Skip to Content

07.அஜெண்டா

அஜெண்டா

Disgust indicates that part is untouched by transformation.

திருவுருமாற்றம் தீண்டப்படாத இடத்தில் அருவெறுப்பு இருக்கும்.

- தாயாருக்குக் குழந்தையின் மலம், நீர் அருவெறுப்பு தருவதில்லை.

- டாக்டருக்கு ரத்தம், சளி போன்றவை அருவெறுப்பாக இருந்தால் சரி வாராது.

       ஜவஹர்லால் நேரு ஜெயிலில் இருந்தபொழுது ஒரு நட்டுவாக்கலி (centipede) அவர் மீது விழுந்தது. எழுந்து ஓடினார். எனக்குள்ள இந்த அருவெறுப்பு ஆழ்ந்து மறைந்துள்ள பயம் அன்றோ? என்று தமக்கே கூறிக்கொண்டார்.

- ஒரு கன்னத்தில் அடித்தால் அடுத்த கன்னத்தைக் காட்டு என்றார் ஏசு.

- அன்னை அப்படி உன்னை அடித்தவரே உன் மீது உயர்ந்த அன்புள்ளவர் என்கிறார். அவர் மீது அன்பு எழுவதே சரி என்றும் கூறுகிறார்.

- அக்பர் மார்பில் உதைத்தது அவர் பேரன் என்பதால் அந்தக் காலுக்குக் கொலுசு செய்து போட வேண்டும் என்றார் மந்திரி பீர்பால்.

- எவர் நம் மார்பில் உதைத்தாலும் அதையே செய்ய வேண்டும் என்பது ஆன்மிக அன்பு.

அருவெறுப்புக்கு இடம் இல்லை.

- நாகரீகம் வளரும்பொழுது ஒரு நாள் அருவெறுப்பாக இருந்தது இன்று ருவெறுப்பாக இல்லை.

- ஆசாரமானவர்க்கு முட்டை அருவெறுப்பு. டாக்டர் சொன்னதால் ஆசாரமானவர்கள் இன்று சிலர் முட்டை சாப்பிடுகிறார்கள்.

- பெரியவர்களைப் பேர் சொல்லிக் கூப்பிடுவது அருவெறுப்பான செயல். 1900க்கு முன் மேல்நாட்டு பழக்கமும் அதுவே.

 கணவன் பெயரை மனைவி சொல்வதில்லை என்ற பழக்கம் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தது.

- இன்று முதலாளியைப் பெயர் சொல்லி அழைக்கின்றார்கள். தகப்பனாரை “சார்” என்றும், “கவர்னர்” என்றும் அன்று இங்கிலாந்தில் கூறினர்.

- இன்று பெரியவர்கள் சிறுவர்கள் தங்களைப் பெயரிட்டு அழைக்காவிட்டால் அங்கு அருவெறுப்பு அடைகிறார்கள்.

       நாகரிகம் வளர்ந்ததால் அருவெறுப்பு மாறுகிறது. திருவுருமாற்றம் வந்தால் உடலுக்கு அருவெறுப்பு மாறுகிறது.

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நிச்சயம் சாதிக்க வேண்டும் என ஆழ்ந்து விரும்பியவை நடந்து முடிவதைக் காண்கிறோம்.

ஆன்மா வெளிவந்து மனத்தின் அபிலாஷையைப் பூர்த்தி செய்தால் இது நடக்கும்.

நிலையான சாதனை ஆன்மாவின் சாதனை.

 



book | by Dr. Radut