Skip to Content

02. ஏன் எனக்கு இந்தக் கஷ்டம்

ஏன் எனக்கு இந்தக் கஷ்டம்

இந்தக் கேள்வி எல்லோருக்கும் எப்பொழுதும் தவறாது எழும். மனிதன் தெரிந்ததைச் செய்ய மாட்டான். பழைய தவற்றைத் திரும்பச் செய்யாமலிருக்க மாட்டான். பலனுக்காக மட்டும் அன்னையை நாடுவான். பலனைப் பெறும்பொழுது அன்னையை மறப்பான்.

அன்னையை மறப்பதால் நினைவுபடுத்த கஷ்டம் வருகிறது.

இளைஞன் அன்னையை வழிபட ஆரம்பித்தான். நல்ல வேலையிலிருக்கிறான். தாயார் அன்னை படத்திற்கு ஆட்சேபணை தெரிவிக்கிறார். கம்பெனியில் 250 பேரைகுறைக்கிறார்கள். அதில் இவனும் ஒருவன். தாயாருக்குத் தெரியாமல் படத்தைப் பெட்டியில் மறைத்து வைத்தான். தினமும் தியான மையம் வந்தான்.

கம்பெனியில் வேறொரு டிபார்ட்மெண்ட் இவனை மட்டும் எடுத்துக் கொள்ள சம்மதித்தது. பிரார்த்தனையைத் தொடர்ந்தான். வேறு கம்பெனியில் இரண்டு மடங்கு சம்பளம் கிடைத்தது. தாயார் மனம் மாறினாள். “தினமும் மையம் போ. படத்தை வைத்துக் கொள்” என்றாள்.

  • பலனுக்காக வழிபாடு கடைசி கட்ட வழிபாடு.
  • பலனை மறந்து வழிபட மனிதனால் முடியவில்லை.
  • அன்னையை மறந்து பலனை மட்டும் நினைப்பவனுக்கு இந்தக் கஷ்டம் தவறாது வரும்.
  • மனிதன் மனிதனாகி, உயர்ந்த வழிபாட்டை ஏற்றால் வாழ்க்கையும் உயரும்.
  • மனம் சிறியதானால் கஷ்டம் வந்தபடியிருக்கும்.

*******



book | by Dr. Radut