Skip to Content

09.லைப் டிவைன் -கருத்து

 “லைப் டிவைன் -கருத்து”

Being, Becoming, Being of the Becoming

       “எங்கள் சித்தியை வீட்டில் சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பிடிக்கும். திருமணம் போன்ற நேரங்களில் சித்தியைச் சுற்றி ஒரு கூட்டமேயிருக்கும். நாங்கள் கேலியாகக் கூறும் சொல் ஒன்றுண்டு. சித்தியை ஒரு கட்சியாகவும், மற்றவரை ஒரு கட்சியாகவும் வீட்டைப் பிரித்தால், அனைவரும் அவர் கட்சியில் இருப்பார்கள் என்போம்”.

ஆன்ம விழிப்புள்ள அன்புடையவர் சித்தி.

       அய்யர் கையால் காப்பி சாப்பிட்ட பின் வேறு காப்பி பிடிக்கவில்லை என்று பேர் வாங்கியவர் அய்யர். சிதம்பரம் கோவிலுக்கு அன்னை வந்துபொழுது காரிலிருந்து இறங்கியவரை அய்யர் பார்த்ததாகக் கூறினார்.

       சக்தி - ஆசை - அன்பு - அனைவரின் அன்புடன் கலப்பது என்ற நான்கு நிலை வாழ்வுக்குண்டு. சைத்தியப் புருஷன் விழிப்பாக இருந்தால் பிறர் இனிக்கச் செயல்படும். அய்யர் ஒருவரைக் கண்டு காப்பிப் போட நினைத்தால் காப்பி சாப்பிடுபவருடைய இனிமை அய்யர் மனத்தைத் தொடுகிறது. போடும் காப்பி இனிக்கிறது. இனிக்கிறது எனில் ஆத்மாவில் இனிக்கிறது. வேறு காப்பி பிடிக்கவில்லை.

சைத்தியப் புருஷன் விழிப்பாக இருப்பதால் அன்பு வெளிப்படும் செய்கை போட்டுக் கொடுக்கும் காப்பியில் தெரிகிறது.

       Life Divineஇல் 360 முதல் 364 வரை காலம், காலத்தைக் கடந்த நிலை, கடந்ததையும் கடந்த நிலை விளக்கப்படுகிறது. ஆறு வகையாக மீண்டும் மீண்டும் இக்கருத்தை பகவான் கூறுகிறார். இதைப் படித்த அன்பர் எதுவுமே புரியவில்லை என்றார். விளக்கங்களைக் கேட்டபின் முதற்பகுதி ஓர் அளவுக்கு விளங்குகிறது என்றார்.

புரிந்தாலும், புரியாவிட்டாலும், ஆத்மானுபவம் தரவல்லது Life Divine என அறிவார்.

       இக்கருத்தை மனதில் ஏற்று தியானம் செய்தார். ஆறு மணி நேரம் சிட்டிகை போட்டதுபோல் போய்விட்டது. உடல் தியானத்தில் “கரைந்தது”. மறுநாள் மீண்டும் அப்பகுதியைப் படித்தபொழுது மேலும் சற்று புரிவது போலிருந்தது. முக்கியமான கருத்து.
1. Becoming என்பது பிரகிருதி, வாழ்வு என்கிறோம் - இல்லறம் என நாம் அறிந்தது. இது காலத்திற்குரியது.

2. Being என்பது புருஷன், தவத்திற்குரியது - துறவறம் எனப்படும், இது காலத்தைக் கடந்தது.

3. Being of the Becoming என்பது சத்தியவாழ்வு - இல்லறத்தில் துறவறம், இது காலத்தைக் கடந்ததையும் கடந்த ஆண்டவன் வாழ்வில் வெளிப்படுவது. சித்தியும், அய்யரும் இதற்குரியவர்கள்.

Being

- துறவறம்- புருஷன்- காலத்தைக் கடந்த நிலை.

Becoming

- இல்லறம் - பிரகிருதி, இயற்கை - காலம்.

Being of the Becoming

- துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம் -

அன்னை வாழ்வு - கடந்ததைக் கடந்தது

(அய்யர், சித்தி)

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் புரிந்து கொள்ளும் திறனை அழித்து இழப்பதற்கு, மனத்தின் மௌனம் எனப் பெயர்.

 

 



book | by Dr. Radut