Skip to Content

கன்சல்டன்சி

நெம்பர் பூட்டு - Combination Lock

கம்பனி நிர்வாகத்தில் சட்டதிட்டமாக உள்ளதே எந்த நேரமும். ஏதோ ஒரு நேரம் இதுவரை காணாத ஒரு பிரச்சனை எழும். அதற்கு வழி தெரியாது. அது டெக்னாலஜி பிரச்சினையானால் உலகத்திற்கேயுள்ளது. Pollution போன்றது. நாம் மட்டும் என்ன செய்ய முடியும்? மார்க்கட் விலை சரிகிறது என்றால் அது யார் கையில் உள்ளது?

பொருளாதாரத்திலோ, மானேஜ்மெண்டிலோ இதுபோன்ற பிரச்சினைக்குத் தீர்வு இல்லை. மானேஜ்மெண்ட்டை,

  1. அன்னை கண்ணோட்டத்தில் பார்த்தால் தீர்வுண்டு. நாம் அன்னை பக்தர்கள். வியாபார பிரச்சினையைத் தீர்க்க எப்படி வாடிக்கைக்காரர்களை அன்னைக்குப் பிரார்த்தனை செய்யச் சொல்வது? சொன்னால் நடக்குமா?
  2. அன்னையின் தீர்வு என நாம் அறிவதை, அறிவுக்குப் பொருத்தமான விளக்கமாகக் கூற முடியும். அதுவே அன்னையின் சிறப்பு. அதை மானேஜ்மெண்டும் ஏற்கும்.

உதாரணமாக ஒரு மார்க்கட் சரிகிறது என்றவுடன் நமக்கு பீதி எழுகிறது. அன்னைமுறை நாம் நிதானமாக இருப்பது. அன்னையை அழைத்தால் நிதானமாக இருக்கலாம். வாடிக்கைக்காரர்களிடம் எப்படி இதைச் சொல்வது? அவர்களிடம்,

"உங்கள் சரக்குக்கு மார்க்கட் சரிவதை உங்களால் தடுக்கமுடியாதல்லவா? நீங்களே முதலாளி. பயந்தால் அனைவரும் பயப்படுவார்கள் என்னவாகும்?'' என்றால் "உள்ளதும் சீக்கிரம் போகும்'' என்று பதில் வரும். "அதனால் நிதானமாக இருப்பது நல்லதல்லவா?'' என்றால் ஏற்பார். அவர் நிதானம் மார்க்கட் நிலவரத்தை மாற்றும். இது பலமுறை நாமும், பலரும் கண்ட அனுபவம். 

அன்பர் ஜப்பான் போனார். Brief case கைப்பெட்டிக்கு நம்பர் போடும் பூட்டு combination lock. அதற்கொரு நம்பர் உண்டு. அதைப் போட்டால் திறக்கும். அவர் நம்பர் எழுதிய சீட்டை பத்திரமாக அப்பெட்டியிலேயே வைத்திருந்தார். அது அடுத்தவருடைய பெட்டி. ஜப்பான் விமான நிலையத்தில் பெட்டியைத் திறந்து மூட முயன்ற நேரம் நம்பர் சீட்டு பெட்டியுள்ளிருந்தது. கைத்தவறுதலாகப் பெட்டியின் மூடி விழுந்தது. தானே மேல் மூடி விழவே பூட்டிக் கொண்டது. பாஸ் போர்ட், பர்ஸ் உள்ளே இருக்கிறது. நம்பர் தெரியவில்லை. பெட்டியை உடைத்து எடுக்க வேண்டும். அன்னையைக் கூப்பிட்டார். மனம் நம்பரை நினைக்கிறது. எப்படித் திறக்கலாம் என பல யோசனைகள் தோன்றுகிறது. அன்னையை ஆழ்ந்து கூப்பிட முடியவில்லை. பெட்டியை வைத்துவிட்டு அன்னையைக் கூப்பிட்டால் வழி பிறக்கும் எனத் தெரியும். ஆனால் அந்த நேரம் மனம் தனக்குத் தெரிந்ததை நம்பவில்லை. ஏர்போர்ட் ஸ்டாப் வந்து உதவி செய்ய முன் வந்தார். அன்பர் பெட்டியைக் கொடுத்துவிட்டார். 999 நம்பரைப் போட்டுப் பார்த்தால் ஒரு நம்பர் திறக்கும். ஏர்போர்ட் ஸ்டாப் அதைச் செய்ய முனைந்தார்.

  • இப்பொழுது அன்பர் அன்னையைக் கூப்பிட்டார்.
  • பெட்டி திறந்து கொண்டது.

***********

Comments

para no.3, line no.3 -

para no.3, line no.3 - வாடிக்கைக் காரர்களிடம் - வாடிக்கைக்காரர்களிடம்



book | by Dr. Radut