Skip to Content

14.பந்து போன்ற பவுன் நிற ஒளி

 பந்து போன்ற பவுன் நிற ஒளி

       இளம் பெண் பலருடன் மையம் வந்து மகிழ்ந்து தன்னை மறந்ததையும் மறந்ததால், உடன் வந்தவர்கள், இரவு நேரத்தில் தன்னைத் தனியே விட்டு விட்டுப் போனதை கவனிக்கவில்லை.

       மாடியிலிருந்து இறங்கி வந்தால், வீடு எப்படிப் போய்ச் சேர்வது? இதுவரை இந்த நேரத்தில் தனியே போனதில்லையே என்று எண்ணம் எழுந்தபொழுது பயம் வரவில்லை. மையத்தில் மனம் தன்னை இழந்தது, அது உள்ள இடத்தில் மையத்தின் சூழல் வந்து அமர்ந்துள்ளதை அறிய முடியவில்லை. உடன் வந்த நண்பர்கள் உதறிவிட்டுப் போனால், நான் அதுபோல் உன்னை விட்டுப் போக மாட்டேன் என்று அன்னை கூறுவது போன்ற உணர்ச்சி தெம்பைக் கொடுத்தது. கண்முன் பொன்னிற ஒளி தோன்றியது.

- அது பந்துபோல் உருண்டையாக இருந்தது.

- அவர் நகரும்பொழுது ஒளியும் நகர்ந்தது.

- வீடு போகும்வரை பாதுகாப்பாக உடன் வந்தது

- மனம் அவரிடமிருந்தால் நம்மை அறியாமலும் பாதுகாப்பு நமக்குண்டு.

****

 

 



book | by Dr. Radut