Skip to Content

05.பகவானுடைய இதர நூல்கள்

 பகவானுடைய இதர நூல்கள்”

காலும் கண்ணும் பார்க்கும்

கண், காது இல்லாத ஜீவராசிகள் உண்டு. பார்க்க விரும்பியதால் கண்ணும், கேட்க விரும்பியதால் காதும் ஏற்பட்டன என்று விஞ்ஞானம் கூறுகிறது.

பார்ப்பது கண் அன்று, மனம்.

மனம் பார்ப்பதற்குக் கண் கருவி.

ஜீவன் சிந்திக்க விரும்பியதால் மனம் ஏற்பட்டது.

ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி. அவர் ரிஷி(mystic). தன் கை, கால்களுக்கு பார்க்கும் திறமையைப் பயிற்றுவித்தார். அவற்றால் பார்க்க முடிந்தது. ஏனையோர் அவர் அனுபவத்தை ஏற்கவில்லை. பிறர் அனுபவத்தை மனம் ஏற்காது. மனம் ஏற்றாலும் அகங்காரம் ஏற்காது. மனத்தைக் கடந்தவர்களால்தான் பிறர் அனுபவத்தை ஏற்க முடியும். ரமண மகரிஷி, ராமகிருஷ்ண மடம் சன்னியாசி ஆகியோரைப் பற்றி யோகக் கருத்து அனுபவம் பேசப்பட்டபொழுது பகவான் கீழ்க்கண்டவற்றை விளக்கினார்.

  • மகரிஷிக்கு நெஞ்சு கருவி, இறைவன் அவரை நெஞ்சால் அணுகினான்.
  • பூரணயோக அனுபவத்தை ஏராளமான பேர் ஜீவனில் சித்தியாகப் பெற்றுள்ளனர். ஆனால் அதை அறிவதில்லை.
  • தெரியாத ஆத்மீக அனுபவத்தைப் பேய் என்பது வழக்கம்.

சத்திய ஜீவிய சித்திக்கு இரு பகுதிகள் உண்டு. ஒன்று ஆத்மானுபவம். அடுத்தது உடலில் பெறுவது. உள்ளே ஆத்மாவில் பெறுவது பெற்றவருக்கு மட்டும் பலன் தரும். உடலில் பெற்றால் உலகத்திற்குப் பயன்படும். ஆத்மாவில் சத்திய ஜீவியத்தைப் பெற்றவர் அநேகர் என பகவானும், அன்னையும் கூறியுள்ளனர். “இப்பகுதியில் இருந்த யோகி ஒருவர் அதைப் பெற்றிருந்தார்” என பகவான் எழுதியுள்ளார். அவர் இராமலிங்க சுவாமி. அன்னையிடம் இராமலிங்க சுவாமியின் அருட்பாவை மொழி பெயர்த்துப் படித்த பொழுது முதல் வரி படித்தவுடன் “இவருக்கு சத்திய ஜீவியம் பலித்துள்ளது” என்றார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சன்னியாசி ஒருவருக்கு (descent) ஒளிப்பிரவாகம் மேலிருந்து அவருள் வந்தது. அனைவரும் அதைக் கேள்விப்பட்டு அவர் தீயசக்திகட்குப் பலியானர் என்று கூக்குரலிட்டனர். வந்த அனுபவம் மறைந்து விட்டது.

பெரிய வக்கீலுக்கும் மருந்தைப் பற்றித் தெரியாது. முதன் மந்திரிக்கு ஜோஸ்யம் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. அனுபவமில்லாதது தெரியாது என்பதை இன்று உலகம் ஏற்பதைப் போல் அன்று ஏற்கவில்லை. இருட்டில் நடக்கும்பொழுது கால் பூச்சிகள் உள்ள இடத்தில் தானே விலகும். முள்ளில் காட்டு மனிதர் நடக்கும்பொழுது கால் முள்ளிருப்பதை அறிந்து விலகுவதை அவர் அறிவர். அப்படி நேர்வது நமக்குத் தெரிவதில்லை. தெரிந்தால் “நல்ல காலம்” என்கிறோம். உள்ளங்காலுக்கும் நினைவுண்டு என்கிறார் பகவான். மகரிஷி பெரியவர். ஆனால் descent மேலிருந்து வரும் சக்தி அவர் அனுபவித்ததில்லை. அனுபவமில்லாததை இல்லை எனக் கூறுவது அன்றைய நாகரீகம். அது பேய் எனவும் வர்ணிக்கப்படுவதுண்டு.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சரணாகதி பேரருளைச் செயல்படச் செய்கிறது. நம்பிக்கை அருளைச் செயல்பட அனுமதிக்கிறது. உழைப்பு கர்மத்தைச் சேகரம் செய்கிறது.

*****  

Comments

05.பகவானுடைய இதர நூல்கள்Last

05.பகவானுடைய இதர நூல்கள்
Last Para  -  Line  7   -   descentமேலிருந்து         -        descent மேலிருந்து



book | by Dr. Radut