Skip to Content

01. நல்லெண்ணம்

நல்லெண்ணம்

‘அபரிமிதமான செல்வம்’ என்ற கட்டுரையில் பல பெரிய கருத்துகள் கூறப்படுவதில் நல்லெண்ணம் குறிப்பானது. நல்லெண்ணத்தின் பவரை அனுபவித்த அன்பர் கூறுவது: “3 நாள் நான் என் நண்பருக்குத் தொடர்ந்து என் நல்லெண்ணத்தைக் கருத்தாக, செயலாக, பலனாக அனுப்பினேன்.” பெற்றவர் அன்பரிடம் “ஈடு வைத்த நகைகளை மீட்க முடியாத நிலையில் பெரும் உதவி பெற்று மீட்டேன். எனக்கு உதவியவர் வட்டி கேட்கவில்லை. ஆபீஸில் வேலையில் உயர்வு வந்தது. அவர் தகப்பனார் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று பாங்கில் வேலை செய்தவர். ஒரு பென்ஷன் பெறும் கட்டமுண்டு. இரண்டு பென்ஷன் பெறும் உரிமை சட்டமாயிற்று.”

நல்லெண்ணம் சக்தி வாய்ந்தது.
அது பிறர் வாழ்வை அளவு கடந்து உயர்த்தும்.
எலிசபெத் நல்லெண்ணம் ஜேனுக்குப் பலித்தது.
சார்லெட் நல்லெண்ணம் எலிசபெத்திற்குப் பலித்தது.
நாம் பணம் பலனாக வருவதை அறி@வாம்.
நல்லெண்ணம் தரும் பலனில் ஆன்மீகப் பலன் முதன்மையானது.
வாழ்க்கைப் பலனில் ஓர் நல்லவராவது பெரியது, அவர் அந்தஸ்து உயர்வது அடுத்தது. பணம் முடிவானது.

***********



book | by Dr. Radut