Skip to Content

02.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்''

                                                      லைப் டிவைன்

                                                               (சென்ற இதழின் தொடர்ச்சி....)                      கர்மயோகி
 

XII. Delight of Existence : The Solution

Page No.105 , Para No.10

12. ஆனந்தம் - விளக்கம்

Pleasure, pain and indifference is a triple vibration.

சந்தோஷம், வலி,

பராமுகம் ஆகியவை மூன்று உணர்வுகள்.

It is superficial.

அவை மேலெழுந்தவாரியானவை.

This is an arrangement of our evolution.

இது நம் பரிணாமத்திற்குரிய ஏற்பாடு.

Our evolution is imperfect.

நம் பரிணாமம் குறையுடையது.

It can have no absoluteness.

அதற்குப் பூரணமில்லை.

It can have no necessity.

அதற்கு அவசியமில்லை.

We are habit bound.

நாம் பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்கள்.

There is the habit of pain or pleasure.

வலியோ, சந்தோஷமோ நமக்குப் பழக்கம்.

We are obliged to this habit.

இப்பழக்கங்கள் நம்மை ஆட்கொள்ளும்.

There is no real obligation about response.

நாம் அவ்வுணர்வை அனுபவிக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.

A particular contact does not compel a particular response.

ஒரு குறிப்பிட்ட செயலுக்கு ஒரு குறிப்பிட்ட உணர்வு என்ற நிர்ப்பந்தம் இல்லை.

A particular habit gives pain or pleasure.

ஒரு குறிப்பிட்ட செயல் வலி யையோ,

சந்தோஷத்தையோ தரலாம்.

The recipient has that as a constant relation.

அனுபவிப்பவருக்கு அது நிரந்தரமானது.

Such a contact is established.

அத்தொடர்பு நிலையானது.

It is done by nature.

இது இயற்கைக்குரியது.

We can give an opposite response to the habit.

நாம் பழக்கத்திற்கு எதிரானதை உணரலாம்.

We are capable of it.

அது நம்மால் முடியும்.

We can feel pleasure where we used to have pain.

நாம் வலிபட்ட இடத்தில் சந்தோஷம் அனுபவிக்க முடியும்.

We can do the opposite too.

நாம் எதிரானதையும் செய்யலாம்.

The Bliss-Self in us has inalienable delight.

நம் ஆனந்த-ஆத்மாவுக்கு நீங்காத இன்பமுண்டு.

It is its constant experience.

ஆனந்தம் அதன் மாறாத அனுபவம்.

It is our true, vast Self.

அது நம் உண்மையான பரந்த ஆத்மா.

Our superficial being feels pain or pleasure.

மேலெழுந்த நம் மனம் வலி, சந்தோஷத்தை அனுபவிக்கிறது.

It responds with indifference too.

அதனால் பராமுகமாகவுமிருக்க முடியும்.

It is a mechanical reaction.

இது இயல்பாக நடப்பது.

We can accustom this being to feel Delight

நம் ஜீவன் ஆனந்தமனுபவிப்பது நமக்குப் பழக்கமாகலாம்.

This is a great conquest.

இது நடந்தால் பெரு வெற்றி.

It is a deeper self-possession.

இது ஆழ்ந்த சுய ஆட்சி.

This self-possession is complete.

இவ்வகையாகச் சுய ஆட்சி பூரணம் பெறுகிறது.

It is better than a glad detachment.

சந்தோஷமாக விலகியிருப்பதைவிட இது பெரியது.

Our surface has the habitual reaction.

நமது மேல் மனம் பழக்கத்திற்கு உட்பட்டது.

Detachment is acceptance without subjection.

விலகியிருப்பது அடிமைப்படாமல் ஏற்பது.

It is a free acquiescence in imperfect values of experience.

குறையான அனுபவத்தை விரும்பி ஏற்பதாகும் அது.

This is a conversion of the imperfect into the perfect, false into true.

நாம் சொல்வது குறையை நிறையாக்குவதாகும், பொய்யை மெய் ஆக்குவதாகும்.

Mental being experiences dualities.

மனம் இரட்டைகளை அறியும்.

Spiritual delight replaces the dualities.

ஆன்மீக ஆனந்தம் இரட்டைகளை உணர்வதை மாற்றவல்லது.

Page No.105 Para No.11

 

Reactions are pure habitual reality.

எரிச்சல் பழக்கத்தால் வருவது.

Pleasure and pain are such habits

சந்தோஷமும், வலி யும் அப்படிப்பட்டவை.

They are the things of the mind.

அவை மனத்திற்குரியவை.

It is not difficult to perceive this truth.

இவ்வுண்மையை அறியமுடியும்.

There is the nervous being in us.

நம்முள் உணர்ச்சி மண்டலம் உண்டு.

There is a fixedness in us.

நம் பழக்கங்கள் உறுதியானவை.

It is a false impression of absoluteness in these things.

இவை மாறாதவை என நாம் தவறாக நினைக்கிறோம்.

The nervous being is accustomed to this falsehood.

நரம்பு மண்டலம் இப்பொய்யை நம்புகிறது.

There are pleasant things to the nervous being.

உணர்வு இனிமையாக இரசிப்பவையுண்டு.

They are victory, success, honour, good fortune, etc.

வெற்றி, ஜெயம், மரியாதை, அதிர்ஷ்டம் என்பவையுண்டு.

To it, it is absolute.

நமக்கு இவை முடிவானவை.

They must produce joy as sugar is sweet.

சர்க்கரை இனிப்பதுபோல் அவை சந்தோஷம் தரும்.

There are unpleasant things to the nervous being.

உணர்வை உறுத்துபவையுண்டு.

They are unpleasant in themselves, absolutely.

அவை உண்மையிலேயே உறுத்துபவை.

They are defeat, failure, disappointment, disgrace, evil fortune.

தோல்வி, நஷ்டம், ஏமாற்றம், அவமானம், தரித்திரம் போன்றவை அவை.

They must produce grief as wormwood is bitter.

விளக்கெண்ணெய் கசப்பதைப்போல் அவை வருத்தம் தரும்.

These are facts, normal to it.

இவை உண்மையென உணர்வு அறிகிறது.

To vary them is departure from fact, abnormal, morbid.

இவையில்லை என்பது உண்மையைப் பொய் என்பதாகும்.

The nervous being is enslaved to habit.

உணர்வு பழக்கத்தால் செயல்படுவது.

It is a device of nature.

இது இயற்கையின் உபாயம்.

Nature desires constancy of reaction.

இயற்கைக்குப் பழக்கம் மாறக்கூடாது.

It desires sameness of experience.

அனுபவம் அதேபோலிருப்பது அதற்கு அவசியம்.

It seeks a settled scheme of man's relations to life.

வாழ்வு வழக்கத்திற்குரியது என்பது இயற்கையின் இயல்பு.

The mental being is free.

மனம் சுதந்திரமானது.

Nature has devised the mental being for variation.

பல்வேறு அனுபவங்களைப் பெற இயற்கை மனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nature seeks flexibility through the mental being.

மனத்தின்மூலம் இயற்கை மாற்றங்களை நாடுகிறது.

Mental being brings change and progress.

மனம் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரும்.

Its subjection is by choice.

பழக்கத்தை ஏற்பது நம் இஷ்டம்.

It can choose to dwell in our mental habit.

ஒரு பழக்கத்தை மனம் முடிவாக ஏற்கலாம்.

For this it allows itself to be dominated by the nervous being.

அதற்காக மனம் உணர்வுக்கு அடிமையாகிறது.

The mental being is not bound to habits.

மனம் பழக்கத்தை ஏற்கும் நிர்ப்பந்தமில்லை.

It need not grieve by defeat, disgrace, loss.

தோல்வி, அவமானம், நஷ்டம் அதற்குப் பொருட்டன்று.

It can meet them with a perfect indifference.

அவற்றை மனம் அசையாமல் ஏற்கலாம்.

It can do so with perfect gladness.

சந்தோஷமாகவும் ஏற்கலாம்.

Man can refuse to be dominated by his nerves and body

உடலுக்கோ, உணர்வுக்கோ மனிதன் அடிமையில்லை.

The more he refuses, the greater is his freedom.

மறுப்பிற்குரிய சுதந்திரம் உண்டு.

He is now implicated in his vital, physical parts.

மனிதன் உடலாலும், உணர்வாலும் சிக்கலில் உள்ளான்.

That makes him a slave to external touches.

அது மனிதனைப் புற உலகின் அடிமையாக்கும்.

Refusing to be so dominated, he becomes the master.

புற ஸ்பர்சத்தை மறுத்தால் மனிதனுக்கு விடுதலையுண்டு.

He becomes the master of his own responses.

தான் எதைச் செய்யவேண்டும் என்பதைத் தானே நிர்ணயிப்பான்.

He responds to the world's touches as he likes.

தான் விரும்புமாறு உலகைச் சந்திக்கும் உரிமை அவனுக்குண்டு.

Contd...

தொடரும்....

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எல்லாம் இறைவன் செயலென நாம் அறிவோம். நமக்கு முக்கியமான விஷயங்களில், இறைவனிடம் செயலை ஒப்படைப்பதற்குப் பதிலாக, நாமே பெரிய பொறுப்பை ஏற்று பெரிய ஆர்வத்துடன் செயல்படுகிறோம். நம்மால் எதுவும் முடியவில்லை என்ற பின்னரேதான், "இனி நடப்பது நடக்கட்டும். எல்லாம் அவன் செயல்'' என்போம். முடியாது என்றபொழுது "அவன் செயல்'' என்று சொல்வதைப்போல், "எல்லாம் என்னால் முடியும்'' என்றபொழுதும், "எல்லாம் அவன் செயல்'' என்று அவனிடம் நம் பொறுப்பை ஒப்படைத்து, செயலில் ஆர்வம் காண்பிப்பதற்குப் பதிலாக, அவனிடம் காரியத்தை ஒப்படைக்க ஆர்வம் காண்பிப்பது நல்லது.


 

முடியும் என்றாலும் அவன் செயல் எனில் அவன் செயல்படுவான்.


ஸ்ரீ அரவிந்த சுடர்

சிலருக்கு ஒரு நல்லது செய்தவுடன் வாழ்வு நமக்குப் பல நல்லவற்றைச் செய்யும். வேறு சிலருக்குக் கெடுதல் செய்தால் வாழ்வு முன்போலவே தொடர்ந்து பல நல்லவற்றைச் செய்யும். நெருங்கியவர்களும், தூரத்து நண்பர்களும் இதற்கு உட்பட்டவர்கள். இதற்கு முடிவான கட்டம் நம்முள் உள்ளது. நம்மிடம் உள்ள சில நல்ல அம்சங்களுக்கு நல்லது செய்தாலும், சில கெட்ட அம்சங்களுக்குக் கெட்டதைச் செய்தாலும் உடனே பல நல்ல காரியங்கள் நடைபெறும்.

நல்லதற்கும் கெட்டதற்கும் நல்ல பலனுண்டு.

****
 


 


 


 


 


 


 


 book | by Dr. Radut