Skip to Content

02.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்''

லைப்டிவைன்                                                                                                           கர்மயோகி
 

XI. Delight of Existence : The problem

Page No. 94 Para No. 7

11. ஆனந்தம் - கேள்வி

Sachchidananda is God.

சச்சிதானந்தம் கடவுள்.

That is our reason.

அதுவே நம் அடிப்படை.

God is the author of existence.

கடவுள் சிருஷ்டிக்கர்த்தா.

How can God create pain?

கடவுள் எப்படி துன்பத்தை சிருஷ்டி செய்ய முடியும்?

How can he inflict it on his creatures?

அவனுடைய படைப்புக்கு எங்ஙனம் அவன் வலி தருவான்?

How can he sanction pain?

வலிக்கு அனுமதி தர அவன் முன் வருவானா?

By what reason does He permit evil?

எந்தக் காரணத்தால் இறைவன் கொடுமையை அனுமதிப்பான்?

God is All-Good.

கடவுள் நல்லவர்.

Who then created pain and evil?

அப்படியானால் யார் வலியையும்,

தீமையையும் உற்பத்தி செய்தது?

We say pain is a trial.

வலி ஒரு சோதனை என்று கூறலாம்.

We say it is an ordeal.

வேதனை என்றும் கூறலாம்.

That does not solve the moral problem.

அது தர்மத்தை விளக்குமா?

It makes God immoral or non-moral.

கடவுள் தர்மத்திற்குப் புறம்பானவர், அதர்மமானவர் என்றாகாதா?

We make God an excellent world-mechanist.

நாம் கடவுளை உயர்ந்த மெக்கானிக்காக்குகிறோம்.

He then becomes a cunning psychologist.

இது உண்மையானால், கடவுள் திருட்டு மனப்பான்மையுடையவர் என்றாகும்.

He is then not a God of Good or Love.

அப்படியானால் கடவுள் அன்புருவானவரில்லை.

We can worship a God of Love.

நாம் அன்பை வணங்கலாம்.

Now He is a God of Might.

இக்கடவுள் வலிமை மிக்கவர்.

We must submit to the law of Might.

பலத்திற்குப் பணியவேண்டும்.

He is known for his caprice.

ஆண்டவன் அவனிஷ்டம்போல் நடப்பான்.

He may propitiate his caprice.

அதற்கும் நாம் துதிபாடவேண்டும்.

This God has invented torture and cruelty.

இக்கடவுள் கொடுமையையும், சித்ரவதையையும் சிருஷ்டித்தது.

Torture, for him, is a means of test or ordeal.

கொடுமை, சோதனை, வேதனை.

It means He is deliberately cruel.

வேண்டுமென்றே ஆண்டவன் கொடுமை செய்வதாகிறது.

Or, He is morally insensible.

கடவுளுக்கு மனச்சாட்சியில்லை என்றாகும்.

He stands convicted of either.

இரண்டில் ஒன்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

He may be a moral being.

கடவுள் தர்மதேவதையாக இருக்கலாம்.

Then He is inferior to the highest instincts of men.

இது உண்மையானால் ஆண்டவன் மனிதனைவிடத் தாழ்ந்தவன் என்றாகும்.

There is a desire to escape this obstacle.

இந்த இக்கட்டிலிருந்து மீள விரும்புகிறோம்.

It is a moral difficulty.

இக்கட்டு மனச்சாட்சிக்கு.

Therefore, we say pain is an inevitable result.

எனவே வலி தவிர்க்கமுடியாதது என்கிறோம்

It is a natural punishment for evil.

கொடுமை பெறும் தண்டனை வேதனை என்று கூறுகிறோம்.

Moral evil attracts punishment.

கொடுமை தண்டிக்கப்படவேண்டுமல்லவா?

We may say so, but it is not true.

நாம் இவற்றையெல்லாம் கூறலாம். ஆனால் அவை உண்மையில்லை.

It will be true only if we accept karma.

கர்மத்தை ஏற்றால் இவை உண்மையாகும்.

Not only karma, we must accept rebirth also.

கர்மத்துடன், புனர்ஜென்மத்தையும் ஏற்கவேண்டியிருக்கும்.

This is not a true explanation.

இது சரியான விளக்கமன்று.

Facts do not bear it out.

நடைமுறையில் இது சரியாகத் தெரியவில்லை.

The Soul suffering now for previous sins is karma.

போன ஜென்மப் பாவத்தை இன்று அனுபவிப்பது கர்மம்.

The sin was committed in other bodies.

வேறு உடலில் கடந்த ஜென்மங்களில் செய்யப்பட்ட பாவம் இவை.

An ethical question is yet to be answered.

மனச்சாட்சிக்கு விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை.

Who created evil?

யார் கொடுமையைச் சிருஷ்டித்தது?

Why was it created?

ஏன் அதை சிருஷ்டித்தனர்?

For what reason was it created?

என்ன காரணத்திற்காக அதை சிருஷ்டித்தனர்?

These questions must first be answered.

முதலில் இக்கேள்விகட்கு விடை தேவை.

Of course, evil entails punishment and suffering.

கொடுமைக்கு வேதனை தண்டனையாகக் கிடைப்பது நியாயம்.

Moral evil is a mental disease.

கொடுமை மனத்தின் வியாதி.

It is an ignorance.

அது ஒருவகை அறியாமை.

It is a form of ignorance

அது அறியாமையின் ஆன்மீகச் சொரூபம்.

Who created it? Or what created it?

யார் அதை சிருஷ்டித்தனர்? எது சிருஷ்டித்தது?

What was the inevitable connection between the act and punishment?

செயலுக்கும், தண்டனைக்கும் தவிர்க்கமுடியாத தொடர்பு எப்படி ஏற்பட்டது?

The tortures are often extreme.

சித்ரவதைகள் எல்லையைக் கடந்தவை.

They are monstrous.

ராக்ஷஸ வதம் அவை.

The law of karma is inexorable.

கர்மம் என்பது கடவுளையும் கட்டுப்படுத்தும்.

It is irreconcilable with God.

தெய்வமும், கர்மமும் ஒத்துவாரா.

God is a supreme moral Deity.

கடவுள் உன்னதமான நியாயமானவர்.

God is a personal Deity.

தெய்வம் நாம் வணங்கும் குலதெய்வம்.

Buddha had a clear logic

புத்தர் ஞானம் தெளிவானது.

He denied the existence of God.

புத்தர் கடவுளில்லை என்றார்.

God was an all-governing Person.

கடவுள் அனைத்தையும் நடத்துபவர்.

He was free of everything.

கடவுள் எதற்கும் கட்டுப்பட்டவரில்லை.

Buddha denied personality.

சுபாவம் என்பதை புத்தர் மறுத்தார்.

To him, it was a creation of ignorance

சுபாவம் என்பதை அறியாமை ஏற்படுத்தியது என்றார்

It is subject to karma, said Buddha.

புத்தர் சுபாவத்தை கர்மத்தின் குழந்தை என்றார்.

Page Nos 94&95, Para No.8


 

This difficulty arises from an assumption.

நம் நினைவால் இப்பிரச்சினை எழுகிறது.

That assumption is God is extra-cosmic.

கடவுள் உலகைக் கடந்தவர் என்பதால் வரும் பிரச்சினையிது.

Buddha denied God.

புத்தர் கடவுளில்லை என்றார்.

We present the difficulty sharply.

பிரச்சினையை நாம் தெளிவாக எடுத்துக் கூறுகிறோம்.

There will be no difficulty if God is not extra cosmic.

கடவுள் உலகைக் கடந்தவர் எனக் கூறாவிட்டால், பிரச்சினையில்லை.

God may become the universe.

கடவுளே உலகமாகலாம் அன்றோ!

He need not be one who created evil and suffering.

கொடுமையை உற்பத்தி செய்தவராக இல்லாமலிருக்கலாம்.

He need not stand above unaffected.

உலகிலிருந்து விலகி நிற்காதவராக இருக்கலாம்.

He, we assume, watches and rules.

நம்மைக் கண்காணித்து, ஆள்பவர் கடவுள் எனக் கொள்கிறோம்.

He does His will.

அவர் சித்தம் பலிப்பதாகக் கொள்கிறோம்.

He allows the world to be driven by His law.

தம் ஆட்சியை அவர் உலகில் நடத்துகிறார்.

He does not help his creatures.

மனிதர்கட்குக் கடவுள் உதவவில்லை.

Or, He helps them inefficiently.

அல்லது கடவுள் உதவி போதாது.

He is not, then, omnipotent.

அப்படியானால், கடவுள் எல்லாம் வல்லவரில்லை.

He is not all-good and all-loving.

கடவுள் அன்புருவானவரில்லை. நன்மையின் பிழம்பல்லர்.

This is the theory of an extra cosmic God.

உலகைக் கடந்தவர் இக்கடவுள்.

He is moral.

அவர் தர்ம தேவதை.

Evil and suffering cannot, then, be explained.

அதுவே உண்மையானால் கொடுமை, துன்பத்தை அறியமுடியாது.

By evil, we mean the creation of evil.

கொடுமை என்றால் அது உற்பத்தியான வழி.

We can only do so by a subterfuge, a trick.

பதில் சொல்ல நாம் தந்திரத்தைப் பயன்படுத்தவேண்டும்.

It will be unsatisfactory.

அப்பதில் திருப்தியாக இருக்காது.

Surely, it will avoid the question.

அது கேள்வியை விலக்கிப் பதில் கூறும்.

It will not answer it directly.

நேரடியான பதிலாக அது இருக்காது.

It will imply Manicheanism.

அசுரனும், ஆண்டவனும் மோதும் வழியது.

It will practically annul the Godhead.

இப்பதில் கடவுளை மறுப்பதில் முடியும்.

It will attempt to justify its ways.

கொடுமைக்காரக் கடவுள் சரி என அது கூறும்.

Or, it will excuse God of his cruelty.

கடவுளின் கொடுமை கொடுமையில்லை என்று சொல்லும்.

Such a God is not the Vedantic God.

இப்படிப்பட்ட கடவுள் வேதாந்தம் கூறும் கடவுளில்லை.

Sachchidananda is one existence without a second.

சச்சிதானந்தம் என்பது ஏகன்.

All that is, is He.

இருப்பனவெல்லாம் அவனே.

He has embodied Himself in every creature.

எல்லா ஜீவராசிகளிலும் உறைபவன் அவனே.

If evil is there, it is He that bears evil and suffering.

தீமையும், துன்பமுமிருந்தால், அவற்றை அனுபவிப்பவன் அவனே.

The problem then changes entirely.

பிரச்சினை அடியோடு மாறுகிறது.

Evil and suffering are the negation of bliss.

கொடுமையும், வேதனையும் ஆனந்தத்தின் எதிரிகள்.

He is the sole infinite Existence-Consciousness-Bliss.

அவன் மட்டுமே உலகில் சத்-சித்-ஆனந்தமாக இருக்கின்றான்.

God is incapable of evil and suffering.

கடவுளால் கடுமை, கொடுமை, துன்பம், வலியை உற்பத்தி செய்யமுடியாது.

Our question is how did He admit evil and suffering into Bliss?

அவனது ஆனந்தம் எப்படிக் கொடுமையையும், துன்பத்தையும் அனுமதிக்கிறது என்பதே கேள்வி.

How God created suffering for His creatures is not the main question.

கடவுள் தம் ஜீவராசிகட்கு எப்படித் துன்பத்தை சிருஷ்டித்தார் என்பது முக்கியக் கேள்வியில்லை.

God is immune to evil.

கடவுளை கொடுமை பாதிக்காது.

                                                     Contd...

தொடரும்...


 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜீவன் மலர்ந்து, உணர்ச்சி வயப்பட்டு, செயலோடு ஒன்றிய நேரம், மனிதனால் உச்சக்கட்ட சாதனையை எட்ட  முடிகிறது.உலகத் தலைவர்கள் சிலரிடம் ஓரளவு இக்குணம் காணப்படுகிறது.

உணர்ச்சி வயப்பட்ட செயலால் ஜீவன் மலர்ந்தால் சாதனை பெரியது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

தவத்தை நாடுபவர் குறைவு. இது ஆன்மீக சக்தியால் நடப்பது. மனிதனுடைய எல்லாச் சக்திகளையும் - மனம், உணர்வு, உடல் - சேகரம் செய்து மனத்திற்கு மேல் குவிக்கவேண்டும் என்பதால் இதை நாடுபவர் அரிபொருள்.

பெரிய சக்தி தேவைப்படுவதால் சிறிய மனிதன் நாடாதது தவம் 


 

Comments

02.லைப் டிவைன்  For the Line

02.லைப் டிவைன்
 
 
For the Line starting with 'Our question is how did He admit '
Remove extra blank line that is above the line 'அனுமதிக்கிறது என்பதே கேள்வி.'
 
For the Line starting with  'How God created suffering for His creatures '
Combine the word 'question' from next line with the above line.
Remove extra blank line that is above the line '

முக்கியக் கேள்வியில்லை. '

 
motnir



book | by Dr. Radut