Skip to Content

12.சுபாவம்

சுபாவம்

- பிறப்பில் அமைந்தது.

- பிரம்மம் சுயரூபத்தை சுபாவத்தால் வெளிப்படுத்துவது சிருஷ்டி.

- சுபாவம் மாறாது என்பது கீதை.

- மாறாத சுபாவத்தையொட்டி செய்யும் யோகம் சுபாவத்தைத் திருவுருமாற்றும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

- ரூபம் மனத்திற்குரியது; பாவம் உணர்வுக்குரியது. சுயரூபம், சுபாவத்தால் வெளிப்படுவது மனித இயற்கை. அதுவே அவன் வாழ்வை நிர்ணயிக்கிறது.

- நான் தரித்திரமாகப் பிறந்தால் எனது சுபாவம் தரித்திரம். இது திருவுருமாறினால் அதிர்ஷ்டமாகும். தரித்திரம் என்ற சுபாவம் கோபம், சோம்பேறித்தனம், சிக்கனம், அல்பம், சிடுமூஞ்சி போன்ற குணங்களால் வெளிப்படுவது. சாந்தம், சுறுசுறுப்பு, தாராளம், பெருந்தன்மை, இனிமை அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தும் குணங்கள். தரித்திரத்திற்குரிய குணங்களை, அதிர்ஷ்டத்திற்குரிய குணங்களாக மாற்றினால் தரித்திரம் அதிர்ஷ்டமாகும். நம்மால் அதைச் செய்ய முடியாது. அன்னையைச் சரணடைந்தால் அவர் நம் தரித்திரத்தை அதிர்ஷ்டம் ஆக்குவார்.

- பரம்பரையாகத் தரித்திர ராசி பெற்ற குடும்பம். அவ்வீட்டார் போகுமிடங்களெல்லாம் தரித்திரம் பற்றிக்கொள்ளும். அவ்வீட்டு மனிதனால் தரித்திரம் பெற்றவர் அன்னை வீட்டை அடைந்து, தான் பெற்ற தரித்திரத்தை இழந்து, அவ்வீட்டு மனிதனை அன்னைக்கு அறிமுகப்படுத்தியதால்,

தரித்திரம் திருவுருமாறி அதிர்ஷ்டமாயிற்று.

-எத்தனை ரூபாய் சம்பளமாகப் பெற்றாரோ, அத்தனை

கோடி சம்பாதித்தார்.

****



book | by Dr. Radut