Skip to Content

ஸ்ரீ அரவிந்தம் லைப் டிவைன்

IX.The Pure Existent

P. No. 72

Para 3

We have a reckoning first.

We have to mend ourselves there.

Here is this infinite Movement.

Here is this energy of existence.

They are the world.

Here we are. And that is the reckoning.

At present we keep a false account.

We are infinitely important to the ALL.

But to us the ALL is negligible.

We are alone important to ourselves.

This is a sign of original ignorance.

It is the root of the ego.

Ego can only think with itself as the centre.

To ego, it is ALL.

There is, of course, the non-ego.

It accepts the non-ego through mental sympathy.

The shocks of environment compel the ego to accept

what is outside it.

Sometimes the ego philosophises.

Then it asserts that the world exists in it.

To it, the world exists by its consciousness.

9. சத் புருஷன்

நமக்கு முதற் கணக்குண்டு.

நமது கணக்கைச் சரி செய்ய வேண்டும்.

சமுத்திரமான சலனம் இங்குளது.

சிருஷ்டியின் சக்தியுண்டு.

அவை உலகம் எனப்படும்.

நாமிருக்கிறோம். அதுவே நம் கணக்கு.

நம் கணக்குத் தவறு.

எல்லாவற்றையும் தன்னுட் கொண்ட பிரம்மத்திற்கு நாம் முக்கியம்.

நமக்கோ பிரம்மம் பொருட்டன்று.

நாம் மட்டுமே நமக்கு முக்கியம்.

இது ஆதியின் அறியாமை.

இதுவே அகந்தையின் வேர்.

தன்னை மையமாகவே அகந்தை கருதும்.

தானே அகந்தைக்கு எல்லாம்.

அகந்தையைக் கடந்த உலகமுண்டு.

மனம் விரும்பினால் அகந்தை அதை ஏற்கும்.

புற நிகழ்ச்சிகள் அகந்தை அவற்றை ஏற்க வற்புறுத்துவதுண்டு.

அகந்தை தத்துவம் புனைவதுண்டு.

உலகம் தன்னுள் உள்ளது என்பது அதன் தத்துவம்.

தன்னால் உலகம் இயங்குகிறது என அது நினைக்கிறது

Ego has its mental standards.

It has its own consciousness.

They are to it the test of reality.

What exists outside is false to it.

What is not in its view is non-existent to it.

This is mental sufficiency in man.

It creates the false accounting system.

It prevents us from drawing the full value of life.

These are the pretensions of the human mind.

That is how the ego is.

They too have a truth.

For that truth to emerge, there is a condition.

The mind must learn its ignorance.

The ego must submit to the ALL.

It must lose its separate existence.

It cannot assert itself.

We must recognise this.

We are the results of appearances.

We call these appearances ourselves.

There is this infinite Movement.

We are part of it.

We must know only the infinite.

We must be conscious of it.

We must fulfil it faithfully.

It is the commencement of true living.

அகந்தை அறுதியிட்டவையுண்டு.

அதற்கு ஜீவியம் உண்டு.

அகந்தைக்கு அவை முடிவானவை.

தனக்குப் புறம்பானவை அகந்தைக்குப் பொய்.

தன் பார்வையிலில்லாதவற்றை இல்லை என அகந்தை கூறும்.

மனம் தன் கட்டுக்குள் செயல்படும் வகையிது.

இதுவே தவறான கணக்கைப் போடுகிறது.

மனித வாழ்வின் முழு அர்த்தத்தை அறிவதற்கு இது தடை.

மனித மனத்தின் பாசாங்குகள் இவை.

இதுவே அகந்தையின் உண்மை நிலை.

இதற்கும் ஓர் உண்மையுண்டு.

அவ்வுண்மை வெளிவர நிபந்தனையொன்றுண்டு.

மனம் தன் அறியாமையை அறிய வேண்டும்.

அகந்தை சிருஷ்டிக்குத் தன்னை உட்படுத்த வேண்டும்.

தான் வேறு என்பதை அகந்தை அழிக்க வேண்டும்.

அகந்தை தன்னை வலியுறுத்த முடியாது.

இதை நாம் ஏற்க வேண்டும்.

நாம் தோற்றம்.

தோற்றத்தை நாம் என நாம் அறிகிறோம்.

பிரம்மாண்ட சலனமுள்ளது.

நாம் அதன் பகுதி.

நாம் பிரம்மத்தை அறிய வேண்டும்.

பிரம்மத்தை உள்ளே உணர வேண்டும்.

அதை நாம் உள்ளபடி நிறைவேற்ற வேண்டும்.

அதுவே உண்மையான வாழ்வு.

In our true selves we are one with the total movement.

We are not a minor or subordinate movement.

This is the other side of the account.

That knowledge should be expressed.

It should be expressed in our being.

Our thought, emotion and action also should express it.

It is necessary.

That is true living.

It is divine living.

Rather, they are its culmination

P. No. 73

Para 4

We must settle the account.

For that we must know this ALL.

This ALL is infinite and omnipotent energy.

A fresh complication arises.

Pure reason asserts one way.

Vedanta also asserts the same thing.

They assert a Movement.

We are subordinate to that Movement.

We are an aspect of that Movement.

That Movement is other than our movement.

It is of a timeless Stability, Sthanu.

That Stability is spaceless too.

It is immutable.

It is inexhaustible, unexpended.

It acts not.

உள்ளே நாம் உலகத்தோடொன்றியவர்கள்.

சிறியதாகவோ, பிரிந்து நின்றோ நாம் செயல்படவில்லை.

இதுவே மறுபுறம்.

இந்த ஞானம் வெளிப்பட வேண்டும்.

நம் ஜீவனில் இது வெளியாக வேண்டும்.

நம் எண்ணம், உணர்வு, செயல் இதை வெளிப்படுத்த வேண்டும்.

இது அவசியம்.

இது உண்மையான வாழ்வு.

இது தெய்வீகமான வாழ்வு.

அவை அவற்றின் முடிவு.

 

 

இந்தக் கணக்கைத் தீர்க்க வேண்டும்.

அதற்குப் பிரம்மத்தை - சிருஷ்டி, முழுமை - அறிய வேண்டும்.

பிரம்மம் அளவற்றது, எல்லாம் வல்லது, அது சக்தி.

புதிய சிக்கல் எழுகிறது.

பகுத்தறிவின் வழி ஒன்று.

வேதாந்தமும் அதையே கூறுகிறது.

சமுத்திரமான சலனம் உள்ளது என்கிறார்கள்.

நாம் அதற்குட்பட்டவர்கள்.

நாம் அதன் ஓர் அம்சம்.

நாம் அதனின்று வேறுபட்டவர்கள்.

அது ஸ்தாணு, காலத்தைக் கடந்த அசைவற்ற நிலை.

காலத்தைக் கடந்தது, இடத்தையும் கடந்தது.

அது சலனமற்றது.

முடிவற்றது, செலவையறியாதது.

அது செயல்படுவதில்லை.

It is not energy.

It contains all action.

It is pure existence.

We see this world-energy.

To us, there is no such stability.

We can declare so.

Eternal stability is an idea.

Pure existence, immutable is a fiction.

It is only an intellectual conception.

It starts from a false idea of the stable.

There is nothing that is stable.

All is movement.

The movement is practical.

Mind has to deal with it.

Stability is an artifice of the mind.

It is required by the mental consciousness.

This is true in the movement itself.

It is easy to show that.

There is nothing there that is stable.

Many appear to be stationary.

It is not true.

It is only a block of movement.

It is a formulation of energy at work.

Our consciousness seems to be still.

The formula affects our consciousness.

The earth seems to us to be still

அது சக்தியில்லை.

எல்லாச் செயல்களையும் தன்னுட் கொண்டது.

அது சத் எனப்படும்.

நாமியங்கும் உலக சக்தியை நாமறிவோம்.

நமக்கு ஸ்தாணு இல்லை.

நாம் அதைப் பறையறைவிக்கலாம்.

ஸ்தாணு என்பது எண்ணம்.

சலனமற்ற சத் என்பது கற்பனை.

அது மனம் புனைந்தது.

அசைவற்றது என்ற தவறான எண்ணத்திலிருந்து

எழுவது அது.

அசைவற்றது என்று ஒன்றில்லை.

அனைத்தும் அசைவாலானது.

சலனம் என்பது நிதர்சனமானது.

மனம் அதைச் சந்திக்க வேண்டும்.

அசைவற்றது என்பது மனம் புனைந்தது.

மனத்தின் ஜீவியத்திற்கு அக்கற்பனை அவசியம்.

சலனம் இவ்வுண்மையைக் கூறும்.

இதை விளக்குவது எளிது.

நிலையானது என்று ஒன்று எங்கும் எப்பொழுதும் இல்லை.

பல நிலைகளாகத் தோன்றுகின்றன.

அது உண்மையில்லை.

அது தடைப்பட்ட சலனம்.

அது சக்தி செயல்படும் விதம்.

நம் ஜீவியம் அசைவற்றிருப்பதாகத் தோன்றுகிறது.

செயல்முறை நம் ஜீவியத்தைப் பாதிக்கிறது.

பூமி நிலையாகத் தெரிகிறது.

But it is not.

A running train seems to be still.

The landscape rushes by.

It is not true.

Similarly it is not true that our consciousness is still.

Is it true that there is more?

Is there nothing that is moveless?

Does the immutable not underlie the movement?

Is existence only energy?

Or is it only action?

Is not energy an output of Existence?

Contd.

அது உண்மையில்லை.

ஓடும் ரயில் அசைவற்றுத் தெரிகிறது.

பூமி ஓடுவது தெரிகிறது.

அதுவும் உண்மையன்று.

அதேபோல் நம் ஜீவியம் அசைவற்றிருப்பதும் உண்மையன்று.

மேலும் ஏதேனும் உண்டா?

அசைவற்றதேயில்லையா?

அசைவுக்கு அடியில் அசைவற்றதில்லையா?

சத் என்பது வெறும் சக்தியா?

அது செயலா?

சக்தி சத்திலிருந்து வெளிப்படவில்லையா?

தொடரும்

ஸ்ரீ அரவிந்த சுடர்

சிருஷ்டியின் ஆனந்தம் (delight) வாழ்வில் இரு பிரிவுகளாகின்றது. வலி, ஆனந்தம், இரண்டையும் ஏற்றால்தான் அனுபவம் முழுமைப்படும். ஒன்றை விலக்கி மற்றதை முழுமையாக அனுபவிக்க முடியாது.

வலியைக் கடக்க ஆனந்தத்துடன் வலியையும் சேர்த்து ஏற்க வேண்டும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம் வாழ்வையும், பண்புகளையும் அன்னை நோக்கில் அளந்து பார்க்கவேண்டும். அன்னையை நோக்கிச் செல்ல, அது உதவும், பதிலாக அன்னையை நாம் நம் வாழ்வின் கோணத்தில் அளந்து பார்க்கிறோம். அதன் மூலம் மனிதனுக்குரிய அதிகபட்ச வளர்ச்சிக்கு மேல் நாம் உயர முடியாது.

உயர்ந்த நோக்கம் உயரப் பயன்படும்.

Comments

ஸ்ரீ அரவிந்தம் லைப்

ஸ்ரீ அரவிந்தம் லைப் டிவைன்

Page No.4, line no.10 - எண்ணத்திருந்து - எண்ணத்திலிருந்து

Page No.4, line no.18 -எüது. - எளிது.



book | by Dr. Radut