Skip to Content

சிறு குறிப்புகள்

எண்ணெய்

ஒரு குழந்தையில்லாத 40 வயதுப் பெண். மிகப் பெரிய குடும்பத்துப் பெண். 6 பெண்களில் மூத்தவள். கருத்த நிறத்தாலும், உடல்நலக் குறைவாலும் 1935இல் ரூ.30 சம்பாதிக்கும் குமாஸ்தாவை கட்டிக் கொண்டாள். அடுத்த தங்கை புருஷர் பாரிசில் படித்து வக்கீலாகி ஜட்ஜ் ஆனவர். இவள் கணவர் குமாஸ்தா நிலையிலிருந்து உழைப்பாலும், நேர்மையாலும் கெஜட் பதவி ஆபீசரானார். இப்பெண்ணிற்கு இடக்கை தோளில் வலி. சென்னையில் எல்லா வைத்தியங்களும் பார்த்தாயிற்று, பலனில்லை. புதிதாக - 1950இல் - ஓர் இன்ஜெக்ஷன் வந்துள்ளது. அதைப் போடுவதே ஒரு சிறிய ஆப்பரேஷன்போன்றது என்று கூறி ஆப்பரேஷன் தியேட்டரில் அதைச் செய்தார்கள். அதிலும் பலனில்லை. அந்த ஊசியைப் போட்ட டாக்டர் பிறகு, "நாங்கள் இங்கிலீஷ் வைத்தியம் செய்கிறோம். ஆனால் நம் நாட்டு வைத்திய முறைகளை நான் அறிவேன். M.B.B.S. படித்துவிட்டு ஆயுள் வேதத்தைப்பற்றி நான் பேசுவது எடுபடாது. நீங்கள் கேட்டுக் கொள்வதானால் சொல்கிறேன். தினமும் குளிக்கப்போகுமுன் ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயைத் தோளில் தடவினால் குணம் தெரியும் என்பது என் அபிப்பிராயம்'' என்றார்.

அவர் கூறியதை எடுத்துக் கொண்டார்கள். தேங்காய் எண்ணெய் பலன் தந்தது. வலி குறைந்தது. கொஞ்சநாளில் வலிபோய்விட்டது. இது நான் 1950இல் கேள்விப்பட்டது. இன்று கைவலி, தோள்வலி ஏன் வருகிறது என psychology மனநூல் மூலமும், அன்னை மூலமும் நான் அறிவேன். இவர் குடும்பவிவரம் எனக்குத் தெரியும். இவருடைய வலிக்குக் காரணம் இவர் செய்துகொண்ட திருமணம். சமாதியில் வலிக்கும் கையை இரண்டு முறை வைத்தவருக்கு 17 ஆண்டுகளாக இருந்த கைவலி போனதைப்பற்றி நான் அடிக்கடிக் குறிப்பிடுவேன். 

எழுத்துவேலை அதிகமானவருக்கு 10 பக்கத்திற்கு மேல் எழுதினால் கை வலிக்கும். கம்ப்யூட்டர் வந்தபின் 15, 20 பக்கமும் கம்ப்யூட்டரில் எழுதுவார். ஒரு நாள் மணிக்கட்டில் வலி. பிளஸ்சிங் பாக்கட்டை வைத்துக் கட்டினார். வலி 2 மணி நேரத்தில் போய்விட்டது.

ஆயுர் வேத மருந்துகளில் குரு மருந்து என்று ஒன்றைச் சேர்ப்பார்கள். அதுபோல் தோல் சம்பந்தமான வியாதிக்குரிய எண்ணெய் ஒன்று பல நாட்களாகப் பயன்படுகிறது. மட்டமான மனநிலை, கெட்ட எண்ணம் உள்ளவர் கையைத் தொட்டால் அன்பர்கட்குத் தேள் கொட்டியது போலிருக்கும். மிகத் தாழ்ந்த சூழலில் முதன்மையாக ஆர்ப்பாட்டமாக விழாக் கொண்டாடி உடல்நலம் குறைந்தவர் கையைத் தொட்டேன். 5 நிமிஷத்தில் கை குடைய ஆரம்பித்தது. இவருக்கு என் மேல் பொல்லாத எண்ணம் உண்டு எனத் தெரியாது. 1 1/2 ஆண்டு பிரார்த்தனைக்கும், பிளஸ்சிங் பாக்கெட்டுக்கும் வலி குறையவில்லை. வலக்கையிலிருந்து இடக்கைக்கு மாறியது. தோல் வியாதி சம்பந்தமான எண்ணெயை 15 நாள் தடவினேன். சுமார் 90 பங்கு வலி குறைகிறது. கெட்ட எண்ணம் அருளையும் தோற்கடிக்கும். ஆயுர்வேத எண்ணெய் அதையும் சமாளிக்கும்.

***********

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதனுடைய தோல்விகள் இறைவனுடைய தோல்விகள் அல்ல. அவை அகந்தையின் தோல்விகள், மனிதனுடைய தோல்விகள் இறைவனின் வெற்றி.

மனிதனுடைய தோல்வி, அகந்தையின் தோல்வி.

Comments

சிறு குறிப்புகள்  எண்ணெய்

சிறு குறிப்புகள்

 
 

எண்ணெய்

Para No.1, line no.13 - ஆயுள்- ஆயுர்

Para No.2 line no.2 -  வபோய்விட்டது - வலி போய்விட்டது.

Para No.2 line No.3 - கைவ - கைவலிbook | by Dr. Radut