Skip to Content

இறைவன் வரும் தருணம் 2000 AD

ஆண்டுதோறும் Nov. 14, நேரு பிறந்ததினத்தன்று அவர் நினைவு சொற்பொழிவு  நடைபெறும். இந்த ஆண்டு அச்சொற்பொழிவுக்குரிய கருத்துகள் எவை என சிந்தித்தேன். என்றும் இவை நாட்டிற்குப் பொருந்தும் என்றாலும், அதை வெளியிட உரிய நேரம் இது என்று நான் கருதுகிறேன்,

பொழுது விடிவது மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு ஆகிய நேரம் உலகில் அதிக சக்தி எழும் நேரம். ஜனவரி 1-ஆம் தேதி நூறாண்டும், அடுத்த ஆயிரமாண்டும் (millennium) பிறக்கும் தருணம். அதனால் உலகில் அபரிமிதமான சக்தி உலவும் நேரம். உலகுக்கு அது இறைவன் வரும் தருணமாகும்.

நாடு உலகப்பட்டியலில் 134ஆம் நிலையிலுள்ளது. 5 ஆண்டுகளில் இதை 50ஆம் நிலைக்கு கொண்டு வரமுடியும் என்ற கருத்தை இன்று நாட்டில் பிரபலமானவர்கள் கூறுகிறார்கள். அது உண்மை. இன்று நாம் பின்பற்றும் முறைகள் சர்க்கார் மக்கள் முன்னேற்றத்திற்காக உழைப்பது, வெளிநாட்டு உதவியை ஏற்பது, பாக்கிஸ்தானுடன் பிணக்கு, ஜனநாயக முறையின் மெதுவான போக்கை ஏற்பது, சுயநலம் பொதுவாழ்வில் பெரும்பலனடைவது,  விருதுகளளிப்பது, விழாக் கொண்டாடுவது ஆகியவை. இத்தனையையும் நேர் எதிராக மாற்றினால், நாட்டிற்கு வேண்டிய அத்தனை திட்டங்களுக்கும் நாமே பணத்தை உள்நாட்டில் உற்பத்திசெய்யும் முறைகளை ஏற்றால், அதற்குரிய மக்கள் செயல்படும் முறைகளை கைக்கொண்டால், 5 ஆண்டில் 134ஆம் நிலையிலிருந்து 50ஆம் நிலைக்கு வரும் என்பது திண்ணம். அதை நிறைவேற்றும் கருத்துகள்:-

  • நாடு 50ஆம் நிலையை அடைய தேவையான எல்லா திட்டங்களும் நம்மிடம் இருப்பதை ஏற்று, அதற்குரிய மூலதனத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.
  • வெளிநாட்டு பணஉதவியை ஏற்றால் நாடு பலஹீனமடைவதால் இனி அதை மறுக்க முடிவு செய்ய வேண்டும். அறவே மறுக்க வேண்டியது அவசியம்.
  • உள்நாட்டு மூலதனமும், உள்நாட்டு திட்டமும் நிறைவேற வேண்டி organisation  நிர்வாகத்தை அகில இந்திய அளவில் சர்க்கார் தலையீடின்றி ஏற்படுத்த வேண்டும்.
  • Must declare an administrative emergency for 5 years. அடுத்த 5 ஆண்டிற்கு நிர்வாகத்திற்கான அவசரச்சட்டத்தை பிரகடனப்படுத்த வேண்டும்
  • பாக்கிஸ்தான், பங்களாதேஷுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்து இருநாடுகளும் முன்னேற - ஒருநாடு ஆலையும், அடுத்தது கச்சாப்பொருளும் தர ஏற்பாடு 50 தொழில்களில் ஏற்படுத்த வேண்டும் - திட்டம் தீட்ட வேண்டும்.
  • அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேறும்வரை விருதுகள் தருவது நிறுத்தப்படவேண்டும்.

சுய ஆதரவு (self-reliance), அவசரச் சட்டம் (emergency) நிர்வாகத் திறமை (organisational efficiency) ஆகியவை நாட்டை உயர்த்தும். இறைவன் வரும் தருணம் இவற்றை நிறைவேற்றும்.

*******

Comments

 Line 18 - விருதுகளளிüபது  -

 Line 18 - விருதுகளளிüபது  - விருதுகளளிப்பது   -   motnir



book | by Dr. Radut