Skip to Content

லைப் டிவைன் - கருத்து

P-72 சூரிய மண்டலமும், எறும்புபுற்றும் ஒன்றே, வலிமையும், பலஹீனமும் சமமான சக்தியுடையவை

ஒரு மூட்டை நெல்லும், ஒரு வண்டி வைக்கோலும் மதிப்பிலும், விலையிலும் அளவு பெரியது, சிறியது என்பதால் விலை ஒன்றாக இருப்பதைத் தடுப்பதில்லை. ஒரு வலிமையானவனை உற்பத்தி செய்யவும், பலஹீனனை உற்பத்தி செய்யவும் ஜீவியம் சமமான சக்தியையே செலவிடுகிறது என்று கூறிய பகவான் அடுத்த கட்டத்திற்குப் போய், வலிமை, பலஹீனம் என்பவை குணங்கள், குணங்கட்குப் பின்னுள்ளது ஜீவியம், ஜீவியத்தால் தன்னைப் பகுதியாகத் தர முடியாது, முழுமையாகவே தர முடியும் என்று முடிக்கிறார்.

  • ஜீவியம் முழுமையானது.
  • தன்னை பகுதியாக்க முடியாதது.
  • தன்னைக் கொடுக்க முடிவு செய்தால் முழுமையாகவே கொடுக்கும்.
  • பெறுபவர் தம்மை வெளிப்படுத்துவது அவரையும், அவர் குணத்தையும் பொருத்தது.

ஒரே சக்தியைப் பெற்ற இருவரில் ஒருவர் சக்தியை வெளிப்படுத்துகிறார். அவரைப் பலசாலி என்கிறோம். அடுத்தவர் தாம் பெற்ற சக்தியை மறைக்கிறார். அவரைப் பலஹீனன் என்கிறோம், என்று பகவான் விளக்குகிறார். தகப்பனாரிடம் சமபங்கு பெற்ற அண்ணன், தம்பிகளில் ஒருவர் வீடுகட்டி, நிலம் வாங்கி, கார் வாங்கி, மகனை USA இல் படிக்க வைத்தால் அவரைப் பணக்காரர் என உலகம் அறியும். அடுத்தவர் பழைய வாழ்வை வாழ்ந்து பணத்தை வெளியில் எடுக்காவிட்டால், அவரை வறுமையானவர் என்று கூறுகிறோம். இருவரும் பெற்றது சமம். 

40 வருஷ அனுபவமுள்ள டாக்டர் 3 மணி நேரம் கான்சர் பேஷண்டைச் சோதனை செய்கிறார் தலைவலியுள்ளவனை இரண்டு நிமிஷம் சோதனை செய்கிறார். இரண்டிலும் அவரது முழுத் திறமை வெளிப்படுகிறது. டாக்டரால் தம் திறமையைப் பகுதியாகத் தரமுடியாது. நாம் உயர்ந்தவர் ஒருவரையும், எளியவர் ஒருவரையும் பார்க்கப் போனால், இரண்டு இடத்திற்கும் நாம் நம்மைப் பகுதியாக, உயர்ந்த பகுதி, தாழ்ந்த பகுதி எனப் பிரித்து எடுத்துப் போக முடியாது.

மனிதன் முழுமையானவன்.

  • மனிதனால் பகுதியாக முடியாது.
  • எங்குச் சென்றாலும் முழு மனிதனே செல்வான்.
  • மனித உடலை எப்படிப் பல பகுதிகளாக்க முடியாதோ, அதே போல் ஜீவியத்தைப் பல பகுதிகளாக்க முடியாது.
  • ஜீவியம் தன்னை எங்கு கொடுத்தாலும், முழுமையாகவே கொடுக்கும்.
  • பெறுபவர் ஜீவியத்தைக் குணமாக மாற்றி வெளிப்படுத்துகிறார்.
  • அப்படி வெளிப்படும்பொழுது பகுதி வெளிப்படும்.
  • பெற்றவர் வெளிப்படாத பகுதியைத் தம் அடிமனத்திலும், ஆழ்மனத்திலும் மறைத்து வைக்கிறார்.
  • தான் மறைத்ததை தாமே அறிய மாட்டார்.
  • தோற்றம் மாறும், விஷயம் மாறாது.

*********

Comments

லைப் டிவைன் - கருத்துbefore

லைப் டிவைன் - கருத்து

before and after the sentence  * The article இரஸவாதம் explains this idea

extra space is there.

Para no.3, line no.4 - வெüப்படுகிறது. - வெளிப்படுகிறது.



book | by Dr. Radut