Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

ஓம் அறையை தங்க ஒளியால் நிரப்பியது.

அன்னை தன் மந்திரத்தை வெளியிடவில்லை.

Volume IV, Page 131

  • இந்தியாவைப் பற்றித் தெரியும்முன் அன்னை பாரிசில் ஒரு கூட்டத்திற்குப் போனார்.
  • பேச்சாளர் இந்தியர்.
  • அவரை விபரம் தெரிந்தவராக அன்னை நினைக்கவில்லை.
  • பேச்சின் முடிவில் ஓம் என்று உச்சரித்தார்.
  • அந்த ஹால் முழுவதும் அவ்வொலி தங்க நிறமாகப் பரவியது.
  • அது அன்னைக்கு மட்டும் தெரிந்தது.
  • அன்னை அதைப் பொருட்படுத்தவில்லை. நினைவில் அது அவருக்கு நிற்கவில்லை.
  • வேறு சில சமயங்களில் ஓம் உச்சரிக்கக் கேட்ட பொழுதும் தங்க ஒளி தெரிந்தது.
  • அதனால் அன்னை ஒலியில் ஒளி வெளிப்படும் என அறிந்தார்.
  • ஓம் என்ற மந்திரத்துள் ஆயிரக்கணக்கான வருஷங்களாக கோடிக்கணக்கானவர் ஒலித்த மந்திர சக்தியுள்ளது என்று கூறினார்.
  • Glory to Thee Lord என்று ஒரு பிரார்த்தனை எழுதினார்.
  • அன்னை எழுதிய ஏராளமான பிரார்த்தனைகளில் பகவான் 140-ஐ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
  • இப்பிரார்த்தனை அதனுள் ஒன்று.
  • Glory to Thee Lord என்பதுடன் அன்னையின் மந்திரமாக மனதில் எழுந்ததில் மேலும் சில சொற்களிருந்தன.
  • சமஸ்கிருதத்தில் அதை மொழி பெயர்த்தபொழுது அதன் பவர் குறையவில்லை.
  • என் மந்திரம் என அன்னை கூறுவதை அன்னை வெளியிடவில்லை.
  • அதில் இரகஸ்யமில்லை. அது பிறருக்குப் பயன்படாது என்றார்.
  • ஒரு குருவின் சித்தி(siddhi)யை அவர் மந்திரம் தாங்கி வரும்.
  • சிஷ்யனுக்கு அவனுடைய சொந்த மந்திரம் குரு தரும் மந்திரத்தைவிடச் சிறந்தது.
  • தனக்கே மந்திரம் உதயமாக அதற்குரிய நேரத்தில் அது உள்ளிருந்து எழ வேண்டும்.
  • பொதுவாக அபயக் குரல், ஆபத்தில் எழும்.
  • அது ஆபத்தை விலக்கினால், அது அவருக்கு ஆபத்தை விலக்கும் மந்திரமாகும்.
  • ஆர்வத்தால் எழுவது மந்திரம்
  • ஆர்வம் ஜீவனை நிரப்பி, மந்திரமாக வெளி வர வேண்டும்
  • 3 நாள் அழைப்பை ஒருவர் தொடர்ந்தால் 30 நாளுக்கு மந்திரம் எழும்.
  • மந்திரம் மனதில் எழுந்தால் அவர் ரிஷியாவார்.
  • அம்மந்திரம் அவருக்கு யோக சித்தி தரும்.
    யோகம், தவம், சமாதி ஆகியவை மந்திரத்திற்குட்பட்டவை.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

காலத்தை நாம் அறிவோம். கடந்ததை ஆழ்ந்து நினைக்கிறோம். எதிர்காலத்திற்கு யோசனை பிறக்கிறது. கடந்தது, நிகழ்காலம், எதிர்காலம் என்ற நிலைகள் காலத்திற்கு உட்பட்டவை. கடந்ததை மறந்து, எதிர்காலத்தை நினைக்காமல் இன்றுள்ள கடமையில் நம்மை மறந்து நாம் செயல்படும் நேரம் நாம் காலத்தைக் கடக்கிறோம்.

*******



book | by Dr. Radut