Skip to Content

12.சூட்சும அறிகுறி

சூட்சும அறிகுறி

       அன்பர் நண்பரிடம் வந்து கன்வாருடன் போனில் பேசினேன் என்றார். 1700 கோடி கம்பனி முதலாளி கன்வார். சுமார் 4 ஆண்டுகட்கு முன் அவர் அன்பரைப் பற்றிக் கேள்விப்பட்டு அழைப்பு விடுத்திருந்தார். தொழிலில் clientஐப் பார்க்க நாமே நம் செலவில் போவது வழக்கம். பெரு முதலாளிகளைக் காண்பது கடினம். இந்த முதலாளி அன்பருக்கு விமான டிக்கட் வாங்கி அனுப்பி வரச் சொல்லியிருந்தார். இது வழக்கத்திற்கு மாறான வழக்கம். அன்பர் முதலாளியைச் சந்தித்தார். அன்பருடன் அவருடைய பார்ட்னரும் வந்திருந்தார். தொழில் விஷயமாக 3½ மணி நேரம் அன்பர் பேசும்பொழுது, முதலாளி தம் முக்கிய மானேஜர்களை அழைத்து கேட்டுக்கொள்ளச் சொன்னார். அன்பரும், அவர் பார்ட்னரும் பேசியது முதலாளியையும், அவர் ஆபீசர்களையும் கவர்ந்தது.

       இதுவரை இப்படி எங்களுக்குத் தொழிலை எடுத்து எவரும் விளக்கியதில்லை எனப் பாராட்டினர். முதலாளி, "எல்லாத் தொழில் இரகஸ்யங்களையும் எங்களுக்குச் சொல்விட்டீர்களே'' என வியந்தார்.

       முதலாளி அன்று அமெரிக்கா போவதால் உடனே கான்ட்ராக்ட் கையெழுத்திட அவசரப்பட்டார். அன்பர் அவசரப்படக்கூடாது. அமெரிக்காவிலிருந்து திரும்பியபின் எழுதலாம் என்றார். திரும்பியபின் முதலாளி அன்பரை அழைக்கவில்லை! இது பெரிய அனுபவம்.

       இன்று கன்வாரிடம் பேசினேன் என்றவுடன் நண்பர் கன்வாரை நினைத்தார். அன்பர், "அந்தக் கன்வாரில்லை. இவர் பத்திரிக்கை ஆசிரியர்'' என விளக்கினார். 10 நாள் கழித்து கன்வாருடைய தகப்பனார் காலமானதாகக் கன்வார் கையெழுத்திட்ட விளம்பரம் பத்திரிக்கையில் வந்தது. முதலாளியைவிட அவர் தகப்பனார் முக்கியமானவர், இந்திராகாந்தியின் நெருங்கிய நண்பர்.

10 நாள் கழித்து வர இருக்கும் செய்தி இன்று வாய் தவறுதலாக நமக்கு அறிவுறுத்துவது (subtle life) சூட்சும அறிகுறி.

****

Comments

12.சூட்சும அறிகுறி  Para 1  

12.சூட்சும அறிகுறி
 
Para 1    -   Line 3   -  தொழில்    -    தொழிலில்
Para 3    -   Line 2   -  அமெரிக்காவிலி ருந்து    -    அமெரிக்காவிலிருந்து



book | by Dr. Radut