Skip to Content

04.சாவித்ரி

"சாவித்ரி"

P.42 Where, by the miser traffickers of sense.

கருமியான உணர்வின் கயவாளித்தனம்

. இருள் எனும் பூதத்தின் பாதங்களின் பாதுகாப்பு.

. மிருதுவான இருளின் மென்மையான அரவணைப்பின் தூக்கம்.

. விலைமதிக்கமுடியாத நாணயம் உலகைக் காக்கும்.

. அழியாத பரந்த ஜோதி அன்பனை நாடி வருவதை எதிர்பார்க்கும்.

. ஜோதியின் மின்னல் தோற்றமளிக்கக் காத்திருந்தான்.

. சூரிய ஜோதியின் ஒளிமயமான உருவங்களைக் காக்கவேண்டும்.

. ஆண்டவனின் விரயம் அற்புதமான அழிச்சாட்டம்.

. சிருஷ்டியின் அட்டகாசத்துள் திடீரெனக் குதித்தான்.

. அதல பாதாளத்துள் அமைந்த வாழ்வு.

. பாதாளத்தின் பாதகர்கள் பறித்துப்போன பொக்கிஷம்.

. அழியாத பொய்யின் அழகு நிறைந்த கவசம்.

. எண்ணம் ஆசையாகி தீண்டமுடியாத இடம்.

. அறியாமை வெள்ளத்தின் குருட்டுப் படுகுழிகள்.

. கண்டுகொண்ட மனிதன் கடவுளாவான்.

. பார்வையைக் கடந்த பர்வத உச்சியின் தரிசனம்.

. குரலழிந்து எழுந்த குணச்சிறப்பு.

. உயர்ந்த உண்மையின் ஆழ்ந்த அறிவிப்பு.

. இரவே பகலாகி, பகலே இரவாகும் இயற்கையின் அமைப்பு.

. உலகத்தின் பண்புகள் உயர்ந்து வாழ்வை உன்னதமாக்கும்.

. பரந்த எண்ணமும், சிறந்த சொல்லும் நுழைந்த பாங்கு.

. மனித அறிவின் அமைதியான ஆராய்ச்சி.

. இரகஸ்ய உணர்வெழுந்து உற்று நோக்கியது.

. எங்கும் நிறை ஏகன் எட்டாத உயரத்தை எட்டிய நிலை.

இயற்கையில் விரயமில்லை என்பது ஸ்ரீ அரவிந்தம். புயல் சேதம், பூகம்பம் அழிக்கும் நகரங்கள், உப்பான கடல் நீர், உபரியாக ஐஸ், நாம் அன்றாடம் காணும் ஆயிரம் விரயங்கள் நம் அறியாமையின் விளைவுகள். சிருஷ்டியில் அதிகத் திறமைவாய்ந்தது இயற்கை. மனிதன் ஒரு சமயத்தில் ஒரு காரியத்தைச் செய்வான். அதை முடிக்க அத்தனை காரியங்களையும் அவன் நிறுத்திவிடுவான்.

. ஆயிரம் காரியங்களை ஒரே சமயத்தில் ஆரம்பித்து,

. ஆரவாரமாக அனைத்தையும் ஒரே சமயத்தில் பூர்த்திசெய்யும்,

. இயற்கையின் பாதை இருளாகவும், விரயமாகவும், இல்லாத பார்வைக்குப் புரிவது விரயம்.

 

**** 
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம், எண்ணம்; உணர்வு, நரம்பு; உடலுணர்வு, உடல்;ஆகியவை சேர்ந்து புறமனிதன் ஆகிறான். உள்மனம் விழிப்புற மனத்தில் எண்ணமற்று, அசைவற்ற உடல் உடலுணர்வுகள் அற்றுப்போகவேண்டும்.

****

 


 


 



book | by Dr. Radut