Skip to Content

06.அன்பர் கடிதம்

 அன்பர் கடிதம்

அன்புள்ள ஸ்ரீ அரவிந்தரன்னைக்கு,

என்றும் உங்கள் குழந்தையாக இருக்க விரும்பும் பிள்ளை எழுதிக் கொள்வது. அன்னையின் அருளால், நான் இந்த வருடம் B.Sc.Chemistry முடித்துள்ளேன். நான் எப்போதும் 60 to 80 marks வாங்கும் அளவில் படிப்பேன். போன semsesterஇல் ஒரு subjectஇல் 80க்கு மேல் marks வாங்குவேன் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் அதில் 47 marks தான் வந்தது. மிகவும் கவலைப்பட்டேன். என் ஆசிரியர் உன் paperஐ பார்த்தேன். நன்றாகத் தான் எழுதியுள்ளாய். ஆனால் திருத்திய ஆசிரியர் எப்போதும் கண்டிப்புடன் திருத்தி marksஐ குறைத்துத்தான் போடுவார் என்று கூறி மேலும் அடுத்த semseterஇல் அதிக marks வாங்கலாம் என்றார். அடுத்த semseterஇல் அதே subjectஐ நான் சரியாகப் படிக்கவில்லை. ஆனால் study holidayஐ நன்றாக பயன்படுத்திக் கொண்டேன். Testஇன் முதல் நாளும் நன்றாகப் படித்துவிட்டேன். ஆனால் question கஷ்டமாக இருந்தது மேலும் நிறைய கேள்விக்கு answerஐ மறந்தும் விட்டேன். மறந்தாலும் நான் Mother, Mother என்று கூறிக் கொண்டே இருந்தேன். Mother எனக்கு ஞாபகப்படுத்தி எழுத வைத்தார்கள். Test எழுதி வந்தவுடன் எனக்கு பயமாக இருந்தது. போன semesterஇல் அதிக marks எதிர்பார்த்தப்போதே குறைந்த markக்குத்தான் வந்தது. இந்தத் தடவையோ நான் சரியாக எழுதவில்லை. Fail ஆகிவிடுவேனோ என்ற பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. Mother இடம் பிரார்த்தனை செய்தேன். Pass ஆவாய் என்று பதில் வந்தது. மனம் நிம்மதியடைந்தது. ஆனால் பயம் என்னும் சாத்தான் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது. மனம் அமைதியாக இருக்கும்போது மனதில் சாத்தான் வந்து என்னிடம் 3rd yearஇல் போய் fail ஆனால் எல்லாருக்கும் தெரிந்துவிடும், மேலும் higher educationக்குச் செல்ல முடியாது. ஒரு வருடம் வீண் ஆகிவிடும் என்று சொல்லிச் சொல்லிச் என் அமைதியை இழக்க வைக்கும். அப்போது எல்லாம் நான் Mother இடம் கண்ணீர் விட்டு அழுவேன். வீட்டிலும் என் பெற்றோரிடமும், அக்காவிடம் சொல்லி அழுவேன். அவர்கள் நீ fail ஆகும் அளவிற்கு எழுதியிருக்கமாட்டாய், நல்ல marks வரும் என்று கூறி என் கண்ணீரைத் துடைப்பார்கள். என் அக்கா Mother குழந்தைகள் என்றும் தோல்வி அடைவது இல்லை என்று அடிக்கடி என்னிடம் கூறி என்னைச் சமாதானப்படுத்துவாள். Advice கேட்கும் போது என் மனம் மீண்டும் அமைதி பெறும். சிறிது நேரத்திற்குள்ளே மறுபடியும் அந்தச் சாத்தான் என் மனதிற்குள் வந்துவிடும்.

நான் "White Roses” bookஐ எடுத்துப் பார்த்தபோது, “அத்தகையவற்றை நீ உணரும்போது பயம் உள்ளே வருகிறது (அது தூக்கத்தில் கூட இருக்கலாம்). அப்போது நீ இங்கு மறுபடியும் இவர்கள் தங்களது கெட்ட எண்ணத்தையும், தங்களது பொய்ம்மையையும் என் மீது வீசி எறிந்து கொண்டிருக்கிறார்களே என்பதையோ அல்லது இது போன்றதையோ எண்ணுவதை விடுத்து - (கட்டாயம் இது போன்ற எண்ணங்கள் உனக்கு வந்து கொண்டிருக்க வேண்டும்) - உடனடியாக பிரபுவையோ அல்லது என்னையோ அல்லது இருவரையுமோ அழைக்க வேண்டும். ‘இதோ மறுபடியும் நான் தாக்கப்படுகிறேன். எனக்கு உதவுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள். இந்தத் தீய சக்திகள் என்னைத் தீண்டாமல் தடுக்கும் விதத்தில் உங்கள் அன்பும், ஆற்றலும் என்னைச் சுற்றி ஒரு கவசமாக விளங்கட்டும்’ என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்தத் தாக்குதல் முடிவுறும்வரை வேறு எதையும் நினைக்காமல் பிரார்த்தனையை நீ விடாமல் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டும். இதுவே மிக நிச்சயமான, மிகப் பாதுகாப்பான, மிக விரைவான வழியாகும். மேலும் பிற சந்தர்ப்பங்களில் உன்னைத் தொந்தரவு செய்யாத விஷயங்களைப் பற்றி மட்டுமே எண்ணுவதில் வெற்றி அடைந்தால் நீ சிறிது சிறிதாகத் தாக்குதல்களைக் குறைத்து உன்னுடைய வாழ்க்கையை மேலும் சாந்தி உடையதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

ஏற்படும் இன்னல்களே கடுஞ்சோதனைகளும் பரீட்சைகளும் ஆகும். அவற்றை ஒருவர் சரியான மனப்பாங்கோடு சந்தித்தால், அவர் அவற்றைக் கடந்து முன்னைவிட வலுவுள்ளவராகவும், ஆன்மீகரீதியில் அதிகத் தூய்மையானவராகவும், சிறந்தவராகவும் விளங்குவார்” என்று வாசித்தேன். இதைப் படித்த பிறகு என் மன அமைதியின்மையை ஒரு சோதனை, பரீட்சை என்று எண்ணி அதை (பயம்) தோற்கடிக்க அன்னையின் உதவியுடன் போராடினேன். சிறிது மனஅமைதியை அடைந்தேன். Result வந்தது. எல்லா subjectலும் அபரிமிதமான marks எடுத்து pass பண்ணினேன். நான் எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு marks வாங்கினேன். மேற்படிப்புச் சேர்ந்தேன். இப்போது மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.

Motherஆல் என் மனதில் இருந்த பயம் என்னும் பேயை என்னால் அழிக்க முடிந்தது. இதன் மூலம் Mother மேலும் Sri Aravinder மேலும் முழு நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. இப்போது என்னையே Mother இடம் ஒப்படைத்துவிட்டேன். Mother பிள்ளைகளுக்குத் தோல்வி என்பது கிடையாது என்பதையும், நம் மனம் அமைதி இழந்து காணப்பட்டாலும் சோர்வடையாமல் அதை அன்னையிடம் முழுப் பொறுப்போடு ஒப்படைத்துவிட்டால் Mother நமக்கு நிரந்தரமான மனஅமைதியை தருவார்கள் என்ற நம்பிக்கையையும், நம் கெட்ட எண்ணங்களை Mother அழித்துவிடுவார்கள் என்ற உண்மையையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் உணர்ந்துவிட்டேன்.

****

 

Comments

06.அன்பர் கடிதம் Para  1     

06.அன்பர் கடிதம்
 
Para  1         -   Line  14  -  marksஎதிர்பார்த்தப்போதே    -     marks எதிர்பார்த்தப்போதே
Para  1         -  Line   21  -  சொல்லிiச் சொல்லிiச்         -    சொல்லிச் சொல்லிச்   
Para  3         -  Line  5    -  குறைத்துஉன்னுடைய         -    குறைத்து உன்னுடைய
 book | by Dr. Radut