Skip to Content

11.திருப்திப்படுத்த முடியாது

திருப்திப்படுத்த முடியாது

நாம் பிறர் இனிக்கப் பழக முயல்கிறோம். அது சில சமயங்களில் அடுத்தவரைத் திருப்திப்படுத்துவதாக அமையும். எப்படியாவது மனைவியைத் திருப்திப்படுத்த வேண்டும், தகப்பனாரை, நண்பரைத் திருப்திப்படுத்தவேண்டும் என்று முயன்றவர் வென்றதில்லை.எவரைத் திருப்திப்படுத்த முயல்கிறோமோ அவருக்கு நம் மீது அதிருப்தி ஏற்படும், மனஸ்தாபம் வரும், எதிரியாவர். "உன்னைச் சமாதி கட்டிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்'' என்பார்.இவையெல்லாம் எளியவர்களிடம் நடக்கும். ஒரு கட்டத்தில் பிரச்சினை மனிதனைக் கடந்து வாழ்வுக்குப் போகும். உன் கீழ் வேலை செய்யும் குமாஸ்தாவைத் திருப்திசெய்ய முயன்றால் அவன் மானேஜரை மட்டம் தட்டுவான். ஆபீஸ் சட்டத்திற்கு எதிராக நடப்பான். உன்னையே அழிக்க ஆசைப்படுவான்.

- அடுத்தவரைத் திருப்திப்படுத்த முடியாது, கடமையை மட்டும் செய்யலாம்.

-,தாயாரைத் திருப்திப்படுத்தலாம், தகப்பனாரைத் திருப்திபடுத்தலாம். இருவரையும் திருப்திப்படுத்த முடியுமா? அவர்களுக்குள் பேதம் வந்தால் என்ன செய்வாய்?

- மானேஜரைத் திருப்திப்படுத்த முயன்ற முதலாளியை அவன் கம்பெனி ஆரம்பிக்கும் முன்னரே, "எனக்குக் கம்பெனியைக் கொடுத்துவிடுங்கள்" என்றான்.

- சுயநலமிக்கு இப்பிரச்சினைகள் எழா. நல்லவர் படும் பாடு இவை.

****



book | by Dr. Radut