Skip to Content

12.வாழ்வின் மறுமொழி

வாழ்வின் மறுமொழி 

 Life Response

தத்ரூபமாகக் காண்பது

       வெகுநாளைக்கு முன் 3-D சினிமா வந்தது. அதன் வகைகள் பல. படத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் காண்பதுடன் அனுபவிப்பதுமாகும். வாசனை, அசைவு ஆகியவற்றை படித்துப் பார்ப்பவரும் அனுபவிக்கும் நிலை அது. ருசியான சமையல் படத்தில் வந்தால் படத்தைப் பார்ப்பவர்கட்கு வாசனை வரும். ரயில் ஒருவர் படத்தில் போனால், நாமும் ரயிலில் போகும் உணர்வு ஏற்படும். அது தொடர்பில்லை.

       Super marketஇல் பொருள்களை வாங்குபவருக்கு இது போன்ற அனுபவம் தரும் (sales technique) வியாபார முறை இப்பொழுது சிறிதளவு வந்துள்ளது. இதை ஒரு T.V விற்கும் கடையில் ஏற்பாடு செய்தால், T.Vயில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நாம் நேரே பங்கு கொள்வதாக இருக்கும். இருவர் சண்டை போட்டால், நாமும் சண்டையில் கலந்து கொள்வது போலிருக்கும்.

       அமெரிக்க super marketகளில் தனி அறை ஏற்பாடு செய்து இதுபோன்ற பல தரப்பட்ட அனுபவங்களை வாடிக்கைக்காரர்கள் பெறும் புது வழி வந்துள்ளது.

       வியாபாரத்தில் Life Response என்பது என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை, சோதனை செய்யும் அன்பர் $ 1000க்கு வாங்கும் வாடிக்கைக்காரரை எப்படி $ 10,000க்கு வாங்கச் செய்யலாம் என்பதைக் கண்டார். அவர்கள் நாட்டில் புதுப்புது முறைகள் வந்தபடியிருக்கின்றன. எதை ஏற்பது என்று தெரிவது சிரமம்.

       அவர் ஒரு முடிவு எடுத்தார். “சுயநலமில்லாமல் என் வியாபாரம் பெருக Life Response முறையை நான் சரிவரப் பயன்படுத்த ஆனவற்றைச் செய்கிறேன்” என்பது அந்த முடிவு. அன்று கம்பனிக்குப் போனபொழுது மானேஜர் மேற்சொன்ன முறையைப் பற்றிக் கூறவே, இதையே நல்ல சகுனம் எனக் கொள்கிறேன் என்று அதைப் பற்றிய விவரங்களை சேகரித்துத் தரும்படி மானேஜரிடம் கூறினார். மானேஜர் விவரங்களுடன் வந்து முதலாளியிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, இந்தப் புதிய முறையை விற்பவர்கள் வந்துள்ளனர் என்ற செய்தி Life Response ஆக வந்தது. வந்தவர்கள் demonstration தங்கள் சரக்கைக் காண்பித்தனர். இக்கடையில் சரக்கு $1000 முதல் $50,000 வரையுண்டு. ஒன்றிரண்டு $ 500,000 முமாகும். புதிய சரக்கின் விலை $ 75,000 வரையுள்ளது. இம்முறையைக் கடை ஏற்க வேண்டும் என்று முதலாளி முடிவு செய்தார்.

- வந்தவர்கள் இச்சரக்குக்கு National distribution rights வினியோக உரிமையைக் கொடுக்க விரும்பினர்.    

- முதலாளி அதையும் ஏற்றார்.

****

 

 



book | by Dr. Radut