கண்டு ஆசிய நாடுகள் வளம் பெறவில்லை.

. முஸ்லீமல்லாதாரை அழிக்கவேண்டும் என்று பேசும் முஸ்லீம்கள் தாங்கள் முன்னுக்கு வர முயலவில்லை.

. தேவைப்பட்டவர் வேண்டும் எனக் கேட்காமல் கொடுக்கக் கூடாது, கொடுக்க முடியாது, கொடுத்தால் பெறுபவர் கொடுப்பவருக்குக் கொடுமை செய்வார்.

. தயாரில்லாதவரைப் பெறும்படி வற்புறுத்துவது அவருக்குக் கொடுமை.

. Taste of Ignorance அஞ்ஞானம் ருசிக்கிறது என்பதே அது.

****


 



book | by Dr. Radut