Skip to Content

09. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

கல்யாணி, சென்னை.

அன்னையின் அன்பர் கல்யாணி நன்றிகளுடன் எழுதிக் கொள்வது. அன்னையின் அருளால் என் வாழ்வில் நானும் என் உறவினர்களும் பெற்ற பெரும்பாக்கியங்கள் பற்பல. சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன். தனியார் பள்ளியில் ஆசிரியையாக 1500/- ரூபாய் பெற்று பணிபுரிந்து வந்தேன். அன்னையை அறிந்த ஒரு மாதத்திற்குள் TNPSC - IV Group-இல் select-ஆகி கும்பகோணம் Commercial Tax Office-இல் Junior Assistant-ஆக 2000-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர்ந்தேன். பின்பு இரு வருடங்களில் மனையும் வாங்கி உடனே வீடும் கட்டினோம். அதன்பின் அடுத்த வருடமே TRB Selection-இல் select-ஆகி Teacher Educator என்ற பணியில் சேர்ந்தேன். பின்பு ஒரு வருடத்தில் அரவிந்தன் என்ற ஒரு ஆண் குழந்தைக்கும் அன்னையின் அருளால் தாயானேன். இவைகள் அனைத்தும் அன்னையின் அருளால் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தது. எங்கள் குடும்பத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், இவைகள் அனைத்திற்கும் நாங்கள் அருகதை இல்லாதவர்கள். அன்னை தான் இவைகள் அனைத்தையும் எங்களுக்குக் கொடுத்தார்.

எனக்கு சித்தப்பாவின் மகன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தாய், தந்தை இருவருமே கிடையாது. அவருக்கு அன்னையின் அருளால் நல்ல இடத்தில் பெண் பார்த்து சிறப்பாக திருமணமும் செய்து வைத்தோம். நானும் என் கணவரும் மணவறையில் தாய்-தந்தையர் என்ற இடத்தில் இருந்து முடித்து வைத்தோம். இதில் உள்ள விசேஷம் என்னவென்றால், எங்கள் குடும்பத்தில் எங்களைவிட பல பெரியவர்கள், மூத்தவர்கள், வசதியானவர்கள், நெருக்கமான உறவினர்கள் உள்ளனர். இந்த நல்ல காரியத்தை நாங்கள் செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

பின்பு திருச்சியில் ஒரு மனை வாங்கினோம். எங்கள் மூலம் அன்னை அன்பர்கள், உறவினர்கள் என மொத்தம் ஐந்து பேர்களும் அவ்விடத்தில் மனை வாங்கினோம். அந்த இடத்தின் உரிமையாளர் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆகையால் அவர் மூலமே என் கணவருக்கும், என் அக்காவின் கணவருக்கும் நல்ல வேலையும் வாங்க முடிந்தது. இதனால் கஷ்டப்பட்ட என் அக்காவின் குடும்பமும் இப்பொழுது நல்ல நிலையில் உள்ளது. மேலும் என் கணவரின் தம்பிக்கும் அயல்நாட்டில் வேலை வாங்கியும் தந்தோம். அவரை வேலை இல்லாதவர் என்று அனைவரும் கூறி வந்தனர். அந்த அவப்பெயர் நீங்கி அவரும் அவர் இரண்டு குழந்தைகளும் தற்சமயம் நல்ல நிலையில் உள்ளனர். இவைகள் அனைத்தும் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் நடந்தது. இவ்வளவும் என்னால் செய்யப்படவில்லை. அன்னைதான் செய்தார் என்பதில் ஐயமே இல்லை.

மேலும் தற்சமயம் நான் M.A. ஆங்கிலமும் promotion வேண்டி படித்து வருகிறேன். என் கணவர் ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் செயலாளராக உள்ளார். அவரின் வருமானம் குறைவாக உள்ளது. அவர் 1985-லிருந்தே இந்த வேலையைச் செய்து வருகிறார். தற்போது அவரின் வயது 48 ஆகிறது. அவர் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையும் அன்னையிடம் கூறி வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு பிரார்த்தனை செய்து வருகிறேன். அன்னையின் அருளால் அதுவும் நிறைவேறும் சூழ்நிலையும் அமைந்துள்ளது. அவருக்கு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வளவு நன்மைகளையும் அன்னை மற்றும் பகவான் ஸ்ரீ அரவிந்தர் மட்டுமே எங்களுக்கும் எங்கள் உறவினர்களுக்கும் செய்துள்ளார்கள். இன்னமும் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

ஸ்ரீ அன்னைக்கும் பகவானுக்கும் நன்றிகள் ஆயிரம்.

*********

ஜீவிய மணி

நான்’ இருந்தால் நாம் உடனே நேர் எதிராக மாற வேண்டியது அவசியம்.

*******

 



book | by Dr. Radut